என் மலர்tooltip icon

    கள்ளக்குறிச்சி

    • கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
    • 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே சேஷசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன்(வயது42). இவரது மனைவி பத்மினி(39). இவர்களுக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். பத்மினியிடம் அவரது தாய் வீட்டின் 3 சென்ட் வீ்ட்டுமனை மற்றும் 55 சென்ட் நிலத்தை விற்று தர சொல்லி கண்ணன் அடிக்கடி தகராறு செய்து வந்தார். இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் பத்மினி வயலில் இருந்தபோது கண்ணனும், இவரது மகன்களும் சேர்ந்து பத்மினியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து பத்மினி கொடுத்த புகரின் பேரில் கண்ணன், இவரது மகன்கள் மகிமதன், தமிழரசன் ஆகியோர் மீது சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதேபோல் பத்மினியும் அவரது ஆதரவாளர்களும் சேர்ந்து தன்னை தாக்கியதாக கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் பத்மினி, இவரது தாயார் பஞ்சவர்ணம் உள்பட 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கனியாமூர் பள்ளி வன்முறையில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரணை செய்து வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்து வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கடந்த மாதம் 17- ந்தேதி நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. இந்த கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரணை செய்து வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்து வருகின்றனர். அதன்படி பள்ளி சொத்துக்களை சேதப்படுத்தியதாக கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே எமரூர் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் ஆண்டப்பன் (வயது 22), அதே கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் மகன் செல்வகாசி (23) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    • 144 தடை உத்தரவை மீறி கபடி போட்டி நடத்திய 10 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது.
    • கடந்த 2015-ம் ஆண்டு நடக்க இருந்த திருவிழாவின் பொது இரு தரப்பினிடையே மோதல் ஏற்பட்டது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே பாண்டி யன்குப்பம் கிராமத்தில் கடந்த 2015-ம் ஆண்டு நடக்க இருந்த திருவிழாவின் பொது இரு தரப்பினிடையே மோதல் ஏற்பட்டது. இதனால் 144 தடை உத்தரவு போடப்பட்டது. இந்த தடை தற்போது வரை நீடித்து வருகிறது. இந்நிலையில் 144 தடை உத்தரவை மீறி கபடி போட்டி நடத்தியுள்ளனர். இதனால் 200-க்கும் மேற்பட்டோர் அங்கு கூடினார்கள். இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்த கபாடி போட்டி நடத்துவதற்கு காரணமாக இருந்த 10 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

    • முருகன் என்பவர் அகரம்பள்ளிப்பட்டு தென்பெண்ணை ஆற்றில் இறங்கியபோது எதிர்பாராத விதமாக வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.
    • தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் உள்ள செடிகளில் சிக்கி இருந்த முருகனின் உடலை மூங்கில்துறைப்பட்டு போலீ–சார் மீட்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    திருவண்ணாமலை மாவட்டம் அகரம்பள்ளிப் பட்டு பகுதியை சேர்ந்தவர் வேடியப்பன் மகன் முருகன் (45). அரசு பஸ் டிரைவர். இவர் அகரம்பள்ளிப்பட்டு தென்பெண்ணை ஆற்றில் இறங்கியபோது எதிர்பாராத விதமாக வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். இதையறிந்த அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தென்பெண்ணை ஆற்றில் இறங்கி முருகனை தேடி னார்கள். ஆனால் அவரை காணவில்லை. ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட முருகனின் நிலை என்ன? அவா் என்ன ஆனார்? என்று தெரியா மல் வாணாபுரம் மற்றும் மணலூர்பேட்டை போலீ சாரும், தீயணைப்புதுறை யினரும் முருகனை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் மூங்கில் துறைபட்டை அடுத்த சுத்த–மலை தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் உள்ள செடிகளில் சிக்கி இருந்த முருகனின் உடலை மூங்கில்துறைப்பட்டு போலீ–சார் மீட்டனர். பின்னர் பிரேத பரிசோத னைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பரத் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் தெருக்கூத்து நடைபெறும் பகுதி வழியாக வந்தார்.
    • வாய் தகராறு சிறிது நேரத்தில் கைகலப்பாக மாறியது இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா திருநாவலூர் அருகே ஆண்டிக்குழி பகுதியில் நேற்று தெருக்கூத்து நடந்தது. அப்போது அதே பகுதியை சேர்ந்த பரத் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் தெருக்கூத்து நடைபெறும் பகுதி வழியாக வந்தார். வரும்போது தெருக்கூத்து பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்கள் மீது பரத் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக மோதியது. உடனே பொதுமக்கள் இது குறித்து பரத்திடம் கேட்டனர். ஆத்திரமடைந்த பரத் அவர்களை தகாத வார்த்தையால் திட்டினார். இதனால் இருவருக்கும் இடையே வாய் தகறாக ஏற்பட்டது.

    இந்த வாய் தகராறு சிறிது நேரத்தில் கைகலப்பாக மாறியது இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இது குறித்து பரத் திருநாவலூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து நாகராஜ், வடிவேல் ,ராஜேந்திரனை கைது செய்தனர் மேலும் இது சம்பந்தமாக 15 பேரையும் தேடி வருகின்றனர். இதேபோல் பொதுமக்கள் கோவிந்தன் அளித்த புகாரின் பேரில் பரத் தரப்பில் ஸ்ரீராம் கைது செய்யப்பட்டார். மேலும் பரத் மற்றும் இவரது தரப்பில் 15 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

    • ஜெகன் மோட்டார் சைக்கிளில் ராவுத்தநல்லூரில் இருந்து புதூரை நோக்கி வந்து கொண்டிருந்தார்.
    • எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ஜெகன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் ராவத்த நல்லூர் பகுதியை சேர்ந்தவர் ஜெகன் (34). இவர் மூங்கில் துறைப்பட்டில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று ஜெகன் மோட்டார் சைக்கிளில் ராவுத்தநல்லூரில் இருந்து புதூரை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்பொழுது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ஜெகன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்த னர்.

    டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஜெகன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.மாவட்டம் சங்கராபுரம் வட்டம் ராவத்த நல்லூர் பகுதியை சேர்ந்தவர் ஜெகன் (34). இவர் மூங்கில் துறைப்பட்டில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று ஜெகன் மோட்டார் சைக்கிளில் ராவுத்தநல்லூரில் இருந்து புதூரை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்பொழுது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ஜெகன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்த னர். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஜெகன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சங்கராபுரம் அருகே சேஷசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர்.
    • வெண்ணி லாவை ஆபாச வார்த்தை களால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே சேஷசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி வெண்ணிலா (வயது 30). இவரது வளர்ப்பு நாய் அதே ஊரை சேர்ந்த பெரியசாமி மனைவி ராணி என்பவரை பார்த்து குரைத்துள்ளது.

    இதனால் ஆத்திரமடைந்த அவர் நாய் மீது கல்லை வீசியபோது அது இரும்பு கதவின் மீது பட்டதாக தெரி கிறது. இதை வெண்ணிலா தட்டிக் கேட்டபோது ஆத்திரம் அடைந்த ராணி அங்கிருந்த பூச்செடிகளை சேதப்படுத்தி, வெண்ணி லாவை ஆபாச வார்த்தை களால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து வெண்ணிலா கொடுத்த புகாரின் பேரில் ராணி மீது சங்கரா புரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்ம ஜோதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் மேல் நிலைப் பள்ளி உள்ளது.
    • ஸ்ரீமதியின் மரணத்திற்கு நீதி கேட்டு நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது.

    கள்ளக்குறிச்சி:

    சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் மேல் நிலைப் பள்ளியில் ஜூலை 17-ஆம் தேதி அன்று பள்ளி மாணவி ஸ்ரீமதியின் மரணத்திற்கு நீதி கேட்டு நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது. இந்த கலவரத்தில் ஈடுபட்டவர்களை சிசிடிவி காட்சிகளை ஆதாரமாகக் கொண்டும், மேலும் கலவரத்தின் போது பதிவு செய்யப்பட்ட வீடி யோ காட்சிகளை ஆதார மாகக் கொண்டும் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீ சார் தொடர்ந்து கலவ ரத்தில் ஈடுபட்ட குற்றவாளி களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அந்த வகையில் கனியா மூர் பள்ளி கலவரத்தில் பள்ளி சொத்துக் களை சேதப்படுத்தியதாக சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள சார்வாய்புதூர் கிரா மத்தைச் சேர்ந்த சக்தி வேல் என்பவரையும், போலீ சார் மீதும் போலீசார் வாகனத்தின் மீதும் கல்வீசி தாக்கிய வளையமாதேவி என்ற கிராமத்தை சேர்ந்த பார்த்திபன் , ஹரிஹரன் ஆகிய3பேரை சிறப்பு புலனாய்வு குழு போலீசார் வீடியோ ஆதாரங்களைக் கொண்டு கைது செய்து கள்ளக்குறிச்சி 2-வது குற்ற வியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி (பொறுப்பு) முகமது அலி முன்பு ஆஜர்ப்படு த்தினர்.

    தொடர்ந்து குற்றவாளி யை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் கடலூர் மத்திய சிறையில் அடைக்க நீதிபதி முகமது அலி உத்தரவிட்டார். கனியாமூர் பள்ளி கலவர த்தில் ஈடுபட்டதாக காவல்துறையினர் மற்றும் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் மூலமாக இது வரை 371 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    • ரிஷிவந்தியம் அடுத்த லா.கூடலூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல்.
    • கரும்பு வெட்டும் கூலித்தொகை சம்பந்தமாக பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினை இருந்துள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் ரிஷிவந்தியம் அடுத்த லா.கூடலூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல். கரும்பு வெட்டும் தொழிலாளியான இவருக்கும், கீழ்பாடி கிராமத்தை சேர்ந்த ஞானபிரகாஷ் என்பவருக்கும் கரும்பு வெட்டும் கூலித்தொகை சம்பந்தமாக பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினை இருந்துள்ளது. சம்பவத்தன்று இரவு பழனிவேல் மற்றும் அவரது தம்பி அய்யப்பன் ஆகியோர் கீழ்பாடிக்கு சென்று ஞானபிரகா சிடம் தங்களுக்கு வரவேண்டிய கரும்பு வெட்டு கூலி பணத்தை கேட்டுள்ளனர்.

    அப்போது பணத்தை தர மறுத்த ஞானபிரகாஷ் மற்றும் அவரது உறவினர்கள் சேர்ந்து பழனிவேலுவை திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் ஞானபிரகாஷ், ராமசாமி, நாகராஜ், இவரது மனைவி கனிபாக்கியம் ஆகிய 4 பேர் மீதும் ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சங்கராபுரம் துணைமின் நிலையத்தில் நாளை (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • சங்கராபுரம் செயற்பொறியாளர் ரகுராமன் தெரிவித்துள்ளார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் துணைமின் நிலையத்தில் நாளை (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக சங்கராபுரம், பாண்டலம், வடசிறுவள்ளூர், வடசெட்டியந்தல், திம்மனந்தல், கிடங்குடையாம்பட்டு, ஆருர், ராமராஜபுரம், அரசம்பட்டு, அரசராம்பட்டு, மஞ்சப்புத்தூர், பொய்க்குணம், விரியூர், எஸ்.வி.பாளையம், கள்ளிப்பட்டு, கொசப்பாடி, ஜவுளிகுப்பம், மல்லாபுரம், தும்பை, பாச்சேரி, கூடலூர், மோட்டாம்பட்டி ஆகிய கிராமங்களில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என சங்கராபுரம் செயற்பொறியாளர் ரகுராமன் தெரிவித்துள்ளார்.

    • கரூர் மாவட்டம் மேலப்பாளையத்தை சேர்ந்தவர் சரவணன்
    • கள்ளக்குறிச்சி புறவழிச்சாலையில் வந்தபோது லாரிக்கு பின்னால் வந்த ஆம்னி பஸ் லாரியின் மீது மோதியது.

    கள்ளக்குறிச்சி:

    கரூர் மாவட்டம் மேலப்பாளையத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 48), இவர் மதுராந்தகத்திலிருந்து கள்ளக்குறிச்சி நோக்கி டாரஸ் லாரியை ஓட்டிக் கொண்டு வந்தார். அப்போது கள்ளக்குறிச்சி புறவழிச்சாலையில் வந்தபோது லாரிக்கு பின்னால் வந்த ஆம்னி பஸ் லாரியின் மீது மோதியது.

    இதில் பஸ்சில் வந்த சென்னை சத்யா நகரை சேர்ந்த பாண்டுரங்கன் மகன் ராதா (26), கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த தேவகுமார் (36), சேலம் மாதேஸ்வரன் மகள் சத்யபிரியா (23), ரவி மகன் சுதாகர் (27), நாமக்கல் மாவட்டம் ஏ.எஸ்.பேட்டை ராஜூ மனைவி சுமதி (47) ஆகிய 5 பேர் காயமடைந்தனர். அவர்களை அக்கம், பக்கத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • தந்தையின் சிறுவயதில் நிறைவேறாத ஆசையை மகன்கள் நிறைவேற்றி வைத்தனர்.
    • காதணி விழாவில் 100-க்கும் மேற்பட்ட உறவினர்கள் கலந்துகொண்டனர். அவர்களுக்கு அசைவ விருந்து அளிக்கப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் ஜம்படை கிராமத்தைச் சேர்ந்தவர் மொட்டையன் மகன் ஏழுமலை(வயது 50). விவசாய கூலி தொழிலாளியான இவருக்கு சங்கீதா(45) என்ற மனைவியும், வேடியப்பன்(22), மணி(20) ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.

    ஏழை குடும்பத்தில் பிறந்த ஏழுமலைக்கு சிறு வயதில் குடும்ப ஏழ்மையின் காரணமாக அவரது பெற்றோர் அவருக்கு மொட்டை அடித்து காது குத்தாமல் விட்டு விட்டதாக கூறப்படுகிறது. தற்போது இந்த ஆசையை அவர் தனது மகன்கள் மற்றும் உறவினர்களிடம் கூறி வேதனையுற்றார். இதை கேட்ட அவரது மகன்கள் மற்றும் உறவினர்கள் ஏழுமலையின் சிறுவயது ஆசையை நிறைவேற்ற முடிவு செய்தனர்.

    அதன்படி ஜம்படை கிராமத்தில் உள்ள குலதெய்வ கோவிலில் தனது மகன்கள் மற்றும் உறவினர்கள் சூழ்ந்து நிற்க ஏழுமலைக்கு மாமா மடியில் அமர்ந்து மொட்டை அடித்து காது குத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட உறவினர்கள் கலந்துகொண்டனர். அவர்களுக்கு அசைவ விருந்து அளிக்கப்பட்டது.

    ×