மனைவி கண்டித்ததால் கணவன் தற்கொலை,

இவரது கணவருக்கு சக்கரை வியாதியும் ரத்த கொதிப்பும் இருந்தது, இந்நிலையில் இவர் கடந்த ஒரு வாரமாக குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததால், அவரது மனைவி திட்டியதாக கூறப்படுகிறதுஇதனால், வயலுக்கு அடிக்கவைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்ததால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்,
மனைவி கண்டித்ததால் கணவன் தற்கொலை,
Published on

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டம் எலவடி கிராமத்தில் வசிக்கும் முருகன் (வயது47) விவசாயம் தொழில் செய்து வரும் இவருக்கு லட்சுமி (42) என்ற மனைவியும் அஜித்(24) அபிதா(22) என்ற மகனும் மகளும் உள்ளதாக கூறப்படுகிறது. அஜித் வெளிநாட்டில் வேலை செய்து வருவதாக தெரிகிறது. அபிதாவிற்கு திருமணம் ஆகி சென்றுவிட்டார் என கூறப்படுகிறது

. முருகனுக்கு சர்க்கரை வியாதியும் ரத்த கொதிப்பும் இருந்து வருவதாகவும் அதற்கு மருந்து சாப்பிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் முருகன் கடந்த ஒரு வாரமாக குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தவரை அவரது மனைவி திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் நேற்று மாலை வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்து விட்டதாக கூறப்படுகிறது. பின்னர் முருகனை சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வந்தார். இன்று அதிகாலை சிகிச்சை பலனளிக்காமல் முருகன் இறந்து போனார். இது குறித்து அவரது மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து சின்னசேலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com