சங்கராபுரம் அருகே முன்விரோத தகராறில் 8 பேர் மீது வழக்கு பதிவு

ராஜதுரைக்கும், மாரிமுத்து என்பவருக்கும் தேர்தல் முன்விரோதம் இருந்து வந்தது.சம்பவத்தன்றும இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது.
சங்கராபுரம் அருகே முன்விரோத தகராறில் 8 பேர் மீது வழக்கு பதிவு
Published on

கள்ளக்குறிச்சி: 

சங்கராபுரம் அருகே சேஷசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜதுரை(45). இவருக்கும், அதே ஊரை சேர்ந்த மாரிமுத்து(51) என்பவருக்கும் தேர்தல் முன்விரோதம் இருந்து வந்தது. இது தொடர்பாக சம்பவத்தன்றும் இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது. இது குறித்து இரு தரப்பினரும் தனித்தனியாக கொடுத்த புகாரின் பேரில் சேஷசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து, ராஜதுரை, பூபதி, மாரியம்மாள், ராஜா, ரவி, ராஜீவ்காந்தி, பாஸ்கர் ஆகியோர் மீது சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com