search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Brahmotsava ceremony"

    • விழா ஏற்பாடுகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடந்தது.
    • பிரமோற்சவ விழா 13-ந்தேதி வரை கோலாகலமாக நடக்கிறது.

    திருமலை:

    திருப்பதி கோதண்டராமர் கோவிலில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 5-ந்தேதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    திருப்பதி கோதண்டராமர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா அடுத்த மாதம் (ஏப்ரல்) 4-ந்தேதி அங்குரார்ப்பணத்துடன் தொடங்கி 13-ந்தேதி வரை கோலாகலமாக நடக்கிறது. விழா ஏற்பாடுகள் குறித்து திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி வீரபிரம்மன் தலைமையில் மறு ஆய்வுக்கூட்டம் நடந்தது.

    கூட்டத்துக்கு பிறகு நிருபர்களிடம் வீரபிரம்மன் கூறியதாவது:-

    ஏப்ரல் 5-ந்தேதி திருப்பதி கோதண்டராமர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வாகன சேவை தினமும் காலை 7 மணியில் இருந்து 10 மணிவரையிலும், இரவு 7 மணியில் இருந்து 9 மணி வரையிலும் நடக்கிறது.

    பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஏப்ரல் 9-ந்தேதி இரவு கருட வாகனம், ஏப்ரல் 10-ந்தேதி அனுமந்த வாகனம், ஏப்ரல் 13-ந்தேதி சக்கர ஸ்நானம் நடக்கிறது.

    பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்குதல், கலாசார நிகழ்ச்சிகள், பாதுகாப்பு, குடிநீர், மோர், மலர் மற்றும் மின் விளக்கு அலங்காரம் போன்ற அனைத்து ஏற்பாடுகளை செய்ய அந்தந்தத்துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்படுவார்கள். வாகன சேவைக்கு முன்னால் பக்தி பஜனைகள் மற்றும் கோலாட்டங்கள் நடக்கிறது.

    விழாவில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் பாதிக்கப்பட்ட பக்தர்களை மீட்டு மருத்துவனைக்குக் கொண்டு செல்ல ஆம்புலன்சுகள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்படும். மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். பிரம்மோற்சவ விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் பக்தி சேனலில் நேரடியாக ஒளிபரப்பப்படும். பக்தர்களுக்கு ராமகோடி புத்தகங்கள் வினியோகம் செய்யப்படும். போதுமான எண்ணிக்கையில் ஸ்ரீவாரி சேவா சங்க தொண்டர்களை நியமித்து பக்தர்களுக்கு சேவை செய்யப்படும்.

    ஏப்ரல் 17-ந்தேதியில் இருந்து 19-ந்தேதி வரை ராம நவமி உற்சவம், ஏப்ரல் 21-ந்தேதியில் இருந்து 23-ந்தேதி வரை வருடாந்திர தெப்போற்சவம் நடக்கிறது. இந்த விழாக்களும் வெகுவிமரிசையாக நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 8-ந்தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது.
    • கருட வாகன வீதிஉலா மார்ச் 4-ந்தேதி நடக்கிறது.

    திருமலை:

    திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் இன்று (வியாழக்கிழமை) வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி, அடுத்த மாதம் (மார்ச்) 8-ந்தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது. அதையொட்டி நேற்று அதிகாலை மூலவரை துயிலெழுப்பி சுப்ரபாதம், கொலு, பஞ்சாங்க சிரவணம், மாலை அங்குரார்ப்பணம் நடந்தது.

    மாலை 6 மணியில் இருந்து இரவு 8 மணி வரை புண்யாஹவச்சனம், மிருதங்கரஹணம், சேனாதிபதி உற்சவம் நடந்ததும், சிறப்புப்பூஜைகள் செய்து புற்று மண் எடுத்து வந்து முளைப்பாரிக்காக விதைகள் விதைப்பு நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சிகளில் கோவில் சிறப்பு நிலை துணை அதிகாரி வரலட்சுமி, உதவி அதிகாரி கோபிநாத், கண்காணிப்பாளர் செங்கல்ராயுலு, கோவில் ஆய்வாளர் கிரண்குமார் ரெட்டி மற்றும் கோவில் அர்ச்சகர்கள், அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    வருடாந்திர பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று காலை 8.40 மணியில் இருந்து 9 மணிக்குள் மீன லக்னத்தில் பாரம்பரிய முறைப்படி பிரம்மோற்சவ விழா `கருட' கொடியேற்றம் நடக்கிறது.

    முன்னதாக இன்று காலை 6.30 மணியில் இருந்து 8.30 மணி வரை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வரர் திருச்சி வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

    அதைத்தொடர்ந்து மாலை 5 மணியில் இருந்து 6 மணி வரை ஊஞ்சல் சேவை, இரவு 7 மணியில் இருந்து 8 மணி வரை பெரிய சேஷ வாகன வீதிஉலா நடக்கிறது. வாகன சேவைகள் தினமும் காலை 8 மணியில் இருந்து 9 மணி வரையிலும், மீண்டும் இரவு 7 மணியில் இருந்து 8 மணி வரையிலும் நடக்கிறது.

    வாகனங்களில் உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரர் தனித்தும், உபய நாச்சியார்களுடன் சேர்ந்தும் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். பிரம்மோற்சவ விழாவின் `சிகர' நிகழ்ச்சியாக கருடவாகன வீதிஉலா (கருட சேவை) மார்ச் 4-ந்தேதி நடக்கிறது.

     விழாவையொட்டி கோவில் வளாகம், நான்கு மாடவீதிகள் முழுவதும் மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன. சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரிக்காக கோவில் புஷ்கரணி சுத்தம் செய்து தூய புனிதநீர் நிரப்பப்பட்டுள்ளது.

    • சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த திரளான பொது மக்கள் கலந்துகொண்டு, தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
    • தொடர்ந்து நாளை இந்திர விமானத்தில் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.

    புதுச்சேரி:

    நெட்டப்பாக்கம் பர்வதவர்த்தினி உடனுறை ராமலிங்கேஸ்வரர் கோவிலில் வைகாசி மாத பிரம்மோற்சவ பெருவிழா நடைபெற்றது.

    முன்னதாக பிடாரியம்ம னுக்கு சாலை வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து விக்னேஷ்வர பூஜை, மகா கணபதி ஹோமம் நடை பெற்றது. தொடர்ந்து பஞ்சமூர்த்தி வீதியுலா, இந்திர விமானம், அதிகார நந்தி, பூத வாகனம், கற்பக விருட்சம், நால்வர் வீதியுலா, யானை வாகனம், குதிரை வாகனம், பிட்சாடனர் திரு வீதியுலா, ரிஷப வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் தினமும் வீதியுலா நடைபெற்றது.

    பின்னர் பர்வதவர்த்தினி ராமலிங்கேஷ்வரருக்கு திருக்கல்யாணம் நடை பெற்றதை தொடர்ந்து, விழாவின் முக்கிய நிகழ்வாக திருத்தேர் வடம்பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழாவில் வைத்திலிங்கம் எம்.பி, துணை சபாநாயகர் ராஜவேலு மற்றும் ஊர் பிரமுகர் பிரகாசம் ஆகி யோர் கலந்துகொண்டனர். சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த திரளான பொது மக்கள் கலந்துகொண்டு, தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் பொது மக்கள் செய்தனர். தொடர்ந்து நாளை இந்திர விமானத்தில் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.

    • பிரசன்ன வேங்கடாஜலபதி கோவிலில் பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது
    • 26-ந்தேதி தொடங்குகிறது

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் குணசீலத்தில் பிரசித்தி பெற்ற பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோவில் அமைந்துள்ளது. பதியான வைகுண்ட வாசுதேவன் குணசீல மகரிஷியின் தவத்திற்காக பிரசன்ன வெங்கடேசனாக காட்சியளித்த அற்புத ஸ்தலமாகும். அவ்வாறு காட்சி அளித்த புனித தினமான புரட்டாசி மாதம் திருவோண நட்சத்திரத்தை முக்கியமாக கொண்டு ஆண்டுதோறும் 11 நாட்கள் பிரமோற்சவ விழா கொண்டாடப்படுகிறது.

    இங்கு எழுந்தருளிருக்கும் எம்பெருமான் சங்குசக்கரதாரியாக திருமார்பில் லட்சுமி துலங்க கையில் செங்கோல் ஏந்தி நின்ற திருக்கோலத்திலேயே சேவை சாதிக்கிறார். குறிப்பாக மனநலம் பாதிக்கப்பட்டோர் 48 நாட்கள் விரதமுறைப்படி வணங்கினால் அவ்வினைகள் போக்கி அருட்பாலிக்கிறார் என்பது ஐதீகம். மேலும் திருப்பதி சென்று தங்களது பிரார்த்தனைகளை செலுத்த இயலாதவர்களும் அந்த பிரார்த்தனைகளை இந்த கோவிலில் செலுத்தி பலன் பெறுகிறார்கள். எனவே இந்த கோவில் தென் திருப்பதி என்றும் அழைக்கப்படுகிறது.

    பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் பிரம்மோற்சவ விழா முக்கியமானதாகும். 10 நாட்கள் நடக்கும் இந்த விழாவில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்துகொள்வதும் வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழாவையொட்டி வருகிற 26-ந்தேதி காலை 7 மணிக்கு பகவத் பிரார்த்தனை, புண்யாக வாசனம், ம்ருத்ஸங்க்ரஹணம், அங்குரார்ப்பணம், வாஸ்து சாந்தி நடக்கிறது. 27-ந்தேதி காலை 10.35 மணிக்கு கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது. அன்று இரவு அன்ன வாகனத்திலும், 28-ந்தேதி இரவு சிம்ம வாகனத்திலும், 29-ந்தேதி இரவு ஹனுமந்த வாகனத்திலும், 30-ந்தேதி இரவு கருட சேவையும், அடுத்த மாதம் 1-ந்தேதி இரவு சேஷ வாகனத்திலும், 2-ந்தேதி இரவு யானை வாகனத்திலும் சுவாமி வலம் வருகிறார்.

    விழாவையொட்டி வருகிற 3.10.2022 அன்று திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. இதையொட்டி அன்று காலை 7 மணிக்கு செல்வர் புறப்பாடும், மாலை 6 மணிக்கு ஸ்ரீபெருமாள் உபய நாச்சியாருடன் திருக்கல்யாண எழுந் தருளல், 6.30 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது. இரவு 9.30 மணிக்கு புஷ்பக விமானத்தில் சுவாமி புறப்பாடாகிறார்.

    8-ம் திருவிழாவான 4-ந்தேதி காலை 7 மணிக்கு செல்வர் புறப்பாடு, பல்லக்கு புறப்பாடு நடக்கிறது. சுவாமி வெண்ணை தாழி கிருஷ்ணன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இரவு 7 மணிக்கு குதிரை வாகனத்தில் சுவாமி எழுந்தருகிறார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 9-ம் திருவிழா அன்று தேரோட்டம் வருகிற (5-ந்தேதி, புதன்கிழமை) நடக்கிறது. அன்றைய தினம் காலை 5.30 மணிக்கு பெருமாள் உபநாச்சியாருடன் தேரில் எழுந்தருளுகிறார். பின்னர் காலை 9.05 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நடக்கிறது. முக்கிய வீதிகளின் வழியாக தேரோட்டம் நடக்கிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுக்கின்றனர்.

    மாலை 5.30 மணிக்கு தீர்த்தவாரியும் நடக்கிறது. 6-ந்தேதி இரவு சப்தாவரணமும், விழாவின் கடைசி நாளான 7-ந்தேதி இரவு 9 மணிக்கு புஷ்ப பல்லக்கும், 10 மணிக்கு ஏகாந்த மண்டப கும்ப தீபாராதனையும், 10.30 மணிக்கு கண்ணாடி அறை சேவையும் நடக்கிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை நிர்வாக டிரஸ்டி கே.ஆர்.பிச்சுமணி அய்யங்கார் மற்றும் விழா குழுவினர் செய்து வருகிறார்கள்.

    • ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா நடைபெற இருக்கிறது.
    • இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ரிஷிவந்தியம் அருகே ரிஷிவந்தியத்தில் பிரசித்திபெற்ற முத்தாம் பிகை சமேத அர்த்த நாரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. மிகவும் பழமைவாய்ந்த இக்கோவி லில் ஆண்டுதோறும் ஆனி மாதம் பிரம்மோற்சவம் 11 நாட்கள் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக் கான பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக விக்னேஸ்வரர் பூஜை, வாஸ்து சாந்தி உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தது. முத்தாம்பிகை சமேத அர்த்த நாரீஸ்வரருக்கும், கோவில் வளாகத்தில் உள்ள கொடிமரத்துக்கும் சிறப்பு பூஜை செய்து, பிரம்மோற்சவ கொடி ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தேரோட்டம் விழாவை யொட்டி தினமும் இரவு வெவ்வேறு வாகனங்களில் பஞ்ச மூர்த்திகள் வீதிஉலா நடைபெற உள்ளது. விழா வின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 11-ந் தேதி நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடு களை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் ரிஷிவந்தியம் பகுதி பொதுமக்கள் செய்து வருகிறார்கள்.

    ×