சின்னசேலம் அருகே விபத்தில் பெயிண்டர் பலி

அமையாகரம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்னை நோக்கி வந்த அடையாளம் தெரியாத வாகனம் இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதியது.தூக்கி வீசப்பட்ட ராஜேந்திரனுக்கு தலையில் பலத்த அடிபட்டது.
சின்னசேலம் அருகே விபத்தில் பெயிண்டர் பலி
Published on

கள்ளக்குறிச்சி:

சின்னசேலம் அருகே உள்ள தென் பொன்பரப்பி கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 52). பெயிண்டர். இவருக்கு ஆகாஷ் என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர்.இவர் சின்னசேலத்திற்கு பெயிண்ட் அடிக்கும் கூலி வேலைக்கு தினமும் சென்று வருவார். இந்நிலையில் வழக்கம் போல் நேற்று காலை தென் பொன்பரப்பி கிராமத்தில் இருந்து சின்ன சேலத்திற்கு இரு சக்கர வாகனத்தில் ராஜேந்திரன் சென்றார்.அவர் அமையாகரம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் பொழுது பின்னால் சென்னை நோக்கி வந்த அடையாளம் தெரியாத வாகனம் இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராஜேந்திரனுக்கு தலையில் பலத்த அடிபட்டது.

பின்னர் அருகில் இருந்த வர்கள் ராஜேந்திரனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சின்ன சேலம் அரசு ஆஸ்பத்தி ரியில் சேர்க்கப் பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இது குறித்து ராஜேந்திர னின் மகன் ஆகாஷ் கொடுத்த புகாரின் அடிப்படையில் சின்னசேலம் போலீசார் வழக்கை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ராஜேந்திரன் உயிரிழந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com