என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Yadakan"

    • தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசினை பெறுவதற்கு வீடு வீடாகச் சென்று டோக்கன் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
    • ஒரு நாளைக்கு 200 டோக்கன் விதம் இன்று முதல் வருகின்ற 8ம் தேதி வரை வழங்கப்பட உள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி ஒவ்வொரு ஆண்டும் அரசு சார்பில் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.நடப்பாண்டிலும் பொங்கல் பண்டிகையை மக்கள் சந்தோஷமாக கொண்டாடும் வகையில் அரசு சார்பில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ரூ.1000 ரொக்கம் முழு கரும்பு ஆகியவை அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என அரசு அறிவித்தது. தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசினை பெறுவதற்கு வீடு வீடாகச் சென்று டோக்கன் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

    அதே போல் சின்ன சேலத்திலும் வீடு வீடாகச் சென்று டோக்கன் வழங்கும் பணி ரேஷன் கடை விற்பனையாளர்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறார்கள். சின்னசேலத்தில் இலங்கை முகாம் உட்பட மொத்தம் 10 கடைகளில் 9000த்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் உள்ளன. அனைத்து அட்டை தாரர்களுக்கும் இன்று முதல் 8-ம் தேதி வரை டோக்கன் வழங்கப்படுகிறது. பொங்கல் பரிசினை பெறுவதற்கு ரேஷன் கடைகளில் ஒரே சமயத்தில் கூட்டம் கூடுவதை தவிர்க்க டோக்கன் மூலம் பொங்கல் பரிசுகள் விநியோகம் செய்யப்படுகிறது.

    ஒவ்வொரு ரேஷன் கடையிலும் ஒரு நாளைக்கு 200 டோக்கன் விதம் இன்று முதல் வருகின்ற 8ம் தேதி வரை வழங்கப்பட உள்ளது. டோக்கனில் தேதி நேரம் போன்றவை குறிப்பிட்டு மக்களுக்கு வழங்கப்படுகிறது அந்த டோக்கனில் குறிப்பிட்டுள்ள தேதியும், நேரத்தையும் பார்த்து மக்கள் ரேஷன் கடைக்கு சென்று பொருள்கள் வாங்கிக் கொள்ளலாம். பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஒரு கிலோ சர்க்கரை ஒரு கிலோ பச்சரிசி முழு கரும்பு ஒன்று போன்றவற்றை வழங்கப்படுகிறது. பத்தாம் தேதி முதல் 13-ந் தேதி வரை அதாவது நான்கு நாட்களுக்கு பொங்கல் பரிசு பொருட்களை வழங்கப்பட உள்ளது.

    ×