சங்கராபுரம் அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு

ராமச்சந்திரன் தனது மோட்டாா் சைக்கிளை கடுவனூர் ஏரிக்கரை முனியப்பர் கோவில் அருகே நிறுத்திவிட்டு இயற்கை உபாதை கழிக்க சென்றார்.சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. அதனை யாரோ மர்மநபர் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது.
சங்கராபுரம் அருகே  மோட்டார் சைக்கிள் திருட்டு
Published on

கள்ளக்குறிச்சி: 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 42). இவர் தனது மோட்டாா் சைக்கிளை கடுவனூர் ஏரிக்கரை முனியப்பர் கோவில் அருகே நிறுத்திவிட்டு இயற்கை உபாதை கழிக்க சென்றார். பின்னர் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. அதனை யாரோ மர்மநபர் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com