பகண்டை கூட்டுரோடு சப்-இன்ஸ்பெக்டர் ஓட்டப் பந்தயத்தில் மாவட்ட அளவில் முதலிடம்

மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் என அனைவருக்கும் 50 வகையான போட்டிகள் நடத்தப்பட்டது. நீளம் தாண்டுதல் போட்டியில் மூன்றாம் இடமும் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
சப்-இன்ஸ்பெக்டர் சூர்யா.
சப்-இன்ஸ்பெக்டர் சூர்யா.
Published on

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு முதல் அமைச்சர் கோப்பைக்காண விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொது பிரிவினர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் என அனைவருக்கும் 50 வகையான போட்டிகள் நடத்தப்பட்டது.

அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்ட அளவிலான போட்டியில் பகண்டை கூட்டு ரோடு போலீஸ் சப்.இன்ஸ்பெக்டர் சூர்யா கலந்து கொண்டார். இவர் 1500 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் முதலிடமும், 100 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் இரண்டாம் இடமும், குண்டு எறிதல் போட்டியில் மூன்றாம் இடமும், நீளம் தாண்டுதல் போட்டியில் மூன்றாம் இடமும் பெற்று வெற்றி பெற்றுள்ளார். வெற்றி பெற்ற பகண்டை கூட்டு ரோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சூர்யாவிற்கு போலீசார் மற்றும் பொதுமக்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com