என் மலர்

  நீங்கள் தேடியது "Nutrition Month"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 2018-ம் ஆண்டு முதல் தேசிய ஊட்டச்சத்து மாத விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
  • 2022-ம் ஆண்டிற்கான தேசிய ஊட்டச்சத்து மாதத்தின் கருப்பொருள் "போஷான் பஞ்சாயத்து” ஆகும்.

  கள்ளக்குறிச்சி, செப்.2-

  கள்ளக்குறிச்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்துறையின் சார்பில், தேசிய ஊட்டச்சத்து மாதவிழாவிற்கான விழிப்புணர்வு பேரணி மற்றும் இரத்தசோகை குறைபாடு குறித்து விளக்கும் காணொலி வாகனத்தினை மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது:-மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்துறையின் சார்பில், ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்த 2018-ம் ஆண்டு முதல் தேசிய ஊட்டச்சத்து மாத விழா கொண்டாடப்பட்டு வருகிறது.  இவ்விழிப்புணர்வு விழாவில், உள்ளாட்சி அமைப்புகள், அரசுத்துறையினர், சமூக நிறுவனங்கள், தனியார் தொண்டு நிறுவனங்கள் ஆகியோருடன் ஒருங்கிணைந்து ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வினை ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டு செல்லும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், 2022-ம் ஆண்டிற்கான தேசிய ஊட்டச்சத்து மாதத்தின் கருப்பொருள் "போஷான் பஞ்சாயத்து" ஆகும். பெண்களின் ஆரோக்கியம், குழந்தைகள் கல்வி, பாலினம் உணர்திறன், நீர் பாதுகாப்பு மேலாண்மை, மலைவாழ் பகுதிகளில் வாழும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாரம்பரிய உணவுகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்து வதாகும்.

  மேலும் மாவட்டத்தில் பெண்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் ஊட்டச்சத்து மிக்க உணவுப்பொருட்களை உட்கொண்டு, ஆரோக்கியத்தை பேணிக்காத்திட வேண்டும் என மாவட்ட கலெக்டர் கூறினார். தொடர்நது 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களிடையே ஊட்டச்சத்து மிக்க உணவினை உட்கொள்வதன் அவசியம் மற்றும் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் பேரணி தொடங்கி வைக்கப்பட்டது. பேரணி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி முக்கிய வீதிகளின் வழியாக சென்று மந்தவெளியில் நிறைவடைந்தது. இதில் குழந்தைகள் நல மைய அமைப்பாளர்கள், பணியாளர்கள் கலந்து கொணடு பல்வேறு விழிப்பு ணர்வுகள் அடங்கிய பதாகை களை கையில் ஏந்தியவாறு கோஷமிட்டு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

  இதேபோல் கிராமப்புற மக்கள் எளிதில் ஊட்ட ச்சத்து குறைபாடு தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்வதற்கும், ஊட்டச்சத்து மிக்க உணவு களை கண்டறிந்து உட்கொள்வது தொடர்பான விழிப்புணர்வு காணொலி வாகனம் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளுக்கும் சென்று, பொதுமக்களுக்கு இரத்த சோகை ஏற்படக் காரணமாக உள்ள இரும்பு சத்து நிறைந்த உணவுப் பொருட்கள் உட்கொள்ளா மை, குடற்புழு பாதிப்பு, தன்சுத்தம் பேணாமல் இருத்தல், கழிவறையை பயன்படுத்தாமல் இருத்தல், செருப்பு அணியாமல் நடத்தல் போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலர் செல்வி, குழந்தைகள் நல அமைப்பாளர்கள், பணி யாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

  ×