உளுந்தூர்பேட்டை அருகே மைனர் பெண்ணை கடத்தி திருமணம் செய்த வாலிபர் போலீசில் தாய் புகார்

ஜெயச்சந்திரன் அந்த பெண்ணிடம் சென்று உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார். உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
உளுந்தூர்பேட்டை அருகே மைனர் பெண்ணை கடத்தி திருமணம் செய்த வாலிபர்  போலீசில் தாய்  புகார்
Published on

கள்ளக்குறிச்சி: 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா பின்னல்வாடி பகுதியை சேர்ந்தவர் ெஜயச்சந்திரன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 18 வயது மைனர் பெண்ணிற்கும் பழக்கம் ஏற்பட்டது.இந்நிலையில் ஜெயச்சந்திரன் அந்த பெண்ணிடம் சென்று உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆசை வார்த்தை கூறி வீட்டிலிருந்து அந்த பெண்ணை கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. இது குறித்து அந்த பெண்ணின் தாய் உளுந்தூ ர்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகார் என்பதில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜி வழக்கு பதிவு செய்து ஜெயச்சந்திரனை வலைவீசி தேடி வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com