சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற 3 பேர் கைது

சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த குளத்தூர் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை (வயது42), ரகு(38), முருகன்(29) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். போலீசார் அவா்களிடம் இருந்து 37 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற 3 பேர் கைது
Published on

கள்ளக்குறிச்சி:

சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் குளத்தூர் பகுதிகளில் தீவிர ரோந்துபணியில் இருந்தனர். அப்போது வெவ்வேறு இடத்தில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த குளத்தூர் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை (வயது42), ரகு(38), முருகன்(29) ஆகிய 3 பேரையும் கைது செய்த போலீசார் அவா்களிடம் இருந்து 37 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்

X

Maalai Malar
www.maalaimalar.com