என் மலர்
உள்ளூர் செய்திகள்

சின்னசேலம் அருகே தடைசெய்யப்பட்ட பனைமர கள் இறக்கி விற்றவர் கைது
- சமுத்திரத்தில் சட்டவிரோதமாக கள் இறக்கியவர் கைது செய்யப் பட்டுள்ளார்.
- விற்பனைக்காக வைத்தி ருந்த 5 லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள பெத்தா சமுத்திரத்தில் சட்டவிரோதமாக கள் இறக்கியவர் கைது செய்யப் பட்டுள்ளார். கீழ்குப்பம் போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையில் பெத்தாசமுத்திரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பெத்தாசமுத்திரம் பெரு மாள் கோவில் அருகே பனை மரத்தில் பானை கட்டி இருந்ததை பார்த்த னர் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். பானையின் உள் பகுதியில் சுண்ணாம்பு தடவப்பட்டு பதநீர் என்ற பெயரில் சட்ட விரோதமாக கள் இறக்கி விற்பனை செய்தது போலீசாருக்கு தெரியவந்தது.
பனை மரத்தில் கட்டப் பட்டிருந்த பானைகளை போலீசார் உடைத்தனர். இதையடுத்து பதநீர் என்ற பெயரில் கள் இறக்கி விற்பனை செய்த பெத்தா சமுத்திரம் கிராமத்தை சேர்ந்த பழனிவேல் (வயது 55) என்பவரை கைது செய்தனர். அவர் விற்பனைக்காக வைத்தி ருந்த 5 லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட்டது.






