சின்னசேலம் அருகே கல்லூரி மாணவி மாயம்: தாய் போலீசில் புகார்

பாரதி தேவியாகுறிச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பட்டப் படிப்பு படித்து வருகிறார். பாரதி வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
சின்னசேலம் அருகே கல்லூரி மாணவி மாயம்:  தாய் போலீசில் புகார்
Published on

கள்ளக்குறிச்சி: 

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராய பாளையம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட எடுத்த வாய்நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் குமார் இவருக்கு பொன்மொழி என்ற மனைவியும் பாரதி (வயது 19) என்ற மகளும் உள்ளனர். பாரதி தேவியாகுறிச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பட்டப் படிப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று காலை கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற பாரதி வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் பாரதியை தேடினர். அவர் எங்கு தேடியும் கிடைக்காததால் கச்சிராயபாளையம் போலீஸ் நிலையத்தில் பாரதியின் தாயார் பொன்மொழி கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன பாரதியை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com