என் மலர்
உள்ளூர் செய்திகள்

உளுந்தூர்பேட்டை அருகேவிஷம் குடித்து பெண் தற்கொலை
- வீட்டில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவசாய நிலத்துக்கு வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்து விட்டு மயக்கம் நிலையில் கிடந்தார்.
- அக்கம் பக்கத்தினர் பார்த்து அவரை உடனடியாக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சேர்த்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா திருநாவலூர் அடுத்த குவாகம் கூத்தாண்டவர் கோவில் அருகில் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் அரசன். விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இவர் சவுந்தர்யா என்பவரை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். அவருக்கு 3 குழந்தை இருந்து வந்தது. இந்த நிலையில் வீட்டில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கணவன் வேலைக்குச் சென்ற போது விவசாய நிலத்துக்கு வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்து விட்டு மயக்கம் நிலையில் கிடந்தார் அக்கம் பக்கத்தினர் பார்த்து அவரை உடனடியாக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சேர்த்தனர்.
அங்கு முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டி யம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சேர்த்த னர் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்ப ட்டது சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்த இந்த சம்பவம் குறித்து அரசன் கொடுத்த புகாரின் பேரில் திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்






