search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "5 injured"

    • பாலசுப்பிரமணியன் எலக்டிரிக்கல் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார்.
    • மோட்டார் சைக்கிள் மோதியதில், 5 பேரும் தூக்கி எறியப்பட்டு காயம் அடைந்தனர்.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த திரு.பட்டினம் அபிராமி தெற்குத் தெருவைச்சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது37). இவர் எலக்டிரிக்கல் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று மாலை, தனது மனைவி கர்பகாம்பாள் (32), 6 மாத கைகுழந்தை மோகனசெல்வராஜனுடன் மோட்டார் சைக்களில் சென்றார். காரைக்கால் அரசு ஆஸ்பத்திரி அருகே சென்றபோது, எதிர் திசையில் நிரவி அக்கரை வட்டத்தைச் சேர்ந்த ஆரோக்கிய விக்னேஸ் (25), அவரது அண்ணன் எபிநேசர் (28) ஆகியோர் வந்த மோட்டார் சைக்கிள் மோதியது.

    இதில், 5 பேரும் தூக்கி எறியப்பட்டு காயம் அடைந்தனர். தொடர்ந்து, அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள், அவர்களை மீட்டு காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து, பாலசுப்பிரமணியன் கொடுத்த புகாரின் பேரில், காரைக்கால் நகர போக்குவரத்து போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சதீஷ் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது அஜித்குமார் மோட்டார்சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதி விபத்தை ஏற்படுத்தியது.
    • விபத்தில் பலத்த காயம் அடைந்த அஜித்குமார் பெருந்துறை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

    பவானி, டிச. 2-

    ஆப்பக்கூடல் காமராஜர் காலனி பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார் (22). இவர் இரவு தனது மோட்டார் சைக்கிளில் பவானி-ஆப்பக்கூடல் மெயின் ரோட்டில் வந்து கொண்டிருந்தார்.

    அப்போது திப்பிச்செட்டிப்பாளையம் பகுதியில் சென்ற போது எடப்பாடியை சேர்ந்த சதீஷ் தனது மோட்டார் சைக்கிளில் சின்னமணி (60), ராஜா (37), பூபதி (27) ஆகிய 3 பேரை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்த போது அஜித் குமார் மோட்டார்சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதி விபத்தை ஏற்படுத்தியது.

    இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த அஜித்குமார் பெருந்துறை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

    மேலும், சதீஷ் பவானி தனியார் அரசு மருத்துவ மனையிலும், சின்னமணி, ராஜா, பூபதி ஆகிய 3 பேர் பவானி அரசு மருத்துவ மனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    • கரூர் மாவட்டம் மேலப்பாளையத்தை சேர்ந்தவர் சரவணன்
    • கள்ளக்குறிச்சி புறவழிச்சாலையில் வந்தபோது லாரிக்கு பின்னால் வந்த ஆம்னி பஸ் லாரியின் மீது மோதியது.

    கள்ளக்குறிச்சி:

    கரூர் மாவட்டம் மேலப்பாளையத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 48), இவர் மதுராந்தகத்திலிருந்து கள்ளக்குறிச்சி நோக்கி டாரஸ் லாரியை ஓட்டிக் கொண்டு வந்தார். அப்போது கள்ளக்குறிச்சி புறவழிச்சாலையில் வந்தபோது லாரிக்கு பின்னால் வந்த ஆம்னி பஸ் லாரியின் மீது மோதியது.

    இதில் பஸ்சில் வந்த சென்னை சத்யா நகரை சேர்ந்த பாண்டுரங்கன் மகன் ராதா (26), கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த தேவகுமார் (36), சேலம் மாதேஸ்வரன் மகள் சத்யபிரியா (23), ரவி மகன் சுதாகர் (27), நாமக்கல் மாவட்டம் ஏ.எஸ்.பேட்டை ராஜூ மனைவி சுமதி (47) ஆகிய 5 பேர் காயமடைந்தனர். அவர்களை அக்கம், பக்கத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    ×