என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கனியாமூர் கலவரம்"

    • சின்னசேலம் அருகே கனியாமூர் பள்ளி கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
    • முல்லைவாடியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் பாஸ்கர் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    சின்னசேலம் அருகே கனியாமூர் பள்ளி கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். அதன்படி கலவரத்தின் போது போலீஸ் வாகனத்தின் மீதும், போலீசார் மீதும் கற்களை வீசி, தாக்கி வன்முறையில் ஈடுபட்ட சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே முல்லைவாடியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் பாஸ்கர் (வயது 20) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    கனியாமூர் பள்ளி கலவர வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டம் தென் செட்டியந்தல் என்ற கிராமத்தை சேர்ந்தவர் ராம்குமார் (வயது 37). இவர் கனியாமூர் பள்ளி கலவரத்தின்போது போலீஸ் வாகனத்தின் மீது கல் எறிந்தும் காவலர்களை கல்வீசி தாக்கி வன்முறையில் ஈடுபட்டது தொடர்பாகவும் கைது செய்யப்பட்டார்.

    இதேபோல் தென் செட்டியந்தல் கிராமத்தை சேர்ந்த வாலிபர் விஜயராஜ் (23) பள்ளி சொத்துக்களை சேதப்படுத்தியதோடு, அங்கிருந்த சில பொருட்களை திருடி சென்றதற்காக கைது செய்யப்பட்டார்.இதேபோல் கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே நல்லூர் நகர் கிராமத்தை சேர்ந்த வாலிபர் அசோக்குமார் (27) என்பவர் வாட்ஸ் அப் குழுக்களில் வன்மத்தை தூண்டும் விதமான கருத்துக்களை பதிவு செய்து பெரும் கலவரம் ஏற்பட காரணமாக இருந்த காரணத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

    கலவரத்தில் ஈடுபட்ட வீடியோ மற்றும் புகைப்பட காட்சிகளை வைத்து கைது செய்யப்பட்ட 3 பேரும் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

    ×