என் மலர்
கள்ளக்குறிச்சி
- சின்னசேலம் அருகே கனியாமூர் பள்ளி கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
- முல்லைவாடியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் பாஸ்கர் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
சின்னசேலம் அருகே கனியாமூர் பள்ளி கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். அதன்படி கலவரத்தின் போது போலீஸ் வாகனத்தின் மீதும், போலீசார் மீதும் கற்களை வீசி, தாக்கி வன்முறையில் ஈடுபட்ட சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே முல்லைவாடியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் பாஸ்கர் (வயது 20) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
- பசு மாடு அப்பகுதியில் உள்ள வயல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்தது.
- எதிர்பாராத விதமாக அப்பகுதியில் உள்ள கிணற்றில் தவறி விழுந்தது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த செம்பராம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சின்னபாண்டி மனைவி மாலா. இவருடைய பசு மாடு அப்பகுதியில் உள்ள வயல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக அப்பகுதியில் உள்ள கிணற்றில் தவறி விழுந்தது. இதுபற்றி தகவல் அறிந்த சங்கராபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) ரமேஷ்குமார் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த பசு மாட்டை உயிருடன் மீட்டனர்.
- ராமச்சந்திரன் தனது மோட்டாா் சைக்கிளை கடுவனூர் ஏரிக்கரை முனியப்பர் கோவில் அருகே நிறுத்திவிட்டு இயற்கை உபாதை கழிக்க சென்றார்.
- சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. அதனை யாரோ மர்மநபர் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 42). இவர் தனது மோட்டாா் சைக்கிளை கடுவனூர் ஏரிக்கரை முனியப்பர் கோவில் அருகே நிறுத்திவிட்டு இயற்கை உபாதை கழிக்க சென்றார். பின்னர் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. அதனை யாரோ மர்மநபர் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சாத்தனூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட 17,000 கன அடி தண்ணீர் ஆனது வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடுகிறது.
- கீழையூர் பகுதியில் உள்ள தரைப்பாலத்தில் ஒரு பகுதி வெள்ளத்தில் அடித்து சென்று விட்டது.
கள்ளக்குறிச்சி:
திருக்கோவிலூர் தென்பெண்ணை ஆற்றில் சாத்தனூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட 17,000 கன அடி தண்ணீர் ஆனது வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடுகிறது இரு கரையையும் ஆக்கிரமித்து ஓடும் இந்த வெள்ள நீரானது திருக்கோவிலூர் அரகண்டநல்லூரை இணைக்கும் தரைப்பாலத்தின் மீது சுமார் 2 அடிக்கும் மேலாக பாய்ந்து செல்கிறது. தண்ணீரின் வேகம் அதிகமாக இருக்கின்ற காரணத்தினால் திருக்கோ–விலூர் கீழையூர் பகுதியில் உள்ள தரைப்பாலத்தில் ஒரு பகுதி வெள்ளத்தில் அடித்து சென்று விட்டது இதனால் இனி தரைப்பாலத்தை பொது–மக்கள் போக்குவரத்திற்கு பயன்படுத்த முடியுமா என்பது கேள்விக்குறியே என்ற நிலைக்கு தரைப்பாலம் உள்ளாகியுள்ளது.
மேலும் தரைப் பாலத்தின் மீது ஓடும் தண்ணீரின் அளவு அதிகரித்த வண்ணம் உள்ளதால் தரைப் பாலத்தின் 2 பக்கத்திலும் போலீசார் தடுப்பு வேலி அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தண்ணீர் கடலூர் ஆல்பேட்டைவழியாக கடலில் கலக்கிறது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் ஆற்றோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு உத்தரவிடப்பட்டு உள்ளது
- கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த கலவரம் தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரணை செய்து வருகின்றனர்.
- கலவரத்தின்போது பதிவான வீடியோ காட்சியினை வைத்து அடையாளம் கண்டு கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த கலவரம் தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரணை செய்து வருகின்றனர்.
அதன்படி வழக்கினை புலனாய்வு செய்யும் காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையிலான போலீசார் கலவரத்தின்போது வன்முறையில் ஈடுபட்டு பள்ளியின் சொத்துக்களை சேதப்படுத்திய சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே வலையமாதேவி கிராமத்தைச் சேர்ந்த அருண் (வயது 24), அதே பகுதியைச் சேர்ந்த எழிலரசன் (20) மற்றும் கலவரத்தின் போது போலீசார் மீது கற்களை வீசி தாக்கி வன்முறையில் ஈடுபட்ட சின்னசேலம் அருகே தென்செட்டியந்தல் கிராமத்தைச் சேர்ந்த மோகன் (30), சின்னசேலம் அருகே பங்காரம் கிராமத்தைச் சேர்ந்த முத்துலிங்கம் வயது (37) ஆகிய 4 பேரையும் சம்பவத்தின்போது பதிவான வீடியோ காட்சியினை வைத்து அடையாளம் கண்டு கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- சின்ன சேலம் பகுதியில் கடந்த சில தினங்களாக பரவலாக நல்ல மழை பொழிந்து வருகிறது.
- ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பொழிந்த கனமழையால் சின்னசேலம் பஸ் நிலையத்தின் அருகே உள்ள சாலைகளில் வெள்ளம் போல் மழை நீர் ஓடியது.
கள்ளக்குறிச்சி:
சின்ன சேலம் பகுதியில் கடந்த சில தினங்களாக பரவலாக நல்ல மழை பொழிந்து வருகிறது. இதனால் கிணறு, ஏரி போன்றவற்றை வேகமாக நீர் நிரம்பி வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையினால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்த வருகின்றனர். நேற்று மாலை 4 மணி அளவில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பொழிந்த கனமழையால் சின்னசேலம் பஸ் நிலையத்தின் அருகே உள்ள சாலைகளில் வெள்ளம் போல் மழை நீர் ஓடியது. சில இடங்களில் முழங்கால் அளவிற்கு மழை நீர் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதி அடைந்து உள்ளனர். பள்ளி நேரம் முடிந்து மாணவர்கள் வீட்டுக்கு செல்லும் நேரத்தில் மழை வந்ததால் மாணவர்கள் மழையில் நடந்தபடியே சென்றனர். மழைநீர் செல்வதற்கு வழி இல்லாமல் சாலைகளில் தண்ணீர் அதிக அளவில் தேங்கி நிற்கின்றது.
- மூன்று நபர்கள் சேலம் மெயின் ரோட்டில் அமைந்துள்ள தனியார் ஓட்டலுக்கு சாப்பிட சென்றனர்.
- அங்கு பணியாற்றி வந்த ஹோட்டல் மேலாளர் அன்சார் உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர் .
கடலூர்:
உளுந்தூர்பேட்டை அன்னை சத்யா தெருவை சேர்ந்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் சுரேஷ், நகர செயலாளர் அஜய் மோகன் உட்பட 3 பேரும் சேலம் மெயின் ரோட்டில் அமைந்துள்ள தனியார் ஓட்டலுக்கு சாப்பிட சென்றனர். அங்கு சாப்பிட்டு விட்டு பில் கொடுத்துவிட்டு உணவு பொருள் காலாவதியானது. உணவுகள் தரமற்ற உணவுகள் வழங்கப்பட்டு உள்ளது என்று கூறி ஓட்டல் உரிமையாளர் இடம் வாய் தகராறில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு பணியாற்றி வந்த ஹோட்டல் மேலாளர் அன்சார் உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர் தகவலின் பெயரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன், சப் இன்ஸ்பெக்டர் அருள் செல்வம், தனிப்பிரிவு தலைமை ஏட்டு சரவணன் உட்பட விரைந்து சென்று தகராறு ஈடுபட்டுக் கொண்டிருந்த சுரேஷ், அஜய், மோகன் 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- கடந்த 2 மாதங்களுக்கு முன் பிரச்சினை ஏற்பட்டு இருந்தது.
- இரு தரப்பினையே பேச்சுவார்த்தை முற்றி கைகலப்பு ஆனது. ஒருவருக்கொருவர் கல்லால் தாக்கி கொண்டார்கள்
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டம் கல்லாநத்தம் கிராமத்தை சேர்ந்த செந்தில் (வயது 38), ஆனந்தி, (32), குடும்பத்தினருக்கும், மணிகண்டன் (40), ராதா (35), முருகேசன் குடும்பத்தினருக்கும், நிலத்தில் உள்ள பாதை சம்பந்தமாக இரு குடும்பத்தினர் இடையே முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன் பிரச்சினை ஏற்பட்டு ராதா தரப்புக்கு பாதை வேண்டாம் என்று சின்ன சேலம் போலீஸ் நிலையத்தில் எழுதி கொடுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் சம்பவத்தன்று ராதா நிலத்துக்கு முன் உள்ள பாதயை திருத்திக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் செந்தில் நிலத்திற்கு முன்னால் உள்ள பாதையை திருத்தியதால் ராதா குடும்பத்தை சேர்ந்தவர்கள் நிலத்திற்கு செல்ல வழி இல்லாமல் திருத்துகிறாயே என்று எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது இதனால் இரு தரப்பினையே பேச்சுவார்த்தை முற்றி கைகலப்பு ஆனது. ஒருவருக்கொருவர் கல்லால் தாக்கி கொண்டார்கள். இதனால் செந்தில், ஆனந்தி, மணிகண்டன், ராதா, ஆகியோர் காயம் அடைந்தார்கள். இதனால் இரு தரப்பினரும் கல்லால் அடித்துக் கொன்று விடுவோம் என கொலை மிரட்டல் விடுத்ததாக இரு தரப்பினரும் சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் போலீசார் 4 பேர் மீது வழக்கை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் .
- மதன் குடும்பத்துடன் திருக்கோவிலூர் அருகே உள்ள சந்தைப்பேட்டையில் அவரது மாமியார் லட்சுமி வீட்டில் தங்கி இருந்தார்.
- உள்ளே சென்று பார்த்தபோது அறையில் இருந்த பீரோக்களின் கதவுகள் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தன.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் புற்று மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மதன்(வயது27). இவர் தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். தனது மனைவி சரண்யாவுக்கு உடல்நிலை சரியில்லாததால் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு மதன் குடும்பத்துடன் திருக்கோவிலூர் அருகே உள்ள சந்தைப்பேட்டையில் அவரது மாமியார் லட்சுமி வீட்டில் தங்கி இருந்தார். இந்த நிலையில் மதனின் வீ்ட்டை சுத்தம் செய்வதற்காக அவரது மாமியார் லட்சுமி, மனைவியின் தங்கை சந்தியா ஆகியோர் சந்தை ப்பேட்டையில் இருந்து புறப்பட்டு சங்கராபுரத்துக்கு வந்தனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது அறையில் இருந்த பீரோக்களின் கதவுகள் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தன.
மேலும் அதில் இருந்த 14½ பவுன் நகைகள், 3 ஜோடி கொலுசு, 2 பட்டு புடவைகள் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.5 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த கொள்ளை சம்பவம் பற்றிய தகவல் அறிந்து சங்கராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலை மையில் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்ம ஜோதி மற்றும் போலீசார் விரைந்து வந்து கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர் ராஜவேல் வரவழை க்கப்பட்டு பீரோ, கதவுகளில் இருந்த ரேகைகளை அவர் பதிவுசெய்தார். இது குறித்து மதன் கொடுத்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
- 5 பேருடன் விருத்தாசலம் சென்று லோடு இறக்கிவிட்டு மீண்டும் செங்குறிச்சி பகுதிக்கு திரும்பி உள்ளார்.
- விபத்தில் மினி லாரி டிரைவர் காட்டு ராஜா சம்பவ இடத்திலேயே இறந்தார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா செங்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் காட்டுராஜா (வயது 27) மினிலாரி டிரைவர். இவர் நேற்று இரவு மினி லாரியில் விஜி விக்ரம் உள்ளிட்ட 5 பேருடன் விருத்தாசலம் சென்று லோடு இறக்கிவிட்டு மீண்டும் செங்குறிச்சி பகுதிக்கு திரும்பி உள்ளார்.
அப்போது மங்கலம் அருகே விஜயா தனியார் ஓட்டல் எதிரே வந்தபோது மினி லாரிக்கு முன்னால் வந்த அரசு பஸ் மினி லாரி மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் மினி லாரி டிரைவர் காட்டு ராஜா சம்பவ இடத்திலேயே இறந்தார். . மேலும் மினிலாரியில் இருந்த 4 பேரும் படுகாயத்துடன் உயிர் தப்பினர். இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து இது குறித்து உளுந்தூர்பேட்டை போலீசருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன்சப் இன்ஸ்பெக்டர்அரு ள்செல்வன் தலைமை யிலானபோலீசார் சம்பவஇடத்திற்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்தில் பலியான காட்டுராஜா உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக அதே அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி ன்றனர்.
- கனியாமூர் பள்ளி கலவரத்தில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
- கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரணை செய்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கடந்த மாதம் 17- ந்தேதி நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. இந்த கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரணை செய்து வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்து வருகின்றனர். அதன்படி பள்ளியை இடித்து சேதப்படுத்தியதாக நாகலூர் கிராமத்தைச் சேர்ந்த தேவேந்திரன் (வயது 20), சதீஷ் பாபு (20) மற்றும் போலீசார் மீது கல்வீசி தாக்கிய சின்னசேலம் அருகே கனியாமூர் கிராமத்தைச் சேர்ந்த சின்னையன் (45) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- மாணவ-மாணவிகள் நலன்கருதி வகுப்புகள் நடத்த அரசு நடவடிக்கை எடுத்தது.
- 9,10,11, 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு கனியாமூர் அருகே வாசுதேவநல்லூரியில் உள்ள தனியார் பி.எட்.கல்லூரியில் நேரடி வகுப்புகள் நடந்து வருகிறது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் சக்தி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார். இதற்கு நீதி கேட்டு நடந்த போராட்டம் கலவரமாக வெடித்தது.
இந்த கலவரத்தின் போது பள்ளிக்கு தீ வைக்கப்பட்டது. அதோடு பள்ளி வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பள்ளி மூடப்பட்டது. இந்த கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவினர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து வருகிறார்கள்.
எனினும் மாணவ-மாணவிகள் நலன்கருதி வகுப்புகள் நடத்த அரசு நடவடிக்கை எடுத்தது. அதன்படி 9,10,11, 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு கனியாமூர் அருகே வாசுதேவநல்லூரியில் உள்ள தனியார் பி.எட்.கல்லூரியில் நேரடி வகுப்புகள் நடந்து வருகிறது. மற்ற மாணவ-மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடந்து வருகிறது.
இந்த நிலையில் கனியாமூர் பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளின் பெற்றோர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட பள்ளியை உடனே திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.
இன்று காலை அவர்கள் கள்ளக்குறிச்சி வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பள்ளியை திறக்க கோரி கோஷம் போட்டனர். பெற்றோரின் திடீர் போராட்டத்தினால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று அவர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். அதன் பின்னர் மாணவ-மாணவிகளின் பெற்றோர் கலெக்டரை சந்தித்து மனு வழங்கிவிட்டு கலைந்து சென்றனர்.






