என் மலர்
நீங்கள் தேடியது "ரோந்துப்பணி"
- போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.
- மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்தவரை நிறுத்தி விசாரணை நடத்தினர்.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் அருகே தேவபாண்டலம் கிராமத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயமணி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையிலான போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் படியாக மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்தவரை நிறுத்தி விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் பெருக்கஞ்செடி கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம்(வயது44) என்பதும், மோட்டார் சைக்கிளை திருடி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து ஆறுமுகத்தை கைது செய்து போலீசார், அவர் மீது வழக்கு பதிந்து அவரிடமிருந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
- போலீசார் ஆணைமடுவு கிராமத்தில் ரோந்துப்பணி மேற்கொண் டனர்.
- நந்தினி என்பவர் வீட்டில் சாராயத்தை பதுக்கி விற்பனை செய்து கொண்டிருந்தார்.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் அருகே வடபொன்பரப்பி சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் தலைமையிலான போலீ சார் ஆணைமடுவு கிராமத்தில் ரோந்துப்பணி மேற்கொண் டனர். அப்போது அதே ஊரை சேர்ந்த ஆனந்த் மனைவி நந்தினி என்பவர் வீட்டில் சாராயத்தை பதுக்கி விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை போலீசார் கைது செய்து அவர் மீது வழக்கு பதிந்து அவரிடம் இருந்து 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.