search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்கராபுரம் பகுதிகளில் சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
    X

    சங்கராபுரம் பகுதிகளில் சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

    சங்கராபுரம் பகுதிகளில் சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நடராஜமூர்த்தி புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
    • சங்கராபுரம் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் முதல் பாலமேட்டில் உள்ள ஸ்ரீ காமாட்சி சமேத ஏகாம்பரேஸ்வரர் சிவாலயத்தில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. முன்னதாக சிவபெருமானுக்கு பால், தயிர், வெண்ணெய், நெய், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்தனர். பின்னர் நடராஜமூர்த்தி புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    இதில் சங்கராபுரம் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் அரியலூர், அத்தியூர், பெரியகொள்ளியூர், இளையனார் குப்பம், எடுத்துனுர், வானபுரம், அவிரியூர், ரிஷிவந்தியம், தொழுவந்தாங்கள் உள்ளிட்ட சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

    Next Story
    ×