

கள்ளச்குறிச்சி:
கள்ளச்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே பகண்டை கூட்டுரோடு அடுத்த இளையனார்குப்பத்தை சேர்ந்தவர் ராஜவேல். அவரது மனைவி மாலா. இவர் சம்பவத்தன்று தனது நிலத்தை டிராக்டர் மூலம் உழுவதற்கு சென்றார். அவரை அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் மனைவி அலமேலு, பூஜா, வசந்தா, சுப்பிரமணியன் ஆகியோர் தடுத்து கொலை மிரட்டல் விடுத்தார். நிலப்பிரச்சினையால் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக இந்த தகராறு நடந்தது. இது குறித்து இரு தரப்பினரும் பகண்டை கூட்டுரோடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதில் மாலா கொடுத்த புகாரின் பேரில் அலமேலு, பூஜா, வசந்தா, சுப்பிரமணியன் ஆகியோர் மீதும், ரமேஷ் அலமேலு கொடுத்த புகாரின் பேரில் ராஜவேல், மாலா, அமுதா, சண்முகப்பிரியா ஆகியோர் மீதும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.