என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Body of woman in lake"

    • கிராமத்தைச் சேர்ந்தவர்கள் காலையில் வயல்வெளிக்கு சென்று பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
    • விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகாஅருகே இருந்தை கிராமத்துக்கு சொந்தமான பெரிய ஏரியில் 45 வயது மதிக்கத்தக்க பெண் உடல் ஏரியில் மிதந்தது. இதனை அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் காலையில் வயல்வெளிக்கு சென்று பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி அவர்கள் திருநாவலூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இந்த தகவலின் பெயரில் திருநாவலூர் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையில் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆசைத்தம்பி, தனிப்பிரிவு ஏட்டு மனோகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். திருநாவலூர் தீயணைப்பு நிலைய அதிகாரி பாலகிருஷ்ணன் தலைமையில் கொண்ட குழு மிதந்து கிடந்த பெண் சடலத்தை மீட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இறந்து போன பெண் கற்பழித்து நீரில் கொலை செய்யப்பட்டு வீசிருக்கலாமா? நகைக்காக கொலை செய்திருக்கலாமா? என்று பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடைபெற்று வருகிறது.

    ×