கள்ளக்குறிச்சி அருகே 2 மாத கர்ப்பிணி சாவில் மர்மம்: போலீசில் தாய் புகார்

நித்யா (வயது 21) என்பவருக்கும் கடந்த 4 மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது.வருவாய் கோட்டாட்சியர் பவித்ரா விசாரணை செய்து வருகிறார்.
 இறந்த  நித்யா.
 இறந்த நித்யா.
Published on

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி அருகே விளம்பார் கிராமத்தைச் சேர்ந்தரங்கன் மகன் ஈஸ்வரமூர்த்தி (வயது 29) சென்னையில் லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் சேலம் மாவட்டம்ஆத்தூர் அருகே அம்மாபாளையம் பகுதியை சேர்ந்தமுருகேசன் மகள் நித்யா (வயது 21) என்பவருக்கும் கடந்த 4 மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. நித்யா 2 மாத கர்ப்பி ணியாகஇருந்ததால் அடிக்கடி வாந்தி, மயக்கம் இருந்துள்ளது. நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது நித்யா தூக்கிட்டு கொண்டார். அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோ தனை செய்த மருத்துவர்கள் நித்யா இறந்து போனதாக கூறினர். இதுகுறித்து நித்தியாவின் தாய் பத்மாவிற்கு உனது மகள் நித்யா இறந்து போனதாக தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து வந்த அவர் தனது மகள் இறப்பில் சந்தேகம்உள்ளதாக கள்ளக்குறிச்சி போலீசில் புகார் அளித்துள்ளார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். நித்தியாவுக்கு திருமணம் ஆகி 4 மாதமே ஆவதால் வருவாய் கோட்டாட்சியர் பவித்ரா விசாரணை செய்து வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com