search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    54 செவிலியர் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்  மாவட்ட கலெக்டர் தகவல்
    X

    54 செவிலியர் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் மாவட்ட கலெக்டர் தகவல்

    • விண்ணப்பங்கள் வருகிற 25-ந் தேதி மாலை 5.45 மணிக்குள் வரவேற்கப்படுகிறது.
    • மாவட்ட கலெக்டர் அலுவலக இணையதளம் https://kallakurichi.nic.in என்ற முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பி கூறியிரு ப்பதாவது:-

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற சுகாதார நல வாழ்வு மையத்தில் காலியாக உள்ள 54 செவிலியர் பணியிடங்களை தேசிய நல வாழ்வு குழுமத்தின் மூலமாக ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட நலச்சங்கம் மூலமாக மாதம் 18 ஆயிரம் தொகுப்பு ஊதியத்தில் நியமனம் செய்திடும் வகையில் விண்ணப்ப ங்கள் வருகிற 25-ந் தேதி மாலை 5.45 மணிக்குள் வரவேற்கப்படுகிறது.

    மேலும் இப்பணியி டத்திற்கான அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படி வங்களை கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக இணையதளம் https://kallakurichi.nic.in என்ற முகவரியில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தகுந்த ஆவணங்களுடன் செயலாளர், துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள், மாவட்ட நல வாழ்வு சங்கம், துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அலுவலகம், பெருவங்கூர் ரோடு, கள்ளக்குறிச்சி-606 213 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் வழியாகவோ அனுப்பி வைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் குறிப்பிட்ட காலக்கெடுவிற்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×