2 மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி 5 பேர் காயம்

சதீஷ் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது அஜித்குமார் மோட்டார்சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதி விபத்தை ஏற்படுத்தியது.விபத்தில் பலத்த காயம் அடைந்த அஜித்குமார் பெருந்துறை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
2 மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி 5 பேர் காயம்
Published on

பவானி, டிச. 2-

ஆப்பக்கூடல் காமராஜர் காலனி பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார் (22). இவர் இரவு தனது மோட்டார் சைக்கிளில் பவானி-ஆப்பக்கூடல் மெயின் ரோட்டில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது திப்பிச்செட்டிப்பாளையம் பகுதியில் சென்ற போது எடப்பாடியை சேர்ந்த சதீஷ் தனது மோட்டார் சைக்கிளில் சின்னமணி (60), ராஜா (37), பூபதி (27) ஆகிய 3 பேரை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்த போது அஜித் குமார் மோட்டார்சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதி விபத்தை ஏற்படுத்தியது.

இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த அஜித்குமார் பெருந்துறை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

மேலும், சதீஷ் பவானி தனியார் அரசு மருத்துவ மனையிலும், சின்னமணி, ராஜா, பூபதி ஆகிய 3 பேர் பவானி அரசு மருத்துவ மனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com