சங்கராபுரம் அருகே மோட்டார் சைக்கிளை திருடியவர் கைது

போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்தவரை நிறுத்தி விசாரணை நடத்தினர்.
சங்கராபுரம் அருகே மோட்டார் சைக்கிளை திருடியவர் கைது
Published on

கள்ளக்குறிச்சி:

சங்கராபுரம் அருகே தேவபாண்டலம் கிராமத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயமணி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையிலான போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் படியாக மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்தவரை நிறுத்தி விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் பெருக்கஞ்செடி கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம்(வயது44) என்பதும், மோட்டார் சைக்கிளை திருடி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து ஆறுமுகத்தை கைது செய்து போலீசார், அவர் மீது வழக்கு பதிந்து அவரிடமிருந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com