search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தியாகதுருகத்தில்  தமிழக அரசின் சாதனைகள் குறித்த புகைப்பட கண்காட்சிபொதுமக்கள் பார்வையிட்டனர்
    X

    புகைப்பட கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிட்ட காட்சி.

    தியாகதுருகத்தில் தமிழக அரசின் சாதனைகள் குறித்த புகைப்பட கண்காட்சிபொதுமக்கள் பார்வையிட்டனர்

    • மக்கள் தொடர்புத் துறை சார்பில் புகைப்பட தொகுப்புக் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
    • தமிழக அரசின் சாதனைகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்து பதாதைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் பல்வேறு துறைகளில் எண்ணற்ற அரசு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். இந்நிலையில் அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை பொதுமக்கள் அறியும் வண்ணம் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் புகைப்பட தொகுப்புக் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியம் அருகே தமிழக அரசின் சாதனைகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்து பதாதைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள அரசின் திட்டங்கள் குறித்த தொகுப்பும், அமைச்சர் கள், மாவட்ட கலெக்டர் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்ற முக்கிய நிகழ்வுகள், அரசின் நலத்திட்ட உதவிகள், தமிழ்நாடு முதலமைச்சர் சிறப்பு திட்டங்கள் உள்ளிட்ட புகைப்பட தொகுப்புகள் ஆகியவைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்பட கண்காட்சியை 200 -க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏளாளமானோர் ஆர்வமுடன் பார்வையிட்டு வருகின்றனர்.

    Next Story
    ×