என் மலர்
கள்ளக்குறிச்சி
- மாணவியிடம் சென்று உன்னை காதலிப்பதாக கூறி பாலியல் முறையில் தொல்லை கொடுத்தார்
- இது குறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பே ட்டை தாலுகா எலவனுசூர்கோட்டை அருகே பூண்டி பகுதியை சேர்ந்த 18 வயது மாணவி ஒருவர். இவர் அதே பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகிறார்.
இந்நிலையில் பூண்டி அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் ஜெய்கிருஷ்ணன் (21) என்பவர் அந்த மாணவியிடம் சென்று உன்னை காதலிப்பதாக கூறி பாலியல் முறையில் தொல்லை கொடுத்தார்.
இது குறித்து அந்த மாணவி தனது பெற்றோ ரிடம் தெரிவித்தார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் தாய் எலவனாசூர்கோட்ைட போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் எலவனசூ ர்கோட்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்துஜெய்சங்கரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- தனது மகன் காட்ச்சனின் மாற்று சான்றிதழை தருமாறு தலைமை ஆசிரியரிடம் கேட்டுள்ளார்.
- ஆத்திரமடைந்த அந்தோணி தலைமை ஆசிரியர் என்று கூட பாராமல் தகாத வார்த்தைகளால் அவரை திட்டி கன்னத்தில் அறைந்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார்
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூ ர்பேட்டை தாலுகா சேந்தமங்கலத்தில் ஆதிதிராவிடர் நல பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சீனுவாசன் (வயது 52) தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.அதே பகுதியைச் சேர்ந்த அந்தோணி என்பவரின் மகன் காட்சன் (வயது 5) அதே பள்ளியில் படித்து வருகிறான். நேற்று அந்தோணி பள்ளிக்குச் சென்று தனது மகன் காட்ச்சனின் மாற்று சான்றிதழை தருமாறு தலைமை ஆசிரியரிடம் கேட்டுள்ளார். அதற்கு தலைமை ஆசிரியர் சீனுவாசன் காலதாமதம் ஆகும். நான் பின்னர் எடுத்து தருகிறேன் என்று கூறியிருக்கிறார்.
ஆத்திரமடைந்த அந்தோணி தலைமை ஆசிரியர் என்று கூட பாராமல் தகாத வார்த்தைகளால் அவரை திட்டி கன்னத்தில் அறைந்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இது குறித்து தலைமை ஆசிரியர் சீனுவாசன் திருநாவலூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் திருநாவலூர் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிந்து அந்தோணியை கைது செய்தனர்.
- கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கலவரத்தில் ஈடுபட்டவர்களை சிறப்பு புலனாய்வு போலீசார் கைது செய்து வருகின்றனர்.
- உளுந்தூர்பேட்டை அருகே நத்தகாளி கிராமத்தைச் சேர்ந்த சுந்தர் வன்முறையில் ஈடுபட்டு பள்ளி சொத்துகளை சேதப்படுத்தியதாக கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கலவரத்தில் ஈடுபட்டவர்களை சிறப்பு புலனாய்வு போலீசார் கைது செய்து வருகின்றனர்.
அதன்படி வாட்ஸ் அப் குழுக்கள் அமைத்து கலவரத்தை தூண்டும் வகையில் கருத்துக்களை பதிவு செய்தது மற்றும் கலவரத்தில் கலந்து கொண்டதாக கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே டி.ஏந்தல் கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார் (22), திட்டக்குடி அருகே எழுத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சத்யராஜ், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே நத்தகாளி கிராமத்தைச் சேர்ந்த சுந்தர் மற்றும் வன்முறையில் ஈடுபட்டு பள்ளி சொத்துகளை சேதப்படுத்தியதாகவும் கைது செய்தனர்.
இதேபோல திட்டக்குடி அருகே டி.ஏந்தல் கிராமத்தைச் சேர்ந்த முத்தையா (23) கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே சிறுவத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சர்புதீன் (45) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.
இதனால் கைது எண்ணிக்கை 352 ஆக உயர்ந்து உள்ளது.
- விழுப்புரம் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் அளித்துள்ள மாணவிகள் யார் என்ற விவரத்தை எங்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
- மகளின் மரணத்துக்கு நீதி கோரி நடைபயணம் அறிவித்திருந்த நிலையில், அதை ரத்து செய்யப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்- 2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி. கடந்த மாதம் 13-ந்தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே ஐகோர்ட்டு உத்தரவின்படி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக்குழுவினர், மாணவி ஸ்ரீமதியின் பிரேத பரிசோதனை முடிவுகளை ஆய்வு செய்து அதன் ஆய்வறிக்கையை நேற்று முன்தினம் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்த ஆய்வறிக்கையின் நகலை கேட்டு நேற்று ஸ்ரீமதியின் பெற்றோர் சார்பில் அவரது வக்கீல் காசிவிஸ்வநாதன், விழுப்புரம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.
இம்மனுவை ஏற்ற நீதிபதி புஷ்பராணி, புதுச்சேரி ஜிப்மர் குழு ஆய்வறிக்கையை இன்று பெற்றுக் கொள்ளலாம் என கூறினார். இதற்காக மாணவி ஸ்ரீமதியின் பெற்றோர் ராமலிங்கம்- செல்வி ஆகியோர், விழுப்புரம் கோர்ட்டுக்கு வந்திருந்தனர்.
பின்னர் மாணவி ஸ்ரீமதியின் தாயார் செல்வி, நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஸ்ரீமதி இறந்து 43 நாட்களாகியும் இன்னும் அவரது மரணத்தில் உள்ள மர்மம் விலகவில்லை. விழுப்புரம் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் அளித்துள்ள மாணவிகள் யார் என்ற விவரத்தை எங்களுக்கு தெரிவிக்க வேண்டும். அவர்கள் எனது மகள் ஸ்ரீமதியின் தோழிகள்தானா என்பதை எங்களுக்கு ஆதாரப்பூர்வமாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரியப்படுத்த வேண்டும்.
அவ்வாறு தெரிவிக்கும்பட்சத்தில் அவர்களின் விவரங்களை நாங்கள் ரகசியம் காப்போம். மேலும் எனது மகள் மரணத்தில் இருக்கும் மர்மங்கள் வெளியே வர வேண்டும். இதற்காக நீதி கேட்டு நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) எனது சொந்த கிராமமான கடலூர் மாவட்டம் பெரியநெசலூரில் இருந்து நானும், எனது கணவரும் நடைபயணமாக சென்னைக்கு சென்று தமிழக முதல்-அமைச்சரை சந்தித்து மனு அளிக்க உள்ளோம் என்று அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் சனிக்கிழமை காலை 10 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை, ஸ்ரீமதியின் தாய் செல்வி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மகளின் மரணத்துக்கு நீதி கோரி நடைபயணம் அறிவித்திருந்த நிலையில், அதை ரத்து செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சந்தேகம் அடைந்த சீனிவாசன் அருகில் உள்ள இடங்களில் தேடிப் பார்த்துள்ளார்.
- புகாரில் தனது மகளை கண்டுபிடித்து தருமாறு கூறி உள்ளார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள பெத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் . அவரது மகள் தனம் (வயது 19). முதுநிலை பட்டப்படிப்பு முடித்து உள்ளார். சம்பவத்தன்று காலை தனம் வெளியே சென்றார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. சந்தேகம் அடைந்த சீனிவாசன் அருகில் உள்ள இடங்களில் தேடிப் பார்த்து ள்ளார். எங்கு தேடியும் தனம் கிடைக்க வில்லை. விசார ணையில் த னம் அதே பகுதியை சேர்ந்த சபாபதியுடன் சென்று இருப்பது தெரியவந்து உள்ளது. சபாபதிக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது. இது குறித்து சீனிவாசன் சின்னசேலம் போலீசில் புகார் செய்தார். புகாரில் தனது மகளை கண்டுபிடித்து தருமாறு கூறி உள்ளார். போலீசார் வழக்குபதிவு செய்து தனத்தை தேடி வருகிறார்கள்.
- திருமணமான முதல் நாளில் இருந்தே காதல் திருமணம் செய்ததாக கூறி மாப்பிள்ளை வீட்டார் பிரச்சினையை கிளப்பினார்கள்.
- தினம் தோறும் அக்ஷாவை ஏதாவது குறை சொல்லி அவரை சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் சந்தைப் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் அக்ஷா (வயது25).
அதே பகுதியைச் சேர்ந்தவர் தஸ்தகீர். இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். பின்னர் இருதரப்பு பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்தின்போது 50 பவுன் நகை, ரூ.1 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்கள், ரூ.2 லட்சம் மதிப்புள்ள மோட்டார் சைக்கிள் ஆகியவை வரதட்சணையாக கொடுக்கப்பட்டது.
திருமணமான முதல் நாளில் இருந்தே காதல் திருமணம் செய்ததாக கூறி மாப்பிள்ளை வீட்டார் பிரச்சினையை கிளப்பினார்கள். தினம் தோறும் அக்ஷாவை ஏதாவது குறை சொல்லி அவரை சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
திருமணம் முடிந்த சில நாட்களிலேயே 50 பவுன் நகைகளையும் கணவர் வீட்டார் வாங்கி வைத்துக் கொண்டனர். மேலும் அக்ஷாவின் 5 பவுன் தஙக வளையல்களை கணவரின் சகோதரி எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
அக்ஷாவுக்கு தெரியாமலேயேயே இந்த வளையல்களை எடுத்துக் கொண்டனர். அந்த வளையல்களை கணவரின் சகோதரி திருடிக் கொண்டதாக அக்ஷா குற்றம் சாட்டினார்.
இதனால் அக்ஷாவுக்கும், கணவர் குடும்பத்தாருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் அக்ஷாவின் தலையில் கணவன் குடும்பத்தினர் அடித்தனர். இதில் அவரது தலையில் காயம் ஏற்பட்டது.
அதன் பிறகு அக்ஷாவை கணவர் குடும்பத்தினர் அதிக அளவில் சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த அக்ஷா 5 முறை தற்கொலைக்கு முயன்றார். ஆனால் அத்தனை முறையும் அவர் உயிர் பிழைத்தார்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அக்ஷாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. அதன் பிறகு அவருக்கு சோதனை அதிகரித்தது. அக்ஷாவின் பெண் குழந்தையை கணவரும், அவரது குடும்பத்தினரும் வெறுத்தனர். எங்களுக்கு பெண் குழந்தை வேண்டாம். அதை கொன்று விடு என்று அக்ஷாவை கணவர் குடும்பத்தினர் மிரட்டியதாக தெரிகிறது.
இதற்கு மேலும் கணவர் வீட்டில் இருந்தால் குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என்று பயந்த அக்ஷா குழந்தையை எடுத்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.
தான் உயிருடன் இருந்தால் பெண் குழந்தையை கொல்ல சொல்லி மீண்டும் தன்னை சித்ரவதை செய்வார்கள் என்று பயந்த அக்ஷா தனது மகளை காப்பாற்றுவதற்காக தனது உயிரை மாய்க்க முடிவு செய்தார்.
எலி மருந்தை தின்று அவர் தற்கொலை செய்ய முடிவு செய்தார்.
அக்ஷா தற்கொலை செய்வதற்கு முன்பு கணவர் வீட்டில் தனக்கு நேர்ந்த கொடுமைகளையும், தான் எதற்காக தற்கொலை செய்கிறேன் என்பதையும் வீடியோவில் வாக்குமூலமாக பதிவு செய்தார். அதன் பிறகு உருக்கமான கடிதம் ஒன்றையும் எழுதி வைத்தார். பின்னர் எலி மருந்தை தின்று உயிருக்கு போராடினார். அவரை பெற்றோர்கள் திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அக்ஷா பரிதாபமாக இறந்தார்.
இதையடுத்து அக்ஷாவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவரது வீடியோ பதிவு மற்றும் உருக்கமான கடிதத்தையும் கைப்பற்றினர். அந்த கடிதத்திலும், வீடியோவிலும் அக்ஷா கூறி இருப்பதாவது:-
நான் எனது கணவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட பாவத்துக்கு தண்டனையாக தற்கொலை செய்து கொள்கிறேன். இந்த உலகம் எவ்வளவு மாறி விட்டது. ஆனாலும் ஏன் பெண் குழந்தையை வெறுக்கிறார்கள். பெண் குழந்தையை பெற்றெடுத்தது எனது தவறா? எனது குழந்தையை கொலை செய்ய கணவர் வீட்டார் நிர்ப்பந்தம் கொடுத்தனர். எனவே எனக்கு வேறு வழி தெரியவில்லை. எனது குழந்தையை காப்பாற்ற நான் தற்கொலை செய்து கொள்கிறேன்.
திருமணத்தின் போது எனக்கு போடப்பட்ட நகை, சீர்வரிசை பொருட்கள், திருமணத்துக்கு முன்பு எனது கணவர் வீட்டுக்கு நான் செலவு செய்த ரூ.5 லட்சம் பணம் ஆகியவற்றை திருப்பி வாங்கி அவர்களிடம் இருந்து நஷ்ட ஈட்டையும் பெற்றுக் கொள்ளுங்கள். அது எனது பெண் குழந்தையின் எதிர்காலத்திற்கு உதவும். இது குழந்தையை பெற்ற இந்த தாயின் போராட்டம்.
இவ்வாறு அவர் கூறி இருந்தார்.
இந்த வீடியோ மற்றும் கடிதத்தின் அடிப்படையில் போலீசார் அக்ஷாவின் கணவர், மாமனார், மாமியார், நாத்தனார், கொழுந்தன் உள்பட 7 பேர் மீது வரதட்சணை கொடுமை, பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக ஆர்.டி.ஒ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
5 முறை தற்கொலைக்கு முயன்று 6-வது முறையாக அக்ஷா தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உளளது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டம் தென் செட்டியந்தல் என்ற கிராமத்தை சேர்ந்தவர் ராம்குமார் (வயது 37). இவர் கனியாமூர் பள்ளி கலவரத்தின்போது போலீஸ் வாகனத்தின் மீது கல் எறிந்தும் காவலர்களை கல்வீசி தாக்கி வன்முறையில் ஈடுபட்டது தொடர்பாகவும் கைது செய்யப்பட்டார்.
இதேபோல் தென் செட்டியந்தல் கிராமத்தை சேர்ந்த வாலிபர் விஜயராஜ் (23) பள்ளி சொத்துக்களை சேதப்படுத்தியதோடு, அங்கிருந்த சில பொருட்களை திருடி சென்றதற்காக கைது செய்யப்பட்டார்.இதேபோல் கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே நல்லூர் நகர் கிராமத்தை சேர்ந்த வாலிபர் அசோக்குமார் (27) என்பவர் வாட்ஸ் அப் குழுக்களில் வன்மத்தை தூண்டும் விதமான கருத்துக்களை பதிவு செய்து பெரும் கலவரம் ஏற்பட காரணமாக இருந்த காரணத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
கலவரத்தில் ஈடுபட்ட வீடியோ மற்றும் புகைப்பட காட்சிகளை வைத்து கைது செய்யப்பட்ட 3 பேரும் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா எலவனுசூர்கோட்டை அருகே உள்ள எறையூர் பகுதியை சேர்ந்தவர் பிரிட்டோ (வயது 25).இவர் அதே பகுதியைச் சேர்ந்த ரியான் ஹாஸ் என்பவரை காயின் பிசினஸ் செய்ய வருமாறு கூறினார். இதனை அடுத்து அதே பகுதியைச் சேர்ந்த விக்டர் இளயான் ராஜ் மற்றும் அத்துவான் ஆரோக்கிய ராஜ் ஆகிய இருவரிடம் இது பற்றி கூறினார்.
அதன் பின்னர் அத்து வான் ஆரோக்கியராஜ் என்பவரிடம் 72 லட்சம் பணம் வாங்கி பிரிட்டோ முன்னிலையில் ரியான் ஜோசிடம் கொடுத்துள்ளார். அந்தப் பணத்தை திருப்பி கேட்டதால் பணத்தை வாங்கிய ரியான் ஜோஸ் பிரிட்டோவை அசிங்கமாக திட்டி அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.
இது குறித்து பிரிட்டோ எலவனசூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் எலவனசூர் கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்த ரியான் ஜோஸ்சை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி:
உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அருள் செல்வம் தனி பிரிவு தலைமை போலீசார் சரவணன் தலைமையிலான போலீசார் நேற்று இரவு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அனுமதி இன்றி ஆற்றில் மணல் அள்ளிக்கொண்டு 2 மாட்டு வண்டிகள் வந்தது.
இதை பார்த்த போலீசார் உடனே 2 மாட்டு வண்டிகளை பிடிக்க முயன்றனர். போலீசார் வருவதை கண்டவுடன் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளி வந்த அதே பகுதியைச் சேர்ந்த அய்யப்பன், அய்யனார் இருவரும் தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கீழ் குப்பம் பஸ் நிலையம் பகுதியில் குடிநீருக்காக பயன்படுத்தப்படும் கிணறு ஒன்று உள்ளது.இந்த கிணற்றில் உள்ள தண்ணீரை தான் கீழ்குப்பத்தில் வசிக்கும் பொது மக்களுக்கு குடிநீருக்காக பஞ்சாயத்து மூலம் வழங்கப்படுகிறது. இந்த கிணறு மூலம் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன்பெற்று வருகிறது.
இந்நிலையில் கிணற்றின் மேல் பகுதியில் பாதுகாப்பிற்காக இரும்பு வளையம் கொண்டு மூடப்பட்டு இருந்தது. இந்த இரும்பு வளையம் சில ஆண்டுகளாகவே சேதமடைந்து கிணற்றுக்கு அருகிலேயே சேதம் அடைந்து கிடைக்கின்றது. இதனால் குடிநீர் மாசு படுவதற்கு வாய்ப்பு உள்ளது.
கீழ் குப்பம் அருகில் வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் குரங்கு, மான், மயில் போன்ற உயிரினங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறது. தண்ணீருக்காக இந்த உயிரினங்கள் அடிக்கடி வெளியே வருவது உண்டு. அப்படி வரும்பொழுது மூடப்படாமல் இருக்கும் கிணற்றில் தவறி விழுந்து இறப்பதற்கு அதிக அளவில் வாய்ப்புள்ளது. இதனால் குடிநீரில் மாசுபடுவதற்கு அதிகளவில் வாய்ப்பு உள்ளது.
எனவே கிணற்றை பாதுகாப்பான முறையில் மூடி சுகாதாரமான முறையில் குடிநீர் வழங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் அருகே உள்ள கனியாமூரிலிருந்து கச்சிராயபாளையம் செல்லும் சாலையில் ஜீவா என்பவர் கே. பி. கே சிக்கன் கடை நடத்தி வருகிறார்.
நேற்று காலை பெயர் விலாசம் தெரியாத நபர் ஒருவர் 10 கிலோ சிக்கன் வேண்டும் என ஆர்டர் செய்துள்ளார். சிறிது நேரம் கழித்து கடை உரிமையாளர் ஜீவாவிடம் தன்னுடைய வண்டி பெட்ரோல் இல்லாமல் நின்று விட்டதாகவும் தங்கள் மோட்டார் சைக்கிளை கொடுங்கள் பெட்ரோல் வாங்கி வந்து விடுகிறேன் என்று கூறியுள்ளார்.
மர்ம நபர் கூறியதை நம்பி கடைக்காரர் தனது மோட்டார் சைக்கிளை கொடுத்து ள்ளார். வண்டியை பெற்றுக் கொண்ட மர்ம நபர் பெட்ரோல் வாங்கி கொண்டு சிறிது நேரத்தில் வந்து விடுகிறேன் என்று கூறி சென்றவர் வெகு நேரமாகியும் வரவில்லை.சந்தேகம் அடைந்த கடை உரிமையாளர் ஜீவா காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கலாம் என்று செல்போனை தேடி பார்த்த போது செல்போ னையும் திருடி சென்றது தெரியவந்தது.
அதிர்ச்சி அடைந்த ஜீவா சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் இருசக்கர வாகனத்தையும் செல்போனையும் திருடி சென்ற மர்ம நபரை கண்டுபிடித்து தருமாறு புகார் அளித்தார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்து மோட்டார் சைக்கிளையும், செல்போனை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே மேமாளூர் கிராமத்தை சேர்ந்தவர் சி உத்திரியநாதன்(வயது40). விவசாயி. இவர் மோட்டார் சைக்கிளில் எலவனாசூர்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார். பல்லவாடி பஸ்நிறுத்தம் அருகே வந்தபோது எதிரே செங்கணாங்கொல்லை கிராமத்தை சேர்ந்த ஆதிசங்கர்(34) என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்துடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த உத்திரியநாதனை அக்கம்பக்கத்தினர் சிகிச்சை க்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
படு காயம் அடைந்த ஆதிசங்கர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






