என் மலர்tooltip icon

    கள்ளக்குறிச்சி

    • கனியாமூர் தனியார் பள்ளியில் மாணவி ஸ்ரீ மதி உயிரிழப்பிற்க்கு நீதி கேட்டு போரட்டம் நடைபெற்றது.
    • காவல்துறை வாகனங்கள் உட்பட 55 வாகனங்கள் தீயிட்டு கொளுத்தபட்டது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே உள்ள கனியாமூர் தனியார் பள்ளியில் படித்து வந்த 12 ம் வகுப்பு மாணவி ஸ்ரீ மதி உயிரிழப்பிற்க்கு நீதி கேட்டு கடந்த 17 -ந் தேதியன்று போரட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் கலவரமாக மாறிய நிலையில் பள்ளி சொத்துக்கள் மற்றும் பொது சொத்துக்களான காவல்துறை வாகனங்கள் உட்பட 55 வாகனங்கள் தீயிட்டு கொளுத்தபட்டது.

    தீயில் கருகி சேதமடைந்த இரு சக்கர வாகனங்கள், பஸ்கள், காவல் துறை வாகனங்கள் ஆகியவையின் பதிவு எண்களை கண்டுபிடித்து, வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கின் கீழ் எந்தெந்த வாகனங்கள் உள்ளது என்பதை கள்ளக்குறிச்சி நீதித்துறை நடுவர் நீதிபதி முகமது அலி நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார். உடன் கள்ளக்குறிச்சி மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வம் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் ஆகியோர் வாகன பதிவு எண்கள், வாகனத்தின் காப்பீடு ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.

    • சாமிதுரை தென்னாப்பிரிக்காவில் கிரேன் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்தார்.
    • தனது மனைவி ஆனந்தி மற்றும் 2 குழந்தைகளுடன் தனது மாமனார் ஊரான கடலூர் மாவட்டம் வலசை கிராமத்திற்கு சென்றுவிட்டார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே கொங்கராயபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சாமிதுரை (வயது 33) தென்னாப்பிரிக்காவில் கிரேன் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்தார்.  இவர் கடந்த 5 நாட்களுக்கு முன்பு கொங்கராயபாளையம் திரும்பினார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை தனது மனைவி ஆனந்தி மற்றும் 2 குழந்தைகளுடன் தனது மாமனார் ஊரான கடலூர் மாவட்டம் வலசை கிராமத்திற்கு சென்றுவிட்டார். 

    • ராஜதுரைக்கும், மாரிமுத்து என்பவருக்கும் தேர்தல் முன்விரோதம் இருந்து வந்தது.
    • சம்பவத்தன்றும இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது.

    கள்ளக்குறிச்சி: 

    சங்கராபுரம் அருகே சேஷசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜதுரை(45). இவருக்கும், அதே ஊரை சேர்ந்த மாரிமுத்து(51) என்பவருக்கும் தேர்தல் முன்விரோதம் இருந்து வந்தது. இது தொடர்பாக சம்பவத்தன்றும் இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது. இது குறித்து இரு தரப்பினரும் தனித்தனியாக கொடுத்த புகாரின் பேரில் சேஷசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து, ராஜதுரை, பூபதி, மாரியம்மாள், ராஜா, ரவி, ராஜீவ்காந்தி, பாஸ்கர் ஆகியோர் மீது சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள், மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.
    • இலவச பயிற்சி வகுப்புகள் 01.09.2022 முதல் வார நாட்களில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

    கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வழியாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள், மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு காலி பணி இடங்களுக்கான அரசுப்பணியாளர் 1089 நில அளவையர், வரைவாளர் தேர்விற்கும், தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் 889 பணியிடத்திற்கான மருந்தாளர் தேர்விற்கும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. நில அளவையர், வரைவாளர் பணிக்காலியிடங்களுக்கு இணையதள வாயிலாகவும், மருந்தாளர் பணிக்காலியிடங்களுக்கு இணையதள வாயிலாகவும்  விண்ணப்பிக்கலாம்.

    அதனை தொடர்ந்து, இத்தேர்வுகளுக்கு தயாராகும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த போட்டித் தேர்வர்கள் பயனடையும் வகையில் அதற்கான இலவச பயிற்சி வகுப்புகள் 01.09.2022 முதல் வார நாட்களில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ளது. தேர்வாணையத்தால் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் நில அளவையர், வரைவாளர் அல்லது மருந்தாளர் தேர்விற்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப நகல், புகைப்படம் மற்றும் ஆதார் எண் ஆகிய விவரங்களுடன் கள்ளக்குறிச்சி, 18/63 நேப்பால் தெருவில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரில் தொடர்புக் கொண்டு தங்களின் விவரத்தினை தெரிவித்து பதிவுசெய்து கொள்ளலாம். இப்பயிற்சி வகுப்புகளில் அரசு பணிக்கு தயாராகிவரும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த நபர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்ததையொட்டி அவரது பெற்றோர் நீதி கேட்டு போராட்டம் நடத்தினர்.
    • கள்ளக்குறிச்சி கலவரத்தின்போது சேதமான பொருட்கள் குறித்தும் கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்து வந்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் படித்து வந்த பிளஸ்-2 மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார். இதையொட்டி அவரது பெற்றோர் நீதி கேட்டு போராட்டம் நடத்தினர்.

    ஆனால் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி பல சமூக அமைப்புகள் கடந்த மாதம் 17-ந் தேதி ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டம் கலவரமாக வெடித்தது. அப்போது போலீஸ் வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டது.

    தகவல் அறிந்த போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேரடியாக தலையிட்டு கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவந்தார். எனினும் கலவரத்தில் ஈடுபட்டதாகவும், தூண்டியதாகவும், இதற்கு காரணமாக இருப்பவர்களையும் கைது செய்ய சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது.

    இந்த குழுவினர் இதுவரை 358 பேரை கைது செய்துள்ளனர். தொடர்ந்து கைது நடவடிக்கை நடந்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க கலவரத்தின்போது சேதமான பொருட்கள் குறித்தும் கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்து வந்தனர்.

    தற்போது முதல்கட்ட அறிக்கையை கண்காணிப்பு குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த அறிக்கையில் கலவரத்தின்போது 3 கோடியே 45 லட்சத்து 83 ஆயிரத்து 72 ரூபாய் மதிப்பில் பொது சொத்துக்கள் சேதமானதாக வெளியிடப்பட்டுள்ளது.

    தொடர்ந்து கணக்கிடும் பணி நடந்து வருகிறது.

    • கள்ளக்குறிச்சி பள்ளியின் முன்பு நடந்த போராட்டம் கலவரமாக வெடித்தது.
    • கலவரத்தின் போது போலீஸ் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி கலவரத்தின்போது கைது செய்யப்பட்ட 4 பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் ஸ்ரீமதி என்ற 12ம் வகுப்பு மாணவி மரணம் அடைந்ததையடுத்து, கடந்த மாதம் 17-ந் தேதி பள்ளி முன்பு போராட்டம் நடந்தது. இந்த போராட்டம் கலவரமாக வெடித்தது. இந்த கலவரத்தின் போது பள்ளியில் இருந்த பொருட்கள் மற்றும் போலீஸ் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

    கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி, தொடர்ந்து கைது நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்கள். இதுவரை 367 பேர் பேரை போலீசார் கைது செயதுள்ளனர்.

    இந்த நிலையில் கள்ளக்குறிச்சி கலவரத்தின்போது கைது செய்யப்பட்ட பூவசரன், பரமேஸ்வரன், வசந்தன், சஞ்சீவி ஆகிய 4 பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஓராண்டுக்கு சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இவர்களில் பூவரசன் என்பவர் மாடுகளை திருடியதற்காகவும், மற்ற 3 பேர் போலீசாரின் வாகனங்களுக்கு தீ வைத்ததாகவும் கைது செய்யப்பட்டவர்கள்.

    • சைடு வாய்க்கால் 8 லட்சம் மதிப்பீட்டில் போடப்பட்டது போடப்பட்ட மறுநாளே இடிந்து விழுந்தது .
    • மாவட்ட கலெக்டர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா திருநாவலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரும்பாக்கம் கிராமத்தில் சைடு வாய்க்கால் 8 லட்சம் மதிப்பீட்டில் போடப்பட்டது போடப்பட்ட மறுநாளே இடிந்து விழுந்தது . இதை பார்த்த பொது மக்கள் சமூக ஆர்வலர் கள் பலமுறை மாவட்ட கலெக்டருக்கும், வட்டார வளர்ச்சி அலுவலர்க ளுக்கும் தகவல் தெரிவித்தும் எந்த விதமான நடவடிக்கையும் இல்லை. இதை உடனடியாக மாவட்ட கலெக்டர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த கிராமத்தில் கழிவுநீர் அதிகம் தேங்கி இருப்பதால் மழைக்காலங்களில் வீடுகள் உள்ளே புகுந்து சேதம் ஏற்படும் நிலையில் இருக்கிறது.எனவே உடனடி யாக சரி செய்ய வேண்டும் என்றும் பொது மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா திருநாவலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரும்பாக்கம் கிராமத்தில் சைடு வாய்க்கால் 8 லட்சம் மதிப்பீட்டில் போடப்பட்டது போடப்பட்ட மறுநாளே இடிந்து விழுந்தது  இதை பார்த்த பொது மக்கள் சமூக ஆர்வலர் கள் பலமுறை மாவட்ட கலெக்டருக்கும், வட்டார வளர்ச்சி அலுவலர்க ளுக்கும் தகவல் தெரிவித்தும் எந்த விதமான நடவடிக்கையும் இல்லை. இதை உடனடியாக மாவட்ட கலெக்டர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த கிராமத்தில் கழிவுநீர் அதிகம் தேங்கி இருப்பதால் மழைக்காலங்களில் வீடுகள் உள்ளே புகுந்து சேதம் ஏற்படும் நிலையில் இருக்கிறது.எனவே உடனடி யாக சரி செய்ய வேண்டும் என்றும் பொது மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • நேற்று மாலை பெரியசெவலையில் இருந்து கொரட்டூரில் உள்ள ஏரிக்கு குளிக்க சென்றான்.
    • நீரில் மூழ்கி சம்பவ இடத்திலே இறந்தான்.

    கள்ளக்குறிச்சி:

    விழுப்புரம் மாவட்டம் பெரியசெவலை பகுதியை சேர்ந்த சீனு விவசாயி. இவரது மகன் சிம்பு அதே பகுதியில் படித்து வருகிறான். இவர் நேற்று மாலை பெரியசெவலையில் இருந்து கொரட்டூரில் உள்ள ஏரிக்கு குளிக்க சென்றான். அப்போது நீரில் மூழ்கி சம்பவ இடத்திலே இறந்தான். இது குறித்து தகவல் அறிந்த திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • ஜெயச்சந்திரன் அந்த பெண்ணிடம் சென்று உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
    • உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா பின்னல்வாடி பகுதியை சேர்ந்தவர் ெஜயச்சந்திரன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 18 வயது மைனர் பெண்ணிற்கும் பழக்கம் ஏற்பட்டது.இந்நிலையில் ஜெயச்சந்திரன் அந்த பெண்ணிடம் சென்று உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆசை வார்த்தை கூறி வீட்டிலிருந்து அந்த பெண்ணை கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. இது குறித்து அந்த பெண்ணின் தாய் உளுந்தூ ர்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகார் என்பதில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜி வழக்கு பதிவு செய்து ஜெயச்சந்திரனை வலைவீசி தேடி வருகின்றனர். 

    • கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
    • வீட்டின் பின்புறம் சாராயம் விற்பனை செய்ததாக அரசராம்பட்டு கிராமத்தை சேர்ந்த சக்திவேல் (51) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் ராமசாமி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, சேஷசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த செந்தில் (41) அதே பகுதியில் குன்று மேட்டு அருகில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்து, அவரிடமிருந்து 55 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். இதேபோல் வீட்டின் பின்புறம் சாராயம் விற்பனை செய்ததாக அரசராம்பட்டு கிராமத்தை சேர்ந்த சக்திவேல் (51) என்பவரை போலீசார் கைது செய்து, 60 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். மேலும் புதுப்பாலப்பட்டில் பூபதி (50), பாச்சேரி கிராமத்தில் சக்தி் (28), சங்கராபுரம் தாமோதரன் (21), ஊராங்காணியில் தண்ணீர் தொட்டி அருகே சாராயம் விற்றதாக வேலு (50) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

    • சின்னசேலம் தனியார் பள்ளி கலவர வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்பட காட்சிகளை வைத்து அவர்களை சிறப்பு புலனாய்வு செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் வளையமாதேவி கிராமம் தெற்கு தெருவை ேசர்ந்தவர் பிரகாஷ் (வயது 24) ,கள்ளக்குறிச்சி வட்டம் உலகங்காத்தான் என்ற கிராமத்தைச் சேர்ந்த இந்திரா நகர் சுப்பிரமணி செந்தமிழன் (27), சின்னசேலம் வட்டம் பங்காரம் கிராமம் தெற்கு தெருவை சேர்ந்த முரளி. இவர்கள் 3 பேரும் சின்னசேலம் பள்ளி கலவரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டனர். சிறப்பு புலனாய்வு குழு போலீசார் குற்றவாளிகள் கலவரத்தில் ஈடுபட்டு, போலீஸ் வாகனத்தின் மீது கற்களை வீசி சேதப்படுத்தியது தொடர்பாக வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்பட காட்சிகளை வைத்து அவர்களை சிறப்பு புலனாய்வு போலீசார் இன்று கைது செய்து அவர்களை கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினார்கள்.

    • கூடுதல் மாவட்ட முதன்மை நீதிபதி கீதாராணி தலைமை தாங்கினார்.
    • சட்டப்பிரச்சினைகள் குறித்து ஆலோசனைகளை வழங்கிடவும் இந்த குழு செயல்படுகிறது.

     கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சட்டவி ழிப்புணர்வு ஆலோசனைக் குழு தொடர்பாக மாவட்ட அலுவலர்களுடன் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டகலெக்டர் ஷ்ரவன் குமார்முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது)சுரேஷ் வரவேற்றார். கூடுதல் மாவட்ட முதன்மை நீதிபதி கீதாராணி தலைமை தாங்கி பேசியதாவது:- நலிவடைந்த மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை நேரடியாக வழங்கிடவும், பொதுமக்களு க்கிடையேயான பிரச்ச னைகளை மக்கள் நீதிமன்றம் மூலமாக தீர்த்துக்கொள்ள வழிகாட்டுவதற்காகவும், வழக்கறிஞர்கள் இலவசமாக வழக்குகளை நடத்திடவும், சட்டப்பிரச்சினைகள் குறித்து ஆலோசனைகளை வழங்கிடவும் இந்த குழு செயல்படுகிறது. மேலும் பொதுமக்கள் நீதிமன்றத்தில் நீதிபதிகள் முன்பு தங்கள்வழக்குகளை சமரசம் மற்றும் சுமூக முறையில் விரைவில் தீர்வு காண்பதற்காக தேசிய மக்கள் நீதிமன்றம் எற்படுத்தப்பட்டு உள்ளது. இதன் வாயிலாகவும், தங்கள் வழக்குகளை சுமூக முறையில்தீ ர்த்துக்கொள்ளலாம்.

    எவ்வித சட்ட ஆலோசனைகள் மற்றும் சட்ட உதவி தேவைப்பட்டால் மாவட்டசட்டப்பணிகள் ஆணைக்குழு வாயிலாக தொடர்பு கொண்டு தீர்வு காணலாம். மேலும் கூடுதல் விபரங்கள் அறிய மாவட்ட சட்டப்பணிகள் ஆணை க்குழு விழு ப்புரம் 04146-228000, கள்ளக்குறிச்சி வட்டசட்டப்பணிகள் குழு 04151-226730, உளுந்தூர்பேட்டை சட்டப்ப ணிகள்குழு 04149-220433, திருக்கோவிலூர் வட்ட சட்டப்பணிகள் குழு 04153-253970 மற்றும் சங்கராபுரம் வட்ட சட்டப்பணிகள் குழு04151-235033 ஆகிய தொலைபேசி எண்கள் வாயிலாக தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் பேசினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு, மாண்பமை முதன்மை சார்பு வீரணன், உதவி ஆணையர் (கலால்) இராஜவேல், வேளாண்மை இணைஇயக்குநர் வேல்விழி, துணை இயக்குநர் சுகாதா ரப்பணிகள் இராஜா மற்றும் பல்வேறு துறைகளைச் சார்ந்த அரசு அதிகாரிகள் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.முடிவில் மாவட்ட சட்ட ப்பணிகள் ஆணை க்குழு செயலர் விஜயகுமார் நன்றி கூறினார்.

    ×