பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் 4 பேர் மீது வழக்கு பதிவு

ரிஷிவந்தியம் அடுத்த லா.கூடலூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல்.கரும்பு வெட்டும் கூலித்தொகை சம்பந்தமாக பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினை இருந்துள்ளது.
பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் 4 பேர் மீது வழக்கு பதிவு
Published on

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் ரிஷிவந்தியம் அடுத்த லா.கூடலூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல். கரும்பு வெட்டும் தொழிலாளியான இவருக்கும், கீழ்பாடி கிராமத்தை சேர்ந்த ஞானபிரகாஷ் என்பவருக்கும் கரும்பு வெட்டும் கூலித்தொகை சம்பந்தமாக பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினை இருந்துள்ளது. சம்பவத்தன்று இரவு பழனிவேல் மற்றும் அவரது தம்பி அய்யப்பன் ஆகியோர் கீழ்பாடிக்கு சென்று ஞானபிரகா சிடம் தங்களுக்கு வரவேண்டிய கரும்பு வெட்டு கூலி பணத்தை கேட்டுள்ளனர்.

அப்போது பணத்தை தர மறுத்த ஞானபிரகாஷ் மற்றும் அவரது உறவினர்கள் சேர்ந்து பழனிவேலுவை திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் ஞானபிரகாஷ், ராமசாமி, நாகராஜ், இவரது மனைவி கனிபாக்கியம் ஆகிய 4 பேர் மீதும் ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com