என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kallakurichi student death case"

    • மாணவி உடலில் காயங்கள் அதிகமாக இருப்பது தெரிய வந்தது.
    • தமிழக முதலமைச்சரை 27-ந் தேதி சந்திக்க உள்ளோம்.

    கடலூர் மாவட்டம் வேப்பூரை அடுத்த பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் மகள் ஸ்ரீமதி (வயது 17). கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.

    மாணவி உடல் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற தடயவியல் நிபுணர், அரசு டாக்டர்கள் 3 பேர் கொண்ட குழு மாணவியின் உடலை கடந்த மாதம் 19-ந் தேதியன்று மறு பிரேத பரிசோதனை செய்தது.

    சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மாணவி ஸ்ரீமதியின் 2 பிரேத பரிசோதனை முடிவுகளையும் ஆய்வு செய்த புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் 3 பேர் கொண்ட  குழு, தங்கள் ஆய்வறிக்கையை, மூடி முத்திரையிட்ட உறையில் விழுப்புரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

    இந்நிலையில் மாணவி ஸ்ரீமதி தரப்பு வழக்கறிஞர் காசி விஸ்வநாதன் கூறியதாவது, மாணவி ஸ்ரீமதியின் பிரேத பரிசோதனை இரண்டு அறிக்கைகளையும் மருத்துவர்களிடம் காண்பித்தோம். இதில் முதல் மற்றும் 2 வது பரிசோதனைகளில் சில வேறுபாடுகள் இருப்பது தெரியவந்தது. முதல் பிரேத பரிசோதனையை விட 2 வது பரிசோதனையில் உடலில் காயங்கள் அதிகமாக இருப்பது தெரிய வந்தது.

    அதுபோல மாணவி பலவந்த படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. இதனால் இதில் சந்தேகம் வழுவாக உள்ளது. முதல் பிரேத பரிசோதனை அனுபவம் இல்லாத மருத்துவர்களை வைத்து அவசர கதியில் செய்யப்பட்டுள்ளது.2 வது பிரேத பரிசோதனை சிறப்பு மருத்துவர்களை வைத்து செய்யப்பட்டுள்ளது.

    இரண்டு அறிக்கை முடிவுகளும் மருத்துவ நிபுணர்களிடம் கொடுத்து ஆய்வு செய்யப்படும். தமிழக முதலமைச்சரை வருகிற 27-ந்தேதி (சனிக்கிழமை) சந்திக்க உள்ளோம்.சந்திக்க வாய்ப்பு கிடைக்கா விட்டால் மாணவியின் பெற்றோர் நடைபயணத்தை மேற்கொள்வார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×