என் மலர்tooltip icon

    கள்ளக்குறிச்சி

    • பாண்டுரங்கன் நிலத்திற்கு செல்வதற்காக ஏரிக்கரையில் இறங்கு ம்போது எதிர்பாராத விதமாக மூதாட்டியை பாம்பு கடித்தது.
    • இது குறித்து கீழ்குப்பம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள உலகியநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில் .இவரது தாயார் முத்தம்மாள் (வயது 70) இவர்கள் விவசாய தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முத்தம்மாள் தனது மற்றொரு மகனான பாண்டுரங்கன் நிலத்திற்கு செல்வதற்காக ஏரிக்கரையில் இறங்கு ம்போது எதிர்பாராத விதமாக மூதாட்டியை பாம்பு கடித்தது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் மூதாட்டியை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு பொது மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி முத்தம்மாள் பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து செந்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் கீழ்குப்பம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ஷோரூமிற்கு மோட்டார் சைக்கிள் வாங்குவதற்கு சென்றார்.
    • சிகிச்சை அளித்தும் பலனின்றி வினீத்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை கீரனூர் காலனி பகுதியை சேர்ந்தவர் வினீத்குமார். இவர் இன்று மதியம் இவருடைய சித்தி கற்பகத்துடன் அதே பகுதி விருத்தாசலம் செல்லும் சாலையில் உள்ள பழைய மோட்டார் சைக்கிள் ஷோரூமிற்கு மோட்டார் சைக்கிள் வாங்குவதற்கு சென்றார். அப்போது ஷோரூமில் மோட்டார் சைக்கிளை எடுத்து சாலையில் நிறுத்தியபோது அந்த வழியாக வந்த அரசு பஸ் இவர்கள் மீது வேகமாக மோதியது.

    இந்த விபத்தில் சம்பவ இடத்திலே வினீத்குமாரின் சித்தி கற்பகம் உயிரிழந்தார். இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்து விபத்தில் படுகாயம் அடைந்த வினீத்குமாரை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலனின்றி வினீத்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்தில் உயிரிழந்த வினீத்குமார், அவரது சித்தி கற்பகம் ஆகியோரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 200-க்கும் மேற்பட்ட போலீசார் மையனூர், லா.கூடலூர், மாடாம்பூண்டி கூட்டு ரோடு வனப்பகுதி மற்றும் அதைச் சுற்றி உள்ள கிராமங்களில் டிரோன் கேமரா மூலம் ஆய்வு செய்தனர்.
    • கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விபத்து நடந்ததாக சிலர் வதந்திகளை பரப்பினர்.

    சங்கராபுரம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள வாணாபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த சத்தம் கேட்டது.

    இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பலர் அச்சமடைந்தனர். இந்நிலையில் சத்தம் கேட்பதற்கு முன்பு அப்பகுதியில் இரண்டு ராணுவ விமானங்கள் பறந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் விமானங்கள் வெடித்து சிதறி இருக்கலாம் என தகவல் காட்டு தீ போல் பரவியது. இதுபற்றி தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ், திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார், பகண்டை கூட்டுரோடு இன்ஸ்பெக்டர் பாலாஜி, வனத்துறை உயர் அதிகாரிகள், வருவாய்த் துறையினர், தீயணைப்பு துறை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆகியோர் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் மையனூர், லா.கூடலூர், மாடாம்பூண்டி கூட்டு ரோடு வனப்பகுதி மற்றும் அதைச் சுற்றி உள்ள கிராமங்களில் டிரோன் கேமரா மூலம் ஆய்வு செய்தனர்.

    ஆனால் எந்தவித தடயமும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் இரவு 8 மணி அளவில் சின்னசேலம், கள்ளக்குறிச்சி மற்றும் அதை சுற்றி உள்ள பகுதியில் இதேபோல் பலத்த சத்தம் கேட்டதாக தகவல்கள் வந்தது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்தனர்.

    இந்நிலையில், இது குறித்து இந்திய விமானப்படை விமான தளம் சூலூர் மற்றும் தஞ்சாவூர் பகுதிகளில் விசாரித்ததில், இது வழக்கமான விமானப்படை பயிற்சி நடைமுறை என்றும், நேற்று கள்ளக்குறிச்சி பகுதியில் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டது என்றும், உறுதி செய்யப்பட்டது.

    எனவே பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ள வேண்டாம் எனவும், வதந்திகள் ஏதும் பரப்ப வேண்டாம் எனவும் கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களுக்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு ஊட்டியில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தின் புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகளை தற்போது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விபத்து நடந்ததாக சிலர் வதந்திகளை பரப்பினர். எனவே இது குறித்து போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் கூறுகையில், வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம், வதந்திகள் பரப்புவோர் மீது சட்டபடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • செல்வம் தினமும் குடித்து விட்டு மனைவியும் பிள்ளை களையும் அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
    • செல்வம் தன் மனைவியை பார்ப்ப தற்காக விஜயபுரத்திற்கு வந்தார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் விஜயபுரத்தை சேர்ந்த மலர் (வயது 50). இவருடைய மகள் ராசாத்தி (30) இவரது கணவர் செல்வம் (45) ஆடுகள் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். செல்வத்துக்கு குடிப்பழக்கம் உள்ளது. இவர் தினமும் குடித்து விட்டு மனைவியும் பிள்ளை களையும் அடித்து துன்புறுத்தியதாக கூறப்படு கிறது. இதனால் மனம் உடைந்த ராசாத்தி சின்ன சேலம் விஜயபுரத்தில் உள்ள தனது தாயார் மலர் வீட்டில் தன் பிள்ளை களுடன் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் செல்வம் தன் மனைவியை பார்ப்ப தற்காக விஜயபுரத்திற்கு வந்தார்.பின்னர் மனைவி ராசாத்தியிடம் நகைகளை கேட்டார். இதனால் இரு வருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது கோபமடைந்த செல்வம் தனது மனைவி ராசாத்தி மற்றும் அவரது தாய் மலரையும் கட்டையால் தாக்கினார். இதில் மாமியார் மலரின் மண்டை உடைந்தது. இதுகுறித்து சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் ராசாத்தி புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வத்தை கைது செய்த னர்.

    • திருக்கோவிலூர் பகுதியில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக வீடியோ உள்ளூர் வாட்ஸ் அப் குழுக்களில் பரவியது.
    • அமைதியை குலைக்கும் விதமாக பொய்யான செய்திகளை பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே உள்ள மையனூர், மெய்யூர் பகுதியில் இன்று பகல் 12 மணிக்கு பயங்கர வெடி சப்தம் கேட்டதாக கிராம மக்கள் புகார் தெரிவித்தனர்.

    இதைதொடர்ந்து, 4 மணி நேரமாக சுற்றுவட்டாரப் பகுதியில் போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து, சம்பவ இடத்திற்கு மாவட்ட எஸ்.பி. மோகன்ராஜ் வருகை தந்து விசாரணை நடத்தினார். ட்ரோன் மூலமாகவும் போலீசார் தேடி வந்தனர்.

    மேலும், திருக்கோவிலூர் பகுதியில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக வீடியோ உள்ளூர் வாட்ஸ் அப் குழுக்களில் பரவியது. அந்த வீடியோ 2021ம் ஆண்டு ஊட்டியில் நடந்தது என்றும் அமைதியை குலைக்கும் விதமாக பொய்யான செய்திகளை பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

    • 2 பேர் ஒரு ஆட்டை திருடிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
    • மர்மந பர்கள் ஆட்டை சாலையில் விட்டுவிட்டு தப்பிவிட்டனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் மண்மலை கிராமத்தில் நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் செல்லம்பட்டு கச்சிராயப்பாளையம் சாலையில் மர்ம நம்பர்கள் 2 பேர் ஒரு ஆட்டை திருடிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்றனர். இதனைப் பார்த்த ஒரு சிலர் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை நிறுத்தினர். நீங்கள் யார், இந்த ஆடு யாருடையாது என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளிக்காத மர்மநபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பித்தனர். அவர்களை பொதுமக்கள் விரட்டி சென்றனர். மோட்டார் சைக்கிளில் சென்ற மர்மந பர்கள் இதனை பார்த்து ஆட்டை சாலையில் விட்டுவிட்டு தப்பிவிட்டனர். மண்மலை கிராமத்தில் நள்ளிரவில் வரும் மர்மநபர்கள் மோட்டார் சைக்கிள் திருட்டு, கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு ேபான்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    • நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதம் அடைந்தது.
    • விவசாயிகள் ஆக்கிரமித்து ள்ளதாகவும் இதனால் மழை நீர் வெளியேறாமல் விவசாய நிலங்களில் தேங்கி நிற்பதால் நெற்பயிர்கள் சேதமடைந்தன

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே நாகலூர் கிராமத்தில் சுமார் 200-ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பளவில் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதம் அடைந்தது. இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட ஊராட்சி குழு சேர்மன் புவனேஸ்வரி பெருமாள் தலைமையில் ஒன்றிய குழு சேர்மன் தாமோதரன், ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, நெடுஞ்செழியன் ஆகியோர் சேதமடைந்த நெற்பயிர்களை நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

    அப்போது பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் பயிர் செய்யப்பட்டுள்ள பரப்பளவு, நெல் ரகம் மற்றும் சேத விபரம் குறித்து புவனேஸ்வரி பெருமாள் கேட்டறிந்தார். அப்போது ஏரியிலிருந்து நீர் வெளியேறும் வடிகால் வாய்க்காலை ஒரு சில விவசாயிகள் ஆக்கிரமித்து ள்ளதாகவும் இதனால் மழை நீர் வெளியேறாமல் விவசாய நிலங்களில் தேங்கி நிற்பதால் நெற்பயிர்கள் சேதமடைந்தன எனவும் விவசாயிகள் கூறினர்.

    சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று வடிகால் வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஊராட்சி குழு சேர்மன் விவசாயி களிடம் கூறினார். அப்போது மாவட்ட பிரதிநிதி மடம் பெருமாள் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் பலரும் உடன் இருந்தனர்.

    • தனது மோட்டார் சைக்கிளில் மலைக்கோட்டாலம் சென்றார்.
    • எதிரேவந்த டிராக்டர் இவர் மீது மோதியது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே ஆத்து மாமாந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் மகன் விஜயன் (வயது 27), இவர் நேற்று சொந்த வேலையாக தனது மோட்டார் சைக்கிளில் மலைக்கோட்டாலம் சென்றார். பின்னர் மலைக்கோட்ட லத்திலிருந்து தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார். அப்போது மலைக்கோட்டாலம் அருகே மோட்டார் சைக்கிள் வந்தபோது எதிரேவந்த டிராக்டர் இவர் மீது மோதியது.

    இதில் சம்பவ இடத்திலேயே விஜயன் இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த வரஞ்சரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விஜயன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • மக்கள் தொடர்புத் துறை சார்பில் புகைப்பட தொகுப்புக் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
    • தமிழக அரசின் சாதனைகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்து பதாதைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் பல்வேறு துறைகளில் எண்ணற்ற அரசு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். இந்நிலையில் அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை பொதுமக்கள் அறியும் வண்ணம் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் புகைப்பட தொகுப்புக் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியம் அருகே தமிழக அரசின் சாதனைகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்து பதாதைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள அரசின் திட்டங்கள் குறித்த தொகுப்பும், அமைச்சர் கள், மாவட்ட கலெக்டர் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்ற முக்கிய நிகழ்வுகள், அரசின் நலத்திட்ட உதவிகள், தமிழ்நாடு முதலமைச்சர் சிறப்பு திட்டங்கள் உள்ளிட்ட புகைப்பட தொகுப்புகள் ஆகியவைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்பட கண்காட்சியை 200 -க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏளாளமானோர் ஆர்வமுடன் பார்வையிட்டு வருகின்றனர்.

    • மவுன ஊர்வலம் மற்றும் தனியார் மண்டபத்தில் கருத்தரங்கமும் நடைபெற இருந்தது.
    • ஒன்றிய பார்வையாளர் செந்தில் ஆகியோர் முன்னிலையில் ஊர்வலம் செல்ல முயன்றனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அம்பேத்கர் சிலை அருகே மாவட்ட பா.ஜ.க. சார்பில் ஆகஸ்டு 14 தேச பிரிவின் சோக வரலாறு தின மவுன ஊர்வலம் மற்றும் தனியார் மண்டபத்தில் கருத்தரங்கமும் நடைபெற இருந்தது. இதற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் பா.ஜ.க.வினர் மாவட்ட தலைவர் அருள் தலைமையில், ஒன்றிய தலைவர்கள் ராமச்சந்திரன், வேல்முருகன், மாவட்ட செயலாளர் பிரகாஷ், மாவட்ட பொதுச்செயலாளர்கள் வக்கீல்ஜெய்துரை, ராஜேஷ், ஒன்றியபொது செயலாளர் கோவிந்தன், முத்தையன், ஒன்றிய பார்வையாளர் செந்தில் ஆகியோர் முன்னிலையில் ஊர்வலம் செல்ல முயன்றனர்.

    இதுபற்றி தகவல் அறிந்த தும் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கர், திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மனோஜ்குமார், சங்கராபுரம் இன்ஸ்பெக்டர் பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி உள்ளிட்ட காவலர்கள் விரைந்து வந்து, ஊர்வலம் செல்ல முயன்ற பா.ஜ.க.வினர் 53 பேரை கைது செய்து, தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

    • அங்கன்வாடி மையங்கள் மற்றும் குழந்தைகள் நலசேவைகள் முக்கியபங்கு வகிக்கின்றன.
    • குழந்தைக்கும் ஆரோக்கியமான புகலிடங்களாகச் செயல்படுகின்றன.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட் டத்தில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்களும் ஆய்வு செய்யப்படும் என மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ள தாவது:-

    நமது சமுதாயத்தில் மிகவும் போற்றிப் பாது காக்கக் கூடிய குழந்தை களின் நலனைஉறுதி செய்வதில் அங்கன்வாடி மையங்கள் மற்றும் குழந்தைகள் நலசேவைகள் முக்கியபங்கு வகிக்கின்றன. இந்த மையங்கள் மிகுந்த செயல்திறனுடன் செயல் படுவதையும், மையங்களின் பராமரிப்பில் வளர்ப்புச் சூழலை வழங்கு வதையும் உறுதி செய்வது என்பதுஅரசினுடைய முக்கிய கடமையாகும். இந்த மையங்கள் அனைத்தும் குழந்தைகளுக்கு போதுமான பாதுகாப்பு மற்றும் குழந்தைக்கும் ஆரோக்கி யமான புகலிடங்களாகச் செயல்படுகின்றன.

    எனவே, அங்கன்வாடி மையங்கள் ஆய்வு செய்யப்பட உள்ளது. இந்த ஆய்வின்போது, அங்கன்வாடி மைய கட்டடத்தின் நிலை, கழிப்பறை வசதி மற்றும் தூய்மை, சுத்தமான குடிநீர் விநியோகம், சமையலறை கூடம், அங்கன்வாடி மையம்மற்றும் சுற்றுச்சுவர் ஓவியங்கள், அங்கன்வாடி மையத்தில் வழங்கப்படும் உணவு, பராமரிக்கப்படும் பதிவேடுகள், குழந்தை களுக்கு வழங்கப்படும் கல்வி மற்றும் விளை யாட்டு பயிற்சிகள், அங்கன்வாடி யில் உள்ள கருவிகளின் நிலை, ஊட்டச்சத்து குறை பாடுள்ள குழந்தைகளுக்கு வழங்கப்படும் கூடுதல் உணவுகள், உணவுப் பொருட்களின் இருப்பு, கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு வழங்கப்படும் சத்துமாவு உள்ளிட்ட அனைத்தும் ஆய்வு செய்யப்பட உள்ளது.

    மேலும், குழந்தைகளின் ஊட்டச்சத்து தேவைகளை நிவர்த்தி செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படு வதை உறுதி செய்திட தாய்மார்க ளின் கருத்துகளை கேட்டுதெரிந்து கொள்ள வேண்டும். உள்ளூர் பிரதிநிதிகள் அங்கன்வாடி மையங்களின்தேவைகளை அரசிற்கு தெரிவிப்பதை உறுதி செய்து, அதன்மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அங்கன்வாடி மையங்கள் மூலம் வழங்கும் சேவைகள் மற்றும் அரசு நலத்திட்டங்கள் ஆகிய வற்றை சம்பந்தப்பட்ட உயர் அலுவலர்கள் சிறப்பு கவனம் செலுத்தி அவ்வப்போது ஆய்வு நடவடிவக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நடராஜமூர்த்தி புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
    • சங்கராபுரம் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:  

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் முதல் பாலமேட்டில் உள்ள ஸ்ரீ காமாட்சி சமேத ஏகாம்பரேஸ்வரர் சிவாலயத்தில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. முன்னதாக சிவபெருமானுக்கு பால், தயிர், வெண்ணெய், நெய், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்தனர். பின்னர் நடராஜமூர்த்தி புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    இதில் சங்கராபுரம் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் அரியலூர், அத்தியூர், பெரியகொள்ளியூர், இளையனார் குப்பம், எடுத்துனுர், வானபுரம், அவிரியூர், ரிஷிவந்தியம், தொழுவந்தாங்கள் உள்ளிட்ட சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

    ×