கச்சிராயப்பாளையம் அருகே மோட்டார் சைக்கிளில் ஆடு திருடிய மர்ம நபர்கள்

2 பேர் ஒரு ஆட்டை திருடிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்றனர். மர்மந பர்கள் ஆட்டை சாலையில் விட்டுவிட்டு தப்பிவிட்டனர்.
கச்சிராயப்பாளையம் அருகே மோட்டார் சைக்கிளில் ஆடு திருடிய மர்ம நபர்கள்
Published on

கள்ளக்குறிச்சி: 

கள்ளக்குறிச்சி மாவட்டம் மண்மலை கிராமத்தில் நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் செல்லம்பட்டு கச்சிராயப்பாளையம் சாலையில் மர்ம நம்பர்கள் 2 பேர் ஒரு ஆட்டை திருடிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்றனர். இதனைப் பார்த்த ஒரு சிலர் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை நிறுத்தினர். நீங்கள் யார், இந்த ஆடு யாருடையாது என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளிக்காத மர்மநபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பித்தனர். அவர்களை பொதுமக்கள் விரட்டி சென்றனர். மோட்டார் சைக்கிளில் சென்ற மர்மந பர்கள் இதனை பார்த்து ஆட்டை சாலையில் விட்டுவிட்டு தப்பிவிட்டனர். மண்மலை கிராமத்தில் நள்ளிரவில் வரும் மர்மநபர்கள் மோட்டார் சைக்கிள் திருட்டு, கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு ேபான்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

X

Maalai Malar
www.maalaimalar.com