திருநாவலூர் அருகே ஆம்னி பஸ் மோதி வாலிபர் சாவு

ஆம்னி பஸ் ,பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. தப்பி ஓடிய ஆம்னி பஸ் டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
திருநாவலூர் அருகே ஆம்னி பஸ் மோதி வாலிபர் சாவு
Published on

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே எடைக்கால் காவல் நிலைய த்திற்கு உட்பட்ட சாத்தனூர் பஸ் நிறுத்தத்தின் சாலை ஓரமாக நேற்று நள்ளிரவில் 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி ஆம்னி பஸ் ஒன்று சென்றது. அப்போது சாத்தனூர் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரமாக நடந்து சென்ற அந்த வாலிபர் மீது வேகமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலே அந்த வாலிபர் இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த எடைக்கல் போலீசின் சப் இன்ஸ்பெக்டர் கணபதி தலைமையிலான போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக சேர்த்தனர். இதுகுறித்து உளுந்தூர்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய ஆம்னி பஸ் டிரைவரை வலை வீசி தேடி வருகின்றனர். ஆம்னி பஸ் பறிமுதல் செய்யப்பட்டது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com