என் மலர்tooltip icon

    கள்ளக்குறிச்சி

    • சங்கராபும் அருகே சாராயம் விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மூரார்பாளையம் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 42) என்பவர் தனது வீட்டின் பின்புறம் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தார். இதைபார்த்த போலீசார், மணிகண்டனை கைது செய்து அவரிடமிருந்த 55 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். மேலும் ஊராங்காணி ஏரிக்கரை அருகே சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த குரும்பலூர் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் (34), நத்தகுளம் அருகில் சாராயம் விற்ற அரசம்பட்டு கிராமத்தை சேர்ந்த பிச்சன் (65) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

    • கள்ளக்குறிச்சி அருகே மாற்றுத்திறனாளி சாவில் சந்தேகம் என உறவினர்கள் மனு கொடுத்துள்ளனர்.
    • பஸ் நிறுத்தத்தில் இறக்கிவிடாமல் அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் இறக்கிவிட்டுள்ளனர்

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சிஅருகே மூங்கில்துறைப்பட்டு அருகே பொருவளூர் கிராமத்தை சேர்ந்தவர் மலர் (36) மாற்றுத்திறனாளி. இவர் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி சென்னை செங்குன்றம் பகுதியை சேர்ந்த அவரது சகோதரி ஜெயந்தி மற்றும் உறவினர்கள் கள்ளக்குறிச்சியில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபுவிடம் புகார் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:- எனது தங்கை மலர் கடந்த 27- ந் தேதி பெருமனம் கிராமத்திற்கு துக்கம் விசாரிக்க தனியார் மினிபேருந்தில் பயணம் சென்றார். அப்போது அவரை மணலூர்பேட்டை பஸ் நிறுத்தத்தில் இறக்கிவிடாமல் அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் இறக்கிவிட்டுள்ளனர்.

    எனது அக்கா மலருக்கு கண் பார்வை குறைபாடு உள்ளது. இதனால் எனது அக்கா மலர் இரவு முழுவதும் பெட்ரோல் பங்கிலேயே இருந்துள்ளார். அந்த மினி பேருந்தும் அங்கேயே நிறுத்தப்பட்டு இருந்தது. மறுநாள் 28- ந் தேதி பெட்ரோல் பங்க் வேலையாட்கள் மூலம் எனது அக்கா மலர் அங்கு இருப்பது குறித்த தகவல் வந்தது. பின்னர்மலரை திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். தொடர்ந்து புதுவை ஜிப்மர் மருத்து வமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் அவரை வீட்டுக்கு அழைத்து வந்த போது கடந்த 29- ந் தேதி இறந்துவிட்டார். எனது அக்கா மலர் இறப்பில் சந்தேகம் உள்ளது. எனவே அக்கா மலர் உடலை தோண்டி எடுத்து உடல் கூறாய்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கண்டவாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

    சங்கராபுரம் அருகே ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது.

    சங்கராபுரம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த மாடுர் கிராமத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை கீழ் இயங்கும் அட்மா திட்டம் மூலம் வயல் பயிர்களில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது. பயிற்ச்சிக்கு வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) கள்ளக்குறிச்சி விஜயலட்சுமி தலைமை தாங்கி வேளாண்மை மானியங்கள் குறித்து எடுத்து கூறினார்.

    வேளாண்மை உதவி அலுவலர் பழனிச்சாமி விவசாயிகளை வரவேற்றார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் சைமன் வயல் பயிர்களில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்தும் மண்மாதிரி எடுத்தலின் அவசியம் குறித்தும் எடுத்துரைத்தார்.முடிவில் உதவி தொழில்நுட்ப மேலாளர் சக்திவேல் நன்றி கூறினார்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை வேளாண்மை எதவி அலுவலர் அமிர்தலிங்கம் மேற்கொண்டார்.

    • ரிஷிவந்தியத்தை: தாலுகாவாக அறிவிக்க கோரி பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
    • அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியை ரிஷிவந்தியத்தில் அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் ரிஷிவந்தியத்தை தாலுகாவாக அறிவிக்கவும், அரசு கல்லுாரி அமைக்கக் கோரியும் பா.ம.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ரிஷிவந்தியத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட செயலாளர் டாக்டர் ராஜா தலைமை தாங்கினார்.

    முன்னாள் மாவட்ட செயலாளர் அமுதமொழி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக, மயிலம் தொகுதி எம்.எல்.ஏ., சிவக்குமார், விழுப்புரம் மத்திய மாவட்ட செய லாளர் பாலசக்தி ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில், ரிஷிவந்தியத்தை தலைமையிடமாகக் கொண்டுதனி தாலுகாவாக அறிவிக்க வேண்டும். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியை ரிஷிவந்தியத்தில் அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

    • கள்ளக்குறிச்சியில் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் நிறைவேற்றப்பட்டது.
    • அனைத்துத் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவ ட்ட கலெக்டர் அலு வலக கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா கோருதல், விதவை உதவித்தொகை, சாலை வசதி, ஆதரவற்றோர் உதவித்தொகை, பாட்டா மாறுதல், தொழில் தொடங்க கடனுதவி கோருதல், ஏரி, குளம் தூர் வாருதல், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம், வேளாண் உழவர் நலத்துறை சார்ந்த திட்டம் மற்றும் காவல் துறை தொடர்பானமனுக்கள் உட்பட பல்வேறு கோரி க்கைகள் அடங்கிய 407மனுக்களை பெற்று க்கொண்ட மாவட்ட வருவாய் அலு வலர் மனுக்கள் தொடர்பான விவரங்களை சம்பந்த ப்பட்ட அலுவல ர்களிடம் கேட்ட றிந்து, மனுக்கள் மீது உடனடி தீர்வு காண வேண்டும் என அலுவ லர்களுக்கு அறிவுறு த்தினார்.

    தொடர்ந்து, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) சார்பில், தமிழ்நாடு தூய்மை பணி புரிவோர் நலவா ரியத்தின் நலவாரிய அட்டையினை தூய்மை பணிபுரியும் பணியா ளர்களுக்கு வழங்க ப்பட்டது.முன்னதாக, மாவட்ட வருவாய் அலுவலர் மாவட்ட மாற்று த்திறனாளிக ள்நலத்துறையின் சார்பில் மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்தி றனாளிக்கு ரூ.7,000 மதிப்பீட்டிலான சிறப்பு நாற்காலியும், பார்வை குறைபாடுடைய மாற்று த்திறனாளி ஒருவருக்கு ரூ.12,000 மதிப்பீட்டிலான எழுத்தை பெரிதாக்கி காட்டும் உருப்பெருக்கியும், பார்வையற்ற மற்றும் காதுகேளா தோர்க ளுக்கான ரூ.12,000 மதிப்பீட்டிலான பிர த்யேக செயலியுடன் கூடிய ஆன்ட்ராய்டு அலைபேசி 3 மாற்று த்திறனாளிகளுக்கும் வழ ங்கினார்.

    அப்போது மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், மாவட்ட கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) ஹஜிதா பேகம், உதவி ஆணையர் (கலால்) ராஜவேல், வேளாண்மை இணை இயக்குநர் வேல்விழி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) விஜயரா கவன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஷெர்லி ஏஞ்சலா, அனைத்துத் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்: கலெக்டர் ஸ்ரீதர் தகவல் வெளியிட்டார்.
    • விண்ணப்பிப்பதற்கான கடைசி வருகிற 6-ந் தேதி மாலை 5 மணி. குறித்த நேரத்திற்குப் பிறகு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- பள்ளிக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசுபள்ளி களில் 2022-23-ம் கல்வி யாண்டில் 1.6.2022 நில வரப்படி காலியாகவுள்ள இடைநிலை, பட்டதாரி, முது கலை ஆசிரியர் பணியி டங் களில் தற்காலிக ஆசிரியர் நியமனம் மேற்–கொள்ளப்பட உள்ளது. தகுதியான விண்ணப்ப தாரர்கள் எழுத்து மூலமான விண்ணப்பங்களை நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் வாயிலாகவோ உரிய கல்வித் தகுதிச்சான்று களுடன் தொடர்புடைய மாவட்டக்கல்வி அலுவலரி டம் சமர்ப்பிக்க வேண்டும்.

    இது தொடர்பான காலிப்பணியிட விவரங்கள் முதன்மைக்கல்வி, மாவட்டக் கல்வி, வட்டாரக் கல்வி அலுவலகங்களின் அறிவிப்புப்பலகையில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பிப்பதற்கான கடைசி வருகிற 6-ந் தேதி மாலை 5 மணி. குறித்த நேரத்திற்குப் பிறகு அனுப் பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. தகவல் பலகையில் வெளி யிடப்படும் காலிப் பணியிட விவரங்கள் மாறு தலுக்குட்பட்டது. மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பிப்பவர்கள் கள்ளக்குறிச்சி கல்வி மாவட்டத்திற்கு deokki2018@gmail.com, திருக்கோவிலூர் கல்வி மாவட்டத்திற்கு deotkr2018@gmail.com, உளுந்தூர்பேட்டை கல்வி மாவட்டத்திற்கு deoupt65@gmail.com ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப் பங்கள் வந்துசேர வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா நடைபெற இருக்கிறது.
    • இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ரிஷிவந்தியம் அருகே ரிஷிவந்தியத்தில் பிரசித்திபெற்ற முத்தாம் பிகை சமேத அர்த்த நாரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. மிகவும் பழமைவாய்ந்த இக்கோவி லில் ஆண்டுதோறும் ஆனி மாதம் பிரம்மோற்சவம் 11 நாட்கள் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக் கான பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக விக்னேஸ்வரர் பூஜை, வாஸ்து சாந்தி உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தது. முத்தாம்பிகை சமேத அர்த்த நாரீஸ்வரருக்கும், கோவில் வளாகத்தில் உள்ள கொடிமரத்துக்கும் சிறப்பு பூஜை செய்து, பிரம்மோற்சவ கொடி ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தேரோட்டம் விழாவை யொட்டி தினமும் இரவு வெவ்வேறு வாகனங்களில் பஞ்ச மூர்த்திகள் வீதிஉலா நடைபெற உள்ளது. விழா வின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 11-ந் தேதி நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடு களை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் ரிஷிவந்தியம் பகுதி பொதுமக்கள் செய்து வருகிறார்கள்.

    • சங்கராபுரம் அருகே நிலத்தகராறில் மோதல் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
    • கோவிந்தனும், இவரது சகோதரர் ஜெயமுருகனும் மாயவனை தாக்கி, அவரது செல்போனை உடைத்தும், கொலை மிரட்டல் விடுத்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே புதுப்பாலப்பட்டு காட்டுக் கொட்டகையை சேர்ந்தவர் மாயவன் (வயது44). இவருக்கும் பாலப்பட்டு கிராமத்தை சேர்ந்த கோவிந்தன்(46) என்பருக்கும் இடையே நில தகராறு இருந்து வந்தது. சம்பவத்தன்று இந்த பிரச்சினை தொடர்பான விசாரணைக்கு சங்கராபுரம் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். அப்போது கோவிந்தனும், இவரது சகோதரர் ஜெயமுருகனும் மாயவனை தாக்கி, அவரது செல்போனை உடைத்தும், கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் கோவிந்தன், ஜெயமுரு–கன் ஆகியோர் மீது சங்க–ராபுரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் உலக நாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கந்து வட்டியால் பா.ஜ.க.பிரமுகர் தற்கொலை டைரி- செல்போன் உரையாடல் குறித்து தனிப்படை போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • தற்கொலை செய்து கொள்வதற்கான காரணங்கள் குறித்து உருக்கமான வீடியோ மற்றும் ஆடியோ பதிவுகளை செய்துவிட்டு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த செல்வம் மகன் திருவேங்கடம் என்கிற தினேஷ் (வயது 21) இவர் பா.ஜ.க. நகர இளைஞரணி துணைத் தலைவராக இருந்தார். மேலும் கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தினேஷ் நேற்று முன்தினம் கள்ளக்குறிச்சி அருகே தென்கீரனூர் ஏரிக்கரை பகுதியில் உள்ள ஒரு விவசாய கிணற்றின் அருகே விஷம் குடித்து விட்டு செல்போனில் தற்கொலை செய்து கொள்வதற்கான காரணங்கள் குறித்து உருக்கமான வீடியோ மற்றும் ஆடியோ பதிவுகளை செய்துவிட்டு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அந்த வீடியோவில் பொரசக்குறிச்சியை சேர்ந்த ஒருவரிடம் ரூபாய் 10,000 கடன் வாங்கியதாகவும் அவருக்கு இதுவரை கூகுள் பே மூலம் ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் போட்டுள்ளதாகவும் அது மட்டும் இல்லாமல் மொபைல் பேங்கிங் மூலம் 10 ஆயிரம் அனுப்பி உள்ளேன் என கூறியுள்ளார்.

    தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிந்து நேற்று உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதுகுறித்து அவரது தாய் சித்ரா கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார், அதில் எனது மகன் இதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் கடந்த 5 வருடமாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று கடன் பிரச்சனையால் ஆடியோ வெளியிட்டு விட்டு சம்பவத்தன்று கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். எனது மகன் தற்கொலைக்கு காரணமாக இருந்த கள்ளக்குறிச்சி அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மற்றும் கள்ளக்குறிச்சி அருகே பொரசக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து மகன் வேல்முருகன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளார். அதன்படி வழக்கு பதிவு செய்த போலீசார் கள்ளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சத்தியசீலன், ஆனந்தராஜ் ஆகிய 3 பேர் தலைமையில் தனிப் படை அமைத்து விசாரணை செய்து வருகின்றனர்.


    மேலும் தினேஷ் எழுதி வைத்திருந்த டைரி குறிப்பு மற்றும் அவர் செல்போனில் தொடர்பு கொண்டவர்கள் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். கள்ளக்குறிச்சியில் கந்து வட்டி கொடுமையால் பா.ஜ.க.பிரமுகர் உருக்கமான வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தொடர் மின்வெட்டு காரணமாக மின் பொறியாளர் அலுவலகத்தில் பொது மக்கள் முற்றுகையிட்டனர்.
    • இது குறித்து மூங்கில் துறைப்பட்டு பகுதி மக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மூங்கில் துறைப் பட்டு பகுதியை சுற்றி யுள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் விவசாயிகள், வணிகர்கள், சிறுகுறு தொழில் செய்யும் வியாபாரி கள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர். எனினும் திருவண்ணா மலை மாவட்டம் பெருந்துறை பட்டில் இருந்து மூங்கில் துறைப்பட்டு பகுதிக்கு மின்சாரம் வினி யோகிப்பதால் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது.

    இது குறித்து மூங்கில் துறைப்பட்டு பகுதி மக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் ஏற்கனவே 2 முறை மூங்கில்துறைப்பட்டு இளம் மின் பொறியாளர் அலுவல கத்தில் போராட்ட மும் நடத்தியுள்ளனர். இருப்பி னும் சீரான மின்சாரம் வினி யோகம் செய்யவில்லை. இந்த நிலையில் தற்போது வரை அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட பொது மக்கள் 3-வது முறையாக மூங்கில்துறைப்பட்டு இளம்மின் பொறியாளர் அலுவலகத்தை பொது மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இது பற்றி தகவல் அறிந்ததும் மூங்கில் துறைப் பட்டு போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி, அனைவரையும் கலைந்துபோக செய்தனர்.

    கள்ளக்குறிச்சியில் உயர் கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி பிளஸ்-2 மாணவர்கள் படிப்பில் கவனம் சிதறாமல் இருக்க வேண்டும் மாவட்ட வருவாய் அலுவலர் அறிவுரை

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சியில் பள்ளி கல்வித்துறை சார்பில் பிளஸ்-2 மாணவர் களுக்கான நான் முதல்வன் திட்டத்தின் ஒரு பகுதியாக கல்லூரி கனவு உயர் கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி நடை பெற்றது. அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் விஜய் பாபு தலைமை தாங்கி னார். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் புவனேஸ் வரி பெருமாள், வருவாய் கோட்டாட்சியர் பவித்ரா, நகர மன்ற தலை வர் சுப்ராயலு, நகராட்சி ஆணையர் குமரன் ஆகி யோர் முன்னிலை வகித்த னர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜய லட்சுமி வரவேற்றார். நிகழ்ச்சியில் உளுந்தூர் பேட்டை சட்டமன்ற உறுப்பி னர் மணிக்கண்ணன் சிறப்பு ரை ஆற்றினார். இதனை தொடர்ந்து பேசிய மாவட்ட வருவாய் அலுவலர் தமிழக அரசின் சார்பில் திறமையான வழிகாட்டும் நபர்களைக் கொண்டு நிகழ்ச்சி நடை பெறுகிறது. அவர்கள் சொல்லும் தகவலை கேட்டு மாணவ,மாணவிகள் பயனடைய வேண்டும். எப்போதும் அரசு பள்ளி மாணவர்கள் திறமையான வர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, கனவு கள் நம்மை தூங்க விடாது என டாக்டர் அப்துல்கலாம் சொன்னது போல மாணவ, மாணவிகள் உங்கள் எதிர்கால எண்ணங்களை கனவுகளாக மாற்றிக்கொண்டு அந்த கனவு நிறைவேறும் வரை குடும்ப சூழ்நிலை நினைத்துப் பார்த்து கவனம் சிதறாமல் படிக்க வேண்டும்.

    படிப்பு மட்டுமே உங்கள் வாழ்க்கைத் தரத்தை மாற்றும் அவ்வாறு உங்கள் வாழ்க்கைத் தரம் மாறு வதற்காக மாணவர் களின் கண்களை திறக்கச் செய்யும் நிகழ்ச்சி தான் இந்த கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி. இவ்வாறு அவர் கூறினார். இதனை தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு கல்லூரி கனவு எனும் கல்வி வழிகாட்டி கையேடு வழங்கப்பட்டது. முன்னதாக நகராட்சி சார்பில் கொரோனா விழிப்புணர்வு மற்றும் தூய்மை குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் சார்பில் விழிப்புணர்வு உறுதிமொழி களை அனைவரும் ஏற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜலட்சுமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் முருகன் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் பெருமாள் உள்ளிட்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் பலரும் கலந்து கொண்டனர்.

    • கள்ளக்குறிச்சி அரசு கல்லூரி கட்டிட பணிகளை தொடங்க வேண்டும் என்று கலெக்டரிடம் செந்தில்குமார் எம்.எல்.ஏ. மனு கொடுத்தார்.
    • புதிய கட்டிடம் கட்ட 2020 ஆம் ஆண்டு சுமார் 11.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதரிடம் மனு அளித்துள்ளார். அந்த மனு வில் கூறியுள்ள தாவது,:-

    கள்ளக்குறிச்சி அரசு கலை அறிவியல் கல்லூரிக்கு புதிய கட்டிடம் கட்ட 2020 ஆம் ஆண்டு சுமார் 11.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் இதுநாள்வரை பணிகள் தொடங்கப்படவில்லை. இந்நிலையில் கனியாமூர் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் போதிய வசதி இன்றி மாணவ, மாணவிகள் மிகவும் அவதிப்படுவதாக கூறப்படுகிறது. எனவே புதிய கட்டிடம் கட்டும் பணிகளை விரைந்து செயல்படுத்த மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட கலெக்டர் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அப்போது ஒன்றிய செயலாளர்கள் ராஜசேகர், தேவேந்திரன் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்.

    ×