என் மலர்tooltip icon

    கள்ளக்குறிச்சி

    • கள்ளக்குறிச்சி அருகே கார் மோதி வாலிபர் பலியானார்.
    • கள்ளக்குறிச்சி உலகங்காத்தான் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதில் சக்திவேல் மட்டும் எழுந்து சாலையை கடக்க முயன்றார்.

    கள்ளக்குறிச்சி:

    திருவண்ணாமலை மாவட்டம் தேனிமலையைச் சேர்ந்த ரங்கநாதன் மகன் சக்திவேல் (வயது 29). இவர் தனது நண்பர்களான ரவிச்சந்திரன், பிரசாத் ஆகியோருடன் ஒரே மோட்டார் சைக்கிளில் தலைவாசல்ல் துக்க நிகழ்ச்சிக்கு சென்றார். துக்க நிகழ்ச்சியை பார்த்துவிட்டு மீண்டும் 3 பேரும் மோட்டார் சைக்கிளில் திருவண்ணாமலை நோக்கி சென்றனர். அப்போது கள்ளக்குறிச்சி உலகங்காத்தான் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதில் சக்திவேல் மட்டும் எழுந்து சாலையை கடக்க முயன்றார். அப்போது சேலத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த கார் சக்திவேல் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சக்திவேலை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொன்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சக்திவேல் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • மர்ம நபர்கள் வீட்டு கதவு பூட்டை உடைத்து, ரூ. 2 லட்சம் ரொக்கம், 4 பவுன் நகையை திருடி சென்றுவிட்டனர்.
    • வீடு திரும்பிய திருமலை தனது வீட்டில் கொள்ளை போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே எஸ்.வி.பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் திருமலை தொழிலாளி. சம்பவத்தன்று, திருமலை குடு்ம்பத்தோடு வெளியூர் சென்று இருந்தார்,

    இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்ம நபர்கள் வீட்டு கதவு பூட்டை உடைத்து, ரூ. 2 லட்சம் ரொக்கம், 4 பவுன் நகையை திருடி சென்றுவிட்டனர்.

    வீடு திரும்பிய திருமலை தனது வீட்டில் கொள்ளை போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து திருமலை சங்கராபுரம்போலீசில் புகார் செய்தார். புகார் மனுவில் தன்னுடன் சித்தாளாக வேலை பார்த்து வரும் வேப்பூர் சேப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த சின்னதுரை மனைவி அமராவதி என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக கூறி உள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • மின் கம்பி ஒன்று உரசியதால் பஸ் முழுவதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் பஸ்சில் இருந்த டிரைவர் ராமர் மின்சாரம் பாய்ந்து துடிதுடித்து இறந்தார்.
    • பஸ்சில் பள்ளி மாணவர்கள் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதன்பிறகு இந்த சம்பவம் சின்னசேலம் போலீசருக்கு தெரிவிக்கப்பட்டது.

    சின்னசேலம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கல்லாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ராமர் (வயது 36). இவர் சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பஸ் டிரைவரகா பணியாற்றி வந்தார்.

    நேற்று மாலையில் ராமர் பஸ்சில் பள்ளி மாணவர்களை அழைத்துக் கொண்டு வந்து கல்லாநத்தம் கிராமத்தில் இறக்கி விட்டார். பின்னர் அந்த பஸ்சை டிரைவர் ராமர் ஒரு மேடான பகுதிக்கு கொண்டு சென்று நிறுத்தலாம் என நினைத்து ஓட்டி சென்றார்.

    அப்போது பஸ் மீது அந்த வழியாக சென்ற மின் கம்பி ஒன்று உரசியது. இதனால் பஸ் முழுவதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் பஸ்சில் இருந்த டிரைவர் ராமர் மின்சாரம் பாய்ந்து துடிதுடித்து இறந்தார்.

    பஸ்சில் பள்ளி மாணவர்கள் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதன்பிறகு இந்த சம்பவம் சின்னசேலம் போலீசருக்கு தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று ராமரின் உடலை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    பள்ளியில் இருந்த பொருட்களை சேதப்படுத்தியது தொடர்பாக சின்ன சேலம் வட்டம் உலகிய நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த அன்பு என்பவர் கைதனார்.

    கள்ளக்குறிச்சி:

    சின்னசேலம் அருகே கனியாமூர்சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளி யில் நடந்த கலவரம் தொட ர்பாக, சிறப்பு புலனாய்வு குழு போலீசார் வழக்கு பதிவு செய்து கலவரத்தில் தொடர்புடைய குற்றவா ளிகளை தேடி வருகிறார்கள்.

    அந்த வகையில் காவல்துறை வாகனத்தின் மீது கல் எறிந்தது தொடர்பாக கள்ளக்குறிச்சி வட்டம் உலகங்காத்தான் கிராமம் இந்திரா நகர் ராம்குமார் என்கின்ற ராம்கி என்பவர் வாட்ஸ் அப் குழுக்களில் இடம்பெற்று வன்மத்தை தூண்டும் கருத்துக்களை பதிவு செய்து உள்ளார்.

    கலவரத்திலும் பங்கு பெற்று பள்ளியில் இருந்த பொருட்களை சேதப்படுத்தியது தொடர்பாக சின்ன சேலம் வட்டம் உலகிய நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த அன்பு என்பவர் கைதனார்.

    இவர்கள் கலவரத்தில் ஈடுபட்டது குறித்த வீடியோ மற்றும் புகைப்பட காட்சிகளை வைத்து அடையாளம் கண்டு, கைது செய்து இவர்களை கள்ள க்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் கைது நடவடிக்கை தொட ரும் எனவும் அறிவித்து ள்ளனர்.

    இதனால் கைது எண்ணி க்கை 357 ஆக அதிகரித்து உள்ளது.

    ஆற்றில் இரவு நேரங்களில் மினி லாரியில் மணலை அள்ளி 1 யூனிட் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் உற்பத்தியாகி வரும் மணி ஆறு மற்றும் முக்தா ஆறும் இணைந்து மணிமுக்தா அணைக்கு தண்ணீர் வருகிறது. கள்ளக்குறிச்சி அருகே சூளாங்குறிச்சி பகுதியில் ஆற்றின் குறுக்கே மணிமுக்தா அணை கட்டப்பட்டுள்ளது.

    இந்த அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடும் போது சூளாங்குறிச்சி, பல்லகச்சேரி, வீரசோழபுரம், மடம், சித்தலூர், வடபூண்டி, கொங்கராயபாளையம், உடையனாச்சி, கூத்தக்குடி ஆகிய ஊராட்சிகளில் வழியாக தண்ணீர் கடலூர் மாவட்டத்தை சென்றடைகிறது. இந்த ஆற்றில் கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பெய்த கனமழைக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் ஆற்றுப்பகுதியில் மணல் வளம் செழிப்பாக காணப்பட்டது. தற்போது மணிமுக்தா ஆற்றில் தண்ணீர் வரத்து மிகவும் குறைந்துள்ளது. இதனால் சமூக விரோதிகள் ஆற்றில் மணல் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர் .

    இவ்வாறு தியாகதுருகம் அருகே சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோவில் அருகேஆற்றில் இரவு நேரங்களில் மினி லாரியில் மணலை அள்ளி 1 யூனிட் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

    மேலும் புது உச்சிமேடு பகுதியில் சாக்குப் பையில் மணல்களை மூட்டை கட்டி மோட்டார் சைக்கிள்களில் எடுத்துச்சென்று விற்பனை செய்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து ஆற்றில் இருந்து வாகனங்கள் மூலம் சமூகவிரோதிகள் ஆற்றில் மணல் கொள்ளை அடிப்பதை தடுக்க வேண்டும். என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பகண்டை கூட்டுரோடு அருகே நிலத்தகராறில் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • ரமேஷ் மனைவி அலமேலு, பூஜா, வசந்தா, சுப்பிரமணியன் ஆகியோர் தடுத்து கொலை மிரட்டல் விடுத்தார்.

    கள்ளச்குறிச்சி:

    கள்ளச்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே பகண்டை கூட்டுரோடு அடுத்த இளையனார்குப்பத்தை சேர்ந்தவர் ராஜவேல். அவரது மனைவி மாலா. இவர் சம்பவத்தன்று தனது நிலத்தை டிராக்டர் மூலம் உழுவதற்கு சென்றார். அவரை அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் மனைவி அலமேலு, பூஜா, வசந்தா, சுப்பிரமணியன் ஆகியோர் தடுத்து கொலை மிரட்டல் விடுத்தார். நிலப்பிரச்சினையால் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக இந்த தகராறு நடந்தது. இது குறித்து இரு தரப்பினரும் பகண்டை கூட்டுரோடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதில் மாலா கொடுத்த புகாரின் பேரில் அலமேலு, பூஜா, வசந்தா, சுப்பிரமணியன் ஆகியோர் மீதும், ரமேஷ் அலமேலு கொடுத்த புகாரின் பேரில் ராஜவேல், மாலா, அமுதா, சண்முகப்பிரியா ஆகியோர் மீதும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • திருநாவலூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலியானார்.
    • மோட்டார் சைக்கிளை விட்டு தப்பி ஓடிய நபரை வலை வீசி தேடி வருகின்றனர்.

    திருநாவலூர், ஆக.25-

    கள்ளக்குறிச்சி மாவட் டம் உளுந்தூர்பேட்டை தாலுகா திருநாவலூர் அருகே லத்தாமூர் பகுதியைச் சேர்ந்தவர் சாமிகண்ணு (வயது 55). விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் சம்பவத்தன்று தனது வீட்டிலிருந்து அதே பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்கு நடந்து சென்றார். அப்போது சாலை ஓரமாக சென்ற சாமிகண்ணு மீது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் வேகமாக மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தனர். இதைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் திருநாவலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த திருநாவலூர் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையிலான போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாமி கண்ணுவை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகி ச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக் காக விழுப்புரம் முண்டி யம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி சாமிகண்ணு பரிதாபமாக இருந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த விபத்தை ஏற்படுத்தி மோட்டார் சைக்கிளை விட்டு தப்பி ஓடிய நபரை வலை வீசி தேடி வருகின்றனர். மேலும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • கனியாமூர் பள்ளி கலவர வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • சிறப்பு புலனாய்வு குழு போலீசார் வீடியோ காட்சிகளின் அடிப்படையிலும், வலைதளங்களை ஆய்வு செய்தும் கைது செய்துள்ளனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே ஏர்வாய் பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் வல்லரசு (வயது 20). இவர் வாட்ஸ் அப் குழுக்கள் அமைத்து அதில் நூற்றுக்கணக்கான உறுப்பினர்களை சேர்த்து பள்ளியில் கலவரம் செய்ய தூண்டும் வகையில் தகவல்கள் கருத்துக்களை பதிவு செய்து உள்ளார்.எனவே போலீசார் இவரை கைது செய்தனர். கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் ஐவதக்குடி சமத்துவபுரத்தை சேர்ந்த ஞானபிரகாசம் (41). இவர் கலவரத்தினை தூண்டு விதமாக செயல்பட்டார். எனவே சிறப்பு புலனாய்வு குழு போலீசார்வீடியோ காட்சி களின் அடிப்ப டையிலும், வலைதளங்களை ஆய்வு செய்தும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 2பேரையும் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி காவலுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    • மாணவி உடலில் காயங்கள் அதிகமாக இருப்பது தெரிய வந்தது.
    • தமிழக முதலமைச்சரை 27-ந் தேதி சந்திக்க உள்ளோம்.

    கடலூர் மாவட்டம் வேப்பூரை அடுத்த பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் மகள் ஸ்ரீமதி (வயது 17). கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.

    மாணவி உடல் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற தடயவியல் நிபுணர், அரசு டாக்டர்கள் 3 பேர் கொண்ட குழு மாணவியின் உடலை கடந்த மாதம் 19-ந் தேதியன்று மறு பிரேத பரிசோதனை செய்தது.

    சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மாணவி ஸ்ரீமதியின் 2 பிரேத பரிசோதனை முடிவுகளையும் ஆய்வு செய்த புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் 3 பேர் கொண்ட  குழு, தங்கள் ஆய்வறிக்கையை, மூடி முத்திரையிட்ட உறையில் விழுப்புரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

    இந்நிலையில் மாணவி ஸ்ரீமதி தரப்பு வழக்கறிஞர் காசி விஸ்வநாதன் கூறியதாவது, மாணவி ஸ்ரீமதியின் பிரேத பரிசோதனை இரண்டு அறிக்கைகளையும் மருத்துவர்களிடம் காண்பித்தோம். இதில் முதல் மற்றும் 2 வது பரிசோதனைகளில் சில வேறுபாடுகள் இருப்பது தெரியவந்தது. முதல் பிரேத பரிசோதனையை விட 2 வது பரிசோதனையில் உடலில் காயங்கள் அதிகமாக இருப்பது தெரிய வந்தது.

    அதுபோல மாணவி பலவந்த படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. இதனால் இதில் சந்தேகம் வழுவாக உள்ளது. முதல் பிரேத பரிசோதனை அனுபவம் இல்லாத மருத்துவர்களை வைத்து அவசர கதியில் செய்யப்பட்டுள்ளது.2 வது பிரேத பரிசோதனை சிறப்பு மருத்துவர்களை வைத்து செய்யப்பட்டுள்ளது.

    இரண்டு அறிக்கை முடிவுகளும் மருத்துவ நிபுணர்களிடம் கொடுத்து ஆய்வு செய்யப்படும். தமிழக முதலமைச்சரை வருகிற 27-ந்தேதி (சனிக்கிழமை) சந்திக்க உள்ளோம்.சந்திக்க வாய்ப்பு கிடைக்கா விட்டால் மாணவியின் பெற்றோர் நடைபயணத்தை மேற்கொள்வார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • திருநாவலூர் அருகே மின்மோட்டார் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • சம்பவத்தன்று நேற்று பரமசிவனின் மின் மோட்டார் மற்றும் வயர்களை அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் திருடி சென்றுள்ளார்.

    கள்ளக்கறிச்சி:

    திருநாவலூர் அருகே அயன் வேலூர் பகுதியை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 24) விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். இந்நிலையில் இவரது வீட்டிற்கு மின் மோட்டார் மூலம் போர் வசதி செய்துள்ளார். சம்பவத்தன்று நேற்று பரமசிவனின் மின் மோட்டார் மற்றும் வயர்களை அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் திருடி சென்றுள்ளார். இது குறித்து பரமசிவம் திருநாவலூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் திருநாவலூர் சப் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் வழக்கு பதிவு செய்து மின்மோட்டாரை திருடி சென்ற வெங்கடேசனை போலீசார் களமருதூர் பஸ் நிலையத்தில் கையும் களவுமாக பிடித்தனர். மேலும் அவனிடம் விசாரணை செய்து கைது செய்தனர். மின்மோட்டார் பறிமுதல் செய்யப்பட்டது.

    • ஆம்னி பஸ் ,பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது.
    • தப்பி ஓடிய ஆம்னி பஸ் டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே எடைக்கால் காவல் நிலைய த்திற்கு உட்பட்ட சாத்தனூர் பஸ் நிறுத்தத்தின் சாலை ஓரமாக நேற்று நள்ளிரவில் 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி ஆம்னி பஸ் ஒன்று சென்றது. அப்போது சாத்தனூர் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரமாக நடந்து சென்ற அந்த வாலிபர் மீது வேகமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலே அந்த வாலிபர் இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த எடைக்கல் போலீசின் சப் இன்ஸ்பெக்டர் கணபதி தலைமையிலான போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக சேர்த்தனர். இதுகுறித்து உளுந்தூர்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய ஆம்னி பஸ் டிரைவரை வலை வீசி தேடி வருகின்றனர். ஆம்னி பஸ் பறிமுதல் செய்யப்பட்டது. 

    • நித்யா (வயது 21) என்பவருக்கும் கடந்த 4 மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
    • வருவாய் கோட்டாட்சியர் பவித்ரா விசாரணை செய்து வருகிறார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே விளம்பார் கிராமத்தைச் சேர்ந்தரங்கன் மகன் ஈஸ்வரமூர்த்தி (வயது 29) சென்னையில் லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் சேலம் மாவட்டம்ஆத்தூர் அருகே அம்மாபாளையம் பகுதியை சேர்ந்தமுருகேசன் மகள் நித்யா (வயது 21) என்பவருக்கும் கடந்த 4 மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. நித்யா 2 மாத கர்ப்பி ணியாகஇருந்ததால் அடிக்கடி வாந்தி, மயக்கம் இருந்துள்ளது. நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது நித்யா தூக்கிட்டு கொண்டார். அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோ தனை செய்த மருத்துவர்கள் நித்யா இறந்து போனதாக கூறினர். இதுகுறித்து நித்தியாவின் தாய் பத்மாவிற்கு உனது மகள் நித்யா இறந்து போனதாக தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து வந்த அவர் தனது மகள் இறப்பில் சந்தேகம்உள்ளதாக கள்ளக்குறிச்சி போலீசில் புகார் அளித்துள்ளார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். நித்தியாவுக்கு திருமணம் ஆகி 4 மாதமே ஆவதால் வருவாய் கோட்டாட்சியர் பவித்ரா விசாரணை செய்து வருகிறார்.

    ×