என் மலர்
கள்ளக்குறிச்சி
- வேளாண்மை கணக்கெடுப்பு பணி 1970-ம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- நீர்ப்பாசன வசதிகள் மற்றும் இடு பொருட்களின் பயன்பாடு போன்றவற்றின் விவரங்கள் சேரிக்கப்ப டவுள்ளது.
கள்ளக்குறிச்சி, செப்.3-
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட புள்ளியியல் துறையின் சார்பில், 11-வது வேளாண்மை கணக்கெடுப்பு தொடர்பான மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கி பேசினார்.அப்போது அவர் பேசியதாவது:- இந்தியாவில் வேளாண்மை மற்றும் விவசா யிகள் நல அமை ச்சகத்தின் மூலம் வேளா ண்மை கணக்கெடுப்பு பணி 1970-ம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வேளாண் கணக்கெடுப்புகள் இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடை பெற்று வந்தது. தற்போது, 5 ஆண்டு களுக்கு ஒருமுறையாக 2021-2022-ம் ஆண்டை அடிப்படையாக கொண்டு, 11-வது வேளாண் கணக்கெடுப்புப் பணி நடைபெறவுள்ளது. இந்த கணக்கெடுப்பின் நோக்கம் புள்ளி விவரங்களின் அடிப்படையில் புதிய வேளாண் வளர்ச்சித் திட்டங்கள் வகுப்பதற்கும் மதிப்பீடு செய்வதற் கும் பயன்படுகிறது. கணக்கெடுப்பின் மூலம் கைப்பற்றின் வகைகள், கைப்பற்றின் எண்ணிக்கைகள் நிலப் பயன்பாடு, பயிரிடும் வகைகள், நீர்ப்பாசன வசதிகள் மற்றும் இடு பொருட்களின் பயன்பாடு போன்றவற்றின் விவரங்கள் சேரிக்கப்படவுள்ளது.
அனைத்து வருவாய் கிராமங்களிலும், நில ஆவணப்பதிவேடுகளில் உள்ள விவரங்களின் அடிப்படையில், விவரங்களை மறு அட்டவணைப்படுத்திடும் பொருட்டு ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள அனைத்து சர்வே, சப் டிவிஷன் எண்களையும் ஆராய்ந்து கைப்பற்றுகளின் எண்ணிக்கை மற்றும் பரப்பு விவரங்களை வகுப்பு வாரியாக சேகரிக்கப்படவுள்ளது. முதல்முறையாக கணினிமயமாக்கப்பட்ட நில ஆவண பதிவேடுகளை அடிப்படையாக கொண்டு, வேளாண் கணக்கெடுப்புப் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இப்பணிக்காக பிரத்யேகமாக வடிவ மைக்கப்பட்ட மி ன்பொருள் செயலியை பயன்ப டுத்தி, கைப்பேசி மற்றும் கையடக்கக் கணினி, மடிக்கணினி வழியே கணக்கெடுப்புப்பணி நடை பெறவுள்ளது. மிக முக்கியமான பணிகளில் ஒன்றான வேளாண் கணக்கெடுப்புப் பணியினை தொடர்புடைய அலுவலர்கள் சிறப்புடன் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட புள்ளியியல் துணை இயக்குநர் லதா, கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் பவித்ரா, திருக்கோவிலூர் வருவாய் கோட்டாட்சியர் யோகலட்சுமி, தாசில்தா ர்கள், வட்டார புள்ளியில் ஆய்வாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- சின்னசேலம் அருகே கணவன் கண்முன் பெண்ணிடம் தாலியை கொள்ளையர்கள் பறித்து சென்றனர்.
- அதிர்ச்சி அடைந்த செல்வகுமாரும் மகாலட்சுமியும் சத்தம் போட்டு அவர்களை பிடிக்க முயற்சி செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டம் கூகையூர் கிராமத்தை சேர்ந்தவர் மகாலட்சுமி (வயது 35). இவர் சம்பவத்தன்று தனது கணவர் செல்வகுமாரிடம் வீட்டு வாசல் முன்பு பேசிக்கொண்டிருந்தனர். அப்பொழுது மர்ம நபர்கள் 4 பேர் மகாலட்சுமியின் பின்புறமாக அவருக்கு தெரியாமல் வந்தனர். கண் இமைக்கும் நேரத்தில் மகாலட்சுமியின் கழுத்தில் இருந்த 7 பவுன் தாலி சங்கிலியை பறித்துக் கொண்டு ஓடி தப்பி சென்றனர். அதிர்ச்சி அடைந்த செல்வகுமாரும் மகாலட்சுமியும் சத்தம் போட்டு அவர்களை பிடிக்க முயற்சி செய்தனர். ஆனாலும் அவர் கையில் சிக்காமல் தப்பி ஓடி விட்டார்கள். இது குறித்து கீழ்குப்பம் போலீஸ் நிலையத்தில் மகாலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கை பதிவு செய்து 7 பவுன் தாலி சங்கிலியை பறித்துக் சென்ற4 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
- ஆயிரம் மெட்ரிக் டன் அளவு கொண்ட ஒரே குடோன் மட்டுமே ஒழுங்கு விற்பனை கூடம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
- தரமான சீட்டுகளை அகற்றி விட்டு மிகவும் தரமற்ற தகர சீட்டுகளை பொருத்தியதால் இது போன்ற பாதிப்பு ஏற்படுகிறது.
சின்னசேலத்தில் உள்ள ஒழுங்கு விற்பனை கூடத்தில் 5 குடோன்கள் இருக்கின்றது. இதில் ஆயிரம் மற்றும் 500 மெட்ரிக் டன் அளவு கொண்ட குடோன்கள் தமிழ்நாடு வாணிப நுகர் பொருள் கிடங்கின் கட்டுப்பாட்டில் உள்ளது. 1200 மற்றும் ஆயிரம் மெட்ரிக் டன் அளவு கொண்ட குடோன் பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. மீதமுள்ள ஆயிரம் மெட்ரிக் டன் அளவு கொண்ட ஒரே குடோன் மட்டுமே ஒழுங்கு விற்பனை கூடம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த ஒரே குடோனும் புதுப்பித்தல் என்ற பெயரில் தரமான மேற்கூரை சீட்டுகளை அகற்றிவிட்டு தரமற்ற தகர சீட்டுகளை கொண்டு மேற்கூரையாக போடப்பட்டுள்ளது. சமீபத்தில் அடித்த மழை காற்றின் காரணமாக தரமற்ற சீட்டுகள் தூக்கி வீசப்பட்டு சேதமடைந்தது. பிறகு இந்த கமிட்டியில் பணியாற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் முன்வந்து பறந்த தகர சீட்டை எடுத்து ஓட்டை விழுந்த இடத்தில் தற்காலிகமாக அதன் மேல் கல் வைத்து மூடி வைக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆங்காங்கே ஓட்டைகள் ஏற்பட்டு மழை நீர் உள்ளே வருவதால் விவசாயிகளின் தானிய மூட்டைகள் நனைந்து விவசாயிகளுக்கு பெருமளவு பாதிப்பு ஏற்படுகிறது.
கடந்த காலங்களில் குடோன்களின் மேற்கூ ரையை தரமாகவும் உறுதியாகவும் விவசாயிகளுக்கு நம்பிக்கை கொடுக்கும் வகையில் போடப்பட்டு வந்த நிலையில் தற்போது அது தலைகீழாக மாறி பணம் நோக்கமாகக் கொண்டு தரமான சீட்டுகளை அகற்றி விட்டு மிகவும் தரமற்ற தகர சீட்டுகளை பொருத்தியதால் இது போன்ற பாதிப்பு ஏற்படுகிறது. சிறிய காயம் பெரும் தொந்தரவு என்பது போல விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள்.இதுபோன்ற தரமற்ற சீட்டுகளை பொருத்துவதால் அரசாங்கத்தின் பணமும் வீணடிக்கப்பட்டு விவசாயிகளின் உழைப்பும் வீணடிக்கப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு தரமான சீட்டு பொருத்தி விவசாயிகளின் தானிய மூட்டைகளை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- 2018-ம் ஆண்டு முதல் தேசிய ஊட்டச்சத்து மாத விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
- 2022-ம் ஆண்டிற்கான தேசிய ஊட்டச்சத்து மாதத்தின் கருப்பொருள் "போஷான் பஞ்சாயத்து” ஆகும்.
கள்ளக்குறிச்சி, செப்.2-
கள்ளக்குறிச்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்துறையின் சார்பில், தேசிய ஊட்டச்சத்து மாதவிழாவிற்கான விழிப்புணர்வு பேரணி மற்றும் இரத்தசோகை குறைபாடு குறித்து விளக்கும் காணொலி வாகனத்தினை மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது:-மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்துறையின் சார்பில், ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்த 2018-ம் ஆண்டு முதல் தேசிய ஊட்டச்சத்து மாத விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழிப்புணர்வு விழாவில், உள்ளாட்சி அமைப்புகள், அரசுத்துறையினர், சமூக நிறுவனங்கள், தனியார் தொண்டு நிறுவனங்கள் ஆகியோருடன் ஒருங்கிணைந்து ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வினை ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டு செல்லும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், 2022-ம் ஆண்டிற்கான தேசிய ஊட்டச்சத்து மாதத்தின் கருப்பொருள் "போஷான் பஞ்சாயத்து" ஆகும். பெண்களின் ஆரோக்கியம், குழந்தைகள் கல்வி, பாலினம் உணர்திறன், நீர் பாதுகாப்பு மேலாண்மை, மலைவாழ் பகுதிகளில் வாழும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாரம்பரிய உணவுகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்து வதாகும்.
மேலும் மாவட்டத்தில் பெண்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் ஊட்டச்சத்து மிக்க உணவுப்பொருட்களை உட்கொண்டு, ஆரோக்கியத்தை பேணிக்காத்திட வேண்டும் என மாவட்ட கலெக்டர் கூறினார். தொடர்நது 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களிடையே ஊட்டச்சத்து மிக்க உணவினை உட்கொள்வதன் அவசியம் மற்றும் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் பேரணி தொடங்கி வைக்கப்பட்டது. பேரணி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி முக்கிய வீதிகளின் வழியாக சென்று மந்தவெளியில் நிறைவடைந்தது. இதில் குழந்தைகள் நல மைய அமைப்பாளர்கள், பணியாளர்கள் கலந்து கொணடு பல்வேறு விழிப்பு ணர்வுகள் அடங்கிய பதாகை களை கையில் ஏந்தியவாறு கோஷமிட்டு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதேபோல் கிராமப்புற மக்கள் எளிதில் ஊட்ட ச்சத்து குறைபாடு தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்வதற்கும், ஊட்டச்சத்து மிக்க உணவு களை கண்டறிந்து உட்கொள்வது தொடர்பான விழிப்புணர்வு காணொலி வாகனம் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளுக்கும் சென்று, பொதுமக்களுக்கு இரத்த சோகை ஏற்படக் காரணமாக உள்ள இரும்பு சத்து நிறைந்த உணவுப் பொருட்கள் உட்கொள்ளா மை, குடற்புழு பாதிப்பு, தன்சுத்தம் பேணாமல் இருத்தல், கழிவறையை பயன்படுத்தாமல் இருத்தல், செருப்பு அணியாமல் நடத்தல் போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலர் செல்வி, குழந்தைகள் நல அமைப்பாளர்கள், பணி யாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- திருநாவலூர் அருகே பெண்ணை தாக்கிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
- இரு சக்கர வாகனத்தில் சென்ற அதே கிராமத்தைச் சேர்ந்தவர் பார்த்திபன் என்பவர் இடித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி:
திருநாவலூர் அருகே மட்டிகைகிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன். அவரது மனைவி வெண்ணிலா (வயது 37). இவர் சம்பவத்தன்று தனது வீட்டு வாசலில் சாணம் போட்டுவிட்டு வாசலில் பெருக்கிக் கொண்டிருந்தார் .அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்ற அதே கிராமத்தைச் சேர்ந்தவர் பார்த்திபன் என்பவர் இடித்துள்ளார். இது குறித்து கேட்டதற்கு பார்த்திபன், அவரது நண்பர் பூவரசன், பட்டு ரோஜா, பார்வதி ஆகிய 4 பேர் சேர்ந்து வெண்ணிலாவை ஆபாசமாக திட்டி தாக்கி கொலை மிரட்டல் கொடுத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வெண்ணிலா கொடுத்த புகாரின் பேரில் திருநாவலூர் சப்- இன்ஸ்பெக்டர் சவுக்கத் அலி வழக்கு பதிவு செய்து 4 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
- கொங்கு திருமண மண்டபத்தில் நடைபெறும் உறவினர் வீட்டு திரும ணத்திற்கு இன்று காலை சென்றுள்ளனர்.
- மற்றொரு ஆம்புலன்ஸ் மூலம் கனகசபை உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி அருகே உள்ள மாடூர் கிராமத்தைச் சேர்ந்த கனகசபை (வயது 50), மருது (45). இவர்கள் இருவரும் இரு சக்கர வாகனத்தில் சின்னசேலம் அருகே சேலம் டு சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சா லையில் அமைந்துள்ள கொங்கு திருமண மண்ட பத்தில் நடைபெறும் உறவினர் வீட்டு திரும ணத்திற்கு இன்று காலை சென்றுள்ளனர். இந்நிலையில் கொங்கு திருமணம் மண்டபம் அருகே தேசிய நெடுஞ்சா லையை கடந்து செல்லும் பொழுது சேலத்திலிருந்து கள்ளக்குறிச்சிக்கு செல்லும் ஏ. ஆர். ஆர் வள்ளிகந்தன் என்ற பேருந்து அதிவேகமாக வந்து கனகசபை இருசக்கர வாகனம் மீது மோதி 50 அடிக்கு தரதரவென்று இழுத்துச் சென்றது இதில் கனகசபை தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே துடித்துடித்து இறந்து போனார் மருதுக்கும் பலத்த அடிபட்டது.
அருகில் இருந்தவர்கள் உடனடியாக சின்னசேலம் காவல் நிலையத்துக்கு தெரியப்படுத்தினார்கள்.விரைந்து வந்த போலீசார் 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து மருதுவை கள்ளக்குறிச்சி அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்பு மற்றொரு ஆம்புலன்ஸ் மூலம் கனக சபை உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுபோன்ற தனியார் பேருந்துகள் அதிவேகமாக ஊருக்குள் வருவதால் அப்பாவி பொதுமக்கள் பலியாகி றார்கள். எனவே சம்பந்த ப்பட்ட அதிகாரிகள் தனியார் பேருந்துகள் மீது நடவடி க்கை எடுக்க வே ண்டும் என்று சமூக ஆர்வ லர்கள் கோரிக்கை விடுத்து ள்ளனர்
- கிராமத்தைச் சேர்ந்தவர்கள் காலையில் வயல்வெளிக்கு சென்று பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
- விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகாஅருகே இருந்தை கிராமத்துக்கு சொந்தமான பெரிய ஏரியில் 45 வயது மதிக்கத்தக்க பெண் உடல் ஏரியில் மிதந்தது. இதனை அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் காலையில் வயல்வெளிக்கு சென்று பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி அவர்கள் திருநாவலூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இந்த தகவலின் பெயரில் திருநாவலூர் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையில் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆசைத்தம்பி, தனிப்பிரிவு ஏட்டு மனோகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். திருநாவலூர் தீயணைப்பு நிலைய அதிகாரி பாலகிருஷ்ணன் தலைமையில் கொண்ட குழு மிதந்து கிடந்த பெண் சடலத்தை மீட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இறந்து போன பெண் கற்பழித்து நீரில் கொலை செய்யப்பட்டு வீசிருக்கலாமா? நகைக்காக கொலை செய்திருக்கலாமா? என்று பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடைபெற்று வருகிறது.
- பங்காரம் கிராமத்தில் பெண்கள் கழிவறை செயல்படாத நிலையில் இருக்கின்றது.
- தொடர்ந்து மழை பெய்து கொண்டிருப்பதால் பெண்கள் காலை கடன் முடிப்பதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டம் பங்காரம் கிராமத்தில் பெண்கள் கழிவறை செயல்படாத நிலையில் இருக்கின்றது. கடந்த 2008-ம் ஆண்டு மக்கள் வரிப்பணத்தில் பல லட்சம் செலவில் பங்காரம் கிராமத்தில் பெண்களுக்கு கழிவறை கட்டப்பட்டது. ஆனால் சில வருடங்களாகவே போதிய பராமரிப்பு இல்லாததால் பெண்கள் கழிவறையை பயன்படுத்த முடியாத சூழ்நிலையில் உள்ளது. இதனால் பெண்கள் காலைக்கடன் முடிப்பதற்கு இடமில்லாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். கள்ளக்குறிச்சி, சின்னசேலம், பங்காரம், கனியாமூர், தொட்டியம், இந்திலி ஆகிய பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருப்பதால் திறந்த வெளியில் பெண்கள் காலை கடன் முடிப்பதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். பெண்களின் சிரமத்தை புரிந்து கொண்டு உடனடியாக சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும். பூட்டி இருக்கக்கூடிய கழிவறையை சுத்தம் செய்து பெண்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே பங்காரம் கிராமத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை இயங்கும் தொடக்கப்பள்ளி உள்ளது.
- நுழைவுவாயில் கதவு இல்லாததால் மிக எளிமையாக குழந்தைகள் சாலைக்கு வெளியே வரமுடியும்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே பங்காரம் கிராமத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை இயங்கும் தொடக்கப்பள்ளி உள்ளது இதில் 5 வயது முதல் 9வயது வரை உள்ள குழந்தைகள் சுமார் 30-க்கும் மேற்பட்டோர் படித்துக் கொண்டு வருகிறார்கள்.
இந்த தொடக்கப் பள்ளியில் முன் பகுதியில் உள்ள காம்பவுண்ட் நுழை வாயில் கேட் இல்லாததால் குழந்தைகளுக்கு பாது காப்புஇல்லாமல் இருக்கிறது. நுழைவாயில் கதவு இல்லாததால் மிக எளிமையாக குழந்தைகள் சாலைக்கு வெளியே வரமுடியும். அப்பொழுது அவ்வழியில் செல்லும் வாகனங்களால் விபத்து ஏற்பட அதிக அளவில் வாய்ப்புள்ளது. வருமுன் காப்போம் என்ற வாசக த்துக்குஏற்றவாறு குழந்தைகளுக்கு விப த்து ஏற்படுவதற்கு முன்னதா கவே நுழை வுவாயிலில் பாதுகா ப்பான கேட் வைக்க சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குழந்தை களின் பெற்றோர் கோரி க்கை வைத்துள்ளனர்.
- நேற்று பள்ளிக்கூடம் விடுமுறை என்பதால், சரத்குமாரும், சிவக்குமாரும் கிணற்றில் குளிப்பதற்காக சென்றனர்.
- சிவக்குமாரின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே ஆற்கவாடி பகுதியை சேர்ந்தவர் அய்யனார் மகன்கள் சரத்குமார் (வயது15), சிவக்குமார் (13). இதில் சரத்குமார், மூங்கில்துறைப்பட்டில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பும், சிவக்குமார் ஆற்கவாடியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 8-ம் படித்து வருகின்றனர். நேற்று பள்ளிக்கூடம் விடுமுறை என்பதால், சரத்குமாரும், சிவக்குமாரும் அதே பகுதியில் உள்ள அவர்களது விவசாய கிணற்றில் குளிப்பதற்காக சென்றனர். இருவரும் கிணற்றில் இறங்கி குளித்து க்கொண்டிருந்தபோது திடீரென சிவக்குமார் தண்ணீரில் மூழ்கினான்.
அதிர்ச்சியடைந்த சரத்குமார், வெளியே வந்து சிவக்குமார் தண்ணீரில் மூழ்கியது குறித்து அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்தான். உடனே அவர்கள் கிணற்றில் இறங்கி தண்ணீரில் மூழ்கிய மாணவனைதேடும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் அவனை மீட்க முடிய வில்லை. இதுபற்றி அறிந்த சங்கராபுரம் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மின் மோட்டார் மூலம்கிணற்றில் இருந்த தண்ணீரை வெளியேற்றனர். அப்போது சிவக்குமார் கிணற்றில் பிணமா கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சிவக்குமாரின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து மூங்கில்துறைப்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் உலகநாதன் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார். கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோ கத்தை ஏற்படுத்தி உள்ளது.
- திருமண நிகழ்ச்சிக்காக சுமார் 25 பேர் தனியார் பள்ளி பஸ்சில் சென்று கொண்டிருந்தனர்.
- காயமடைந்தவர்களை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்காக சிகிச்சை அனுப்பி வைத்தார்.
கள்ளக்குறிச்சி:
சின்னசேலம் அருகே ராயப்பனூர் கிராமத்தில் இருந்து கள்ளக்குறிச்சி அருகே ஆலத்தூர் கிராமத்தில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிக்காக சுமார் 25 பேர் தனியார் பள்ளி பஸ்சில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஆலத்தூர் ஏரிக்கரை அருகே சென்று கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பேருந்தில் வந்த 4 பேர் காயமடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் நந்தகோபால் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்காக சிகிச்சை அனுப்பி வைத்தார். திருமண நிகழ்ச்சிக்காக வந்த பஸ் சாலையோரம் கவிழ்ந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- கண்கா ணிப்பு கேமராக்கள் மூலம் பதிவான காட்சிகளைக் கொண்டு சிறப்பு புலனாய்வுக் குழு வினர் விசா ரணை செய்து வருகின்றனர்.
- கனியாமூர் வன்முறை சம்பவத்தில் சம்பந்தப்பட்டதாக 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த கலவரம் தொட ர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கண்கா ணிப்பு கேமராக்கள் மூலம் பதிவான காட்சிகளைக் கொண்டு சிறப்பு புலனா ய்வுக் குழு வினர் விசா ரணை செய்து வருகின்றனர். அதன்படி துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான போலீசார் கனியாமூர் வன்முறை சம்பவத்தில் சம்பந்தப்பட்டதாக சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், வளையமாதேவி பகுதியைச் சேர்ந்த செல்வம் மகன் அஜித் (வயது 26) அதே பகுதியைச் சேர்ந்த சக்திவேல் மகன் அஜித் (22), மற்றும் சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே ஊனத்தூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வமணி மகன் விஜயமணி (39) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.






