என் மலர்
உள்ளூர் செய்திகள்

விவசாயியை தாக்கிய 2 பேர் கைது
- விவசாயிகொளஞ்சியின் மனைவி பொரப்பா. இவரது மாடு அதே பகுதியை சேர்ந்த செந்தில் (வயது 42) என்பவரின் வயலில் உள்ள கத்திரி செடியை மேய்ந்ததாக கூறப்படுகறிது..
- செந்திலும், முனிவாழை கிராமத்தை சேர்ந்த குமரேசன் (28) ஆகியோர் சேர்ந்து கொளஞ்சி யை திட்டி தாக்கினர்.
கள்ளக்குறிச்சி:
ரிஷிவந்தியத்தை அடுத்த வேடநத்தம் பகுதியில் வசித்து வருபவர் கொளஞ்சி. விவசாயி. அவரது மனைவி பொரப்பா. இவரது மாடு அதே பகுதியை சேர்ந்த செந்தில் (வயது 42) என்பவரின் வயலில் உள்ள கத்திரி செடியை மேய்ந்ததாக கூறப்படுகறிது. இதனால் செந்திலும், முனிவாழை கிராமத்தை சேர்ந்த குமரேசன் (28) ஆகியோர் சேர்ந்து கொளஞ்சி யை திட்டி தாக்கினர்
. இது குறித்து கொளஞ்சி யின் மனைவி பொரப்பா கொடுத்த புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்கு பதிவு செய்து செந்தில் மற்றும் குமரேசன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






