என் மலர்tooltip icon

    ஈரோடு

    கோபி அருகே இன்று காலை பனியன் கம்பெனி தொழிலாளர்களை ஏற்றி சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர் உள்பட 6 பேர் காயம் அடைந்தனர்.
    கோபி:

    ஈரோடு மாவட்டம் அத்தாணியில் இருந்து திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனிக்கு தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு இன்று காலை ஒரு வேன் புறப்பட்டது.

    வேனை திருப்பூரை சேர்ந்த முருகன் (வயது 26) என்பவர் ஓட்டினார். வேனில் சுமதி, குமார், சரசாள், மகாலட்சுமி உள்பட 5 பேர் இருந்தனர்.

    அந்த வேன் இன்று காலை கோபி அருகே அந்தியூர் சாலையில் உள்ள புதுக்கரைப்புதூர் என்ற இடத்தில் வந்தபோது நிலை தடுமாறி ஓடியது.

    இதனால் அந்த வேன் ரோட்டோரத்தில் வயல் வெளியில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிரைவர் முருகன், வேனில் இருந்த தொழிலாளர்களான சுமதி, குமார், சரசாள், மகாலட்சுமி உள்பட 5 பேர் காயம் அடைந்தனர்.

    அவர்களை அக்கம் பக்கத்தினர் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இந்த விபத்து குறித்து கோபி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஈரோடு மாவட்டத்தில் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினரும் ஆதரவு தெரிவித்து ஸ்டிரைக்கில் கலந்து கொள்வதாக முடிவு செய்துள்ளனர். #Lorrystrike

    ஈரோடு:

    தினசரி டீசல் விலை உயர்வு, 3-ம் நபர் காப்பீட்டு தொகை கட்டணம் 26 சதவீதம் அதிகரிப்பு ஆகியவற்றை வாபஸ் பெற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 20-ந் தேதி முதல் தேசிய அளவிலான காலவரையற்ற லாரி ஸ்டிரைக் நடக்கிறது.

    அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் அறிவித்துள்ள இந்த போராட்டத்துக்கு ஈரோடு மாவட்ட லாரி உரிமையாளர் சங்கம் ஆதரவு தெரிவித்து உள்ளது.

    இந்த சங்கத்தை சேர்ந்தவர்கள் கூறும்போது, ‘‘எங்கள் சங்கத்தை சார்ந்த 5 ஆயிரம் லாரிகள் ஈரோடு மாவட்டத்தில் இயக்கப்படுகிறது. இந்த லாரிகள் அனைத்தும் காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபடும்’’ என்று கூறினர்.

    இதேபோல ஈரோடு கல், மணல், மண் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினரும் போராட்டத்தில் பங்கேற்கிறார்கள். அவர்கள் வருகிற 20-ந் தேதி மட்டும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்து உள்ளனர்.

    பெருந்துறை லாரி உரிமையாளர்கள் சங்கத்தினரும் ஆதரவு தெரிவித்து ஸ்டிரைக்கில் கலந்து கொள்வதாக முடிவு செய்துள்ளனர்.

    இது பற்றி அந்த சங்கத்தை சேர்ந்தவர்கள் கூறியதாவது:-

    மாநில அளவிலான லாரி உரிமையாளர்கள் சம்மேளன கூட்டம் நாமக்கல்லில் நடை பெற்றது. ஆல் இந்தியா மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் கோரிக்கையின் படி நடைபெற்ற இந்த கூட்டத்தில் பெருந்துறை லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி வருகிற 20-ந் தேதி முதல் நடைபெறும் காலவரையற்ற லாரி ஸ்டிரைக்கில் பெருந்துறை லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் மற்றும் சென்னிமலை, வெள்ளோடு, ஈங்கூர், காஞ்சிக்கோவில், நசியனூர், ஊத்துக்குளி விஜயமங்கலம் பகுதி லாரி உரிமையாளர்கள் மற்றும் பெருந்துறை பகுதி வேன் உரிமையாளர்கள் கலந்து கொண்டு தங்களது வாகனங்களை இயக்காமல் நிறுத்தி வைப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

    பெருந்துறை அடுத்த சிப்காட் வளாகத்தில் இயங்கும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் உள்பட சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரி மற்றும் வேன்கள் இயங்காது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். #Lorrystrike

    திண்டல் - மேட்டுக்கடை ஈரோடு புறநகர் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    மேட்டுக்கடை துணை மின் நிலையத்தில் நாளை (7-ந்தேதி) பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

    இதையொட்டி நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டும் கீழ்கண்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது.

    மேல்திண்டல், கீழ்திண்டல், சக்தி நகர், செல்வம் நகர், பழைய பாளையம், சுத்தானந்தன் நகர், ஜீவாநகர், முத்தம் பாளையம், ஹவுசிங்யூனிட், வீரப்பம்பாளையம், நஞ்சனாபுரம், தெற்குபள்ளம், நல்லியம்பாளையம், செங்கோடம்பாளையம், வள்ளிபுரத்தான்பாளையம், பாலாஜிகார்டன், வேப்பம் பாளையம், பவளத்தாம் பாளையம், மாருதி நகர், வித்யா நகர்,

    வில்லரசம்பட்டி, கைகாட்டிவலசு, மூலக்கரை, மேட்டுக்கடை, புங்கம்பாடி, நத்தக்காட்டுபாளையம், இளைய கவுண்டன் பாளையம், எம்.ஜி.ஆர். நகர், கதிரம்பட்டி, வண்ணான்காட்டு வலசு, நசியனூர், தொட்டி பாளையம், ராயாபாளையம்,

    சிந்தன்குட்டை, ஆட்டையாம் பாளையம், மேற்குப்புதூர், எஸ்.எஸ்.பி.நகர், தென்றல் நகர் பகுதி, முத்து மாணிக்கம் நகர், ராசாம்பாளையம், கருவில்பாறைவலசு, கருவில்பாறைகுளம், வேலப்ப கவுண்டன் வலசு மற்றும் முனியப்பன் பாளையம்.

    ஈரோடு மின் பகிர்மான வட்ட நகரிய செயற் பொறியாளர் பழனிவேல் இதனை தெரிவித்துள்ளார்.

    தற்போதைய நிலையில் தி.மு.க.வுக்கு அடுத்த பெரிய கட்சியாக காங்கிரஸ் கட்சி இருக்கிறது என்று திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். #thirunavukkarasar #dmk #congressparty

    ஈரோடு:

    தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசர் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று கட்சி ஆய்வுக்கூட்டம் நடத்தி வருகிறார்.

    அதன்படி ஈரோடு தெற்கு மாவட்டத்தில் ஆய்வுக்கூட்டம் ஈரோடு பூந்துறை ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இந்த கூட்டத்துக்கு தெற்கு மாவட்ட தலைவர் மக்கள் ஜி.ராஜன் தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் மாநில தலைவர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பேசினார்.

    தற்போது தமிழகத்தில் 60 கட்சிகள் உள்ளன. ரஜினி கட்சி தொடங்க இருக்கிறார். விஜய் போன்றோர் கட்சி தொடங்க போவதாக தகவல் உள்ளது. ஏற்கனவே கமல் கட்சி தொடங்கி விட்டார். எனவே தேர்தலுக்கு முன்பு இன்னும் 10 கட்சிகள் வரை வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால், அதைப்பற்றி நாம் கவலைப்பட வேண்டியது இல்லை. அ.தி.மு.க. பல அணிகளாக இருக்கிறது. எனவே தற்போதைய நிலையில் தி.மு.க.வுக்கு அடுத்த பெரிய கட்சியாக காங்கிரஸ் கட்சி இருக்கிறது.

    பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் செயல்படாததால் மக்கள் நலத்திட்டப்பணிகள் செய்யப்படவில்லை. எனவே உடனடியாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும். 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு விரைந்து முடிக்கப்பட வேண்டும். இந்த தீர்ப்பு வந்தால் தமிழகத்தில் அரசியல் மாற்றம் நிகழலாம்.

    சேலத்தில் இருந்து சென்னைக்கு 8 வழிச்சாலையில் சென்றால் 30 நிமிடம் குறைவாக இருக்கும் என்கிறார்கள். அது 10 ஆயிரம் கோடி திட்டம் என்றும் கூறுகிறார்கள். நேரத்தை மிச்சப்படுத்த வேண்டும் என்றால், ஏற்கனவே இருக்கிற கிராம சாலைகள், நகர சாலைகள், ஒன்றிய சாலைகள், 4 வழி மற்றும் தேசிய சாலைகளை செப்பனிட்டு சரி செய்தாலே அவர்கள் குறிப்பிடும் அளவு நேரத்தை மிச்சப்படுத்த முடியும். எந்த திட்டமாக இருந்தாலும் மக்கள் விருப்பம் இல்லாமல் நிறைவேற்றக்கூடாது. மக்களை மிரட்டி சிறையில் அடைப்பதை அரசு கைவிட வேண்டும்.

    இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார். #thirunavukkarasar #dmk #congressparty

    சென்னிமலையில் மணல் கடத்திய 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
    சென்னிமலை:

    சென்னிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் மற்றும் போலீசார் சென்னிமலை பஸ் நிலையம் அருகே நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக லாரி ஒன்று வேகமாக வந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததோடு, டிரைவரிடம் விசாரணை நடத்தினார்கள்.

    விசாரணையில் கரூரில் இருந்து ஊத்துக்குளிக்கு லாரியில் மணல் கடத்தியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

    இதேபோல் அதே பகுதியில் மற்றொரு லாரி வந்தது. அந்த லாரியை சோதனை செய்ததில் அதிலும் மணல் கடத்தியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மணல் கடத்திய இந்த லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட 2 லாரிகளும் பெருந்துறை தாசில்தார் அலுவலகத்துக்கு கொண்டு சென்று நிறுத்தப்பட்டது.

    துணை தாசில்தார் பாலமுருகாயி, மணல் கடத்திய 2 லாரிகளின் உரிமையாளர்களுக்கும் அபராதம் விதிக்க ஈரோடு ஆர்.டி.ஓ. நர்மதாதேவிக்கு பரிந்துரை செய்து உள்ளார். 
    ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடியில் ஒரு போதும் இயங்க விட மாட்டோம் என்று ஜான் பாண்டியன் தெரிவித்துள்ளார். #johnpandian #thoothukudiplant

    ஈரோடு:

    தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவனத் தலைவர் ஜான் பாண்டியன் கடந்த 2 நாட்களாக ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.

    இன்று காலை ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்த ஜான் பாண்டியன் அங்கு எஸ்.பி.சக்திகணேசனை சந்தித்து பேசினார்.

    அப்போது தனது ஈரோடு மாவட்ட சுற்றுப்பயணத்தில் சிறப்பாக போலீஸ் பாதுகாப்பு கொடுத்த எஸ்.பி.க்கு அவர் நன்றி தெரிவித்தார்.

    தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் வரும் 15-ந்தேதி தஞ்சையில் மாநில மாநாடு நடக்கிறது. இதை சிறப்பாக நடத்த ஒவ்வொரு மாவட்டத்திலும் நான் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறேன். ஈரோடு மாவட்டத்திலும் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறேன்.

    பசுமை வழிசாலை திட்டத்தை ஒருபுறம் மக்கள் எதிர்த்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். மறுபுறம் அரசும் அதை அமைத்து தீர்வோம் என போராடி வருகிறது.

    இந்த விவகாரத்தில் அரசு வெள்ளை அறிக்கை (உண்மை நிலை)யை வெளியிட வேண்டும். காவிரி பிரச்சினையில் கர்நாடகம் உச்ச நீதிமன்றத்தை மதிக்காமல் செயல்பட்டு வருவது கண்டிக்கத்தக்கது. இந்த வி‌ஷயத்தில் உச்சநீதி மன்றம் இனியும் மவுனம் காட்டக் கூடாது.

    ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினை பற்றி நான் முன்னமே தமிழக முதல்வரை சந்தித்து அதை அனுமதிக்க கூடாது என வலியுறுத்தினேன். இப்போது மூடப்பட்டுள்ளது.

    மீண்டும் ஆலையை இயக்க நிர்வாகம் முனைப்பு காட்டி வருவதாக கூறப்படுகிறது. மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடியில் ஒரு போதும் இயங்க விட மாட்டோம்.

    இவ்வாறு ஜான் பாண்டியன் கூறினார்.  #johnpandian #thoothukudiplant

    ஈரோட்டில் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்த வாலிபர் கடன் தொல்லையால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    ஈரோடு:

    ஈரோடு வளையக்காரவீதி ஜெயராம்சிங் வீதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவருடைய மகன் மணிகண்டன் (வயது 26). இவருக்கு திருமணம் ஆகவில்லை. மணிகண்டன் பி.காம் முடித்துவிட்டு மொடக்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். மணிகண்டன் பல்வேறு இடங்களில் கடன் வாங்கி செலவு செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்து உள்ளார். இதன்காரணமாக அவரால் கடனை திரும்ப செலுத்த முடியவில்லை. ஆனால் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு உள்ளனர்.

    கடன் தொல்லையால் மனவேதனை அடைந்த மணிகண்டன் நேற்று முன்தினம் வீட்டில் இருந்தபோது விஷத்தை குடித்து மயங்கி கிடந்தார். இதை பார்த்த அவருடைய பெற்றோர், மணிகண்டனை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே மணிகண்டன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
    பெருந்துறை அருகே பனியன் கம்பெனியில் திருடிய வடமாநில வாலிபர்கள் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெருந்துறை:

    பெருந்துறை அடுத்த பணிக்கம்பாளையத்தில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் இருந்த டெய்லரிங் மெஷினை திருடி சென்ற 2 பேரை கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

    பெருந்துறை அடுத்த பணிக்கம்பாளையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பனியன் கம்பெனி செயல்பட்டு வருகிறது.

    இந்த பனியன் கம்பெனியில் மேற்கு வங்க மாநிலம், பர்கானாஸ் மாவட்டம், ஹய்னாபாத் பகுதியை சேர்ந்த மெக்டூக் ஹாஜ் என்பவரது மகன் தினிசலாம் ஹாஜ்(23) மற்றும் அதே பகுதியை சேர்ந்த அனார் அலி என்பவரது மகன் ரெசிதுல் ஹாஜ்(22) ஆகிய இருவரும் டெய்லராக வேலை பார்த்து வருகின்றனர்.

    இவர்கள் இருவரும் நேற்று மதியம் உணவு இடைவேளை போது டேபிளில் இருந்த 3 டெய்லரிங் மெஷின்களை கழற்றி கொண்டு வெளியே செல்ல முயன்றனர். அப்போது அங்கு வந்த அந்த நிறுவனத்தின் சூப்பர் வைசரான பவானி மைலம் பாடி பகுதியை சேர்ந்த செங்கோட்டையன் என்பவரது மகன் சுதாகரன்(28) அவர்கள் இருவரையும் பார்த்து சத்தம் போடவே, அங்கிருந்து தப்பி செல்ல முயன்ற போது அருகில் இருந்த மற்ற பணியாளர்கள் சுற்றி வளைத்து பிடித்தனர்.

    பிறகு பெருந்துறை போலீசில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த பெருந்துறை போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து மெஷின்கள், பனியன், ஜட்டிகளில் இணைக்கப்படும் பிராண்ட் லேபிள்கள் 4 ஆயிரம் ஆகிவற்றை பறிமுதல் செய்து இருவரையும் பெருந்துறை கோர்ட்டில் ஒப்படைத்தனர்.

    வழக்கினை விசாரித்த நீதிபதி ரெய்க்கானா பர்வீன் அவர்கள் இருவரையும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன் படி அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    முதல்-அமைச்சர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பள்ளி மாணவனை பெற்றோருடன் வரவழைத்து போலீஸ் எஸ்.பி. எச்சரித்து அனுப்பினார்.
    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள காசிபாளையம் பகுதியை சேர்ந்த 7-ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே வந்தான்.

    பிறகு அங்குள்ள ஒரு “காய்ன் போனில்” ஒரு ரூபாயை எடுத்து போலீஸ் கண்ட்ரோல் எண் 100-க்கு அடித்தான். மறுமுனையில் ஹலோ.. என்று சத்தம் கேட்டதும் மாணவன், “காசிபாளையம் பகுதியில் வெடிகுண்டு வைத்திருப்பதாக சிலர் பேசியதை நான் கேட்டேன் அதற்காகத்தான் பேன் பண்ணினேன்” என்று கூறி போனை வைத்துவிட்டான்.

    இதை கேட்டு பதட்டம் அடைந்த போலீசார் காசிபாளையம் ஊருக்குள் புகுந்து பல இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். திடீரென ஊருக்குள் இவ்வளவு போலீசார் புகுந்து என்ன தேடுகிறார்கள்? என பொதுமக்களும் பதட்டம் அடைந்தனர்.

    பல மணி நேர அதிரடி விசாரணைக்கு பிறகு வெடிகுண்டு வைத்திருப்பதாக போனில் கூறியது புரளி என தெரிய வந்தது.

    பிறகு அதே பள்ளி மாணவன் நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்தான். அவனது தாயார் வீட்டில் பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்தார். இந்த நேரத்தில் தனது தாயாரின் செல்போனை எடுத்து மீண்டும் 100-க்கு அடித்தான்.

    இந்த தடவை அந்த போன் கால் சென்னை போலீஸ் கண்ட்ரோல் அறைக்கு சென்றது. போனில் பேசிய மாணவன். “முதல்-அமைச்சர் வீட்டுக்கு வெடிகுண்டு வைத்திருக்காங்க” என்று கூறி விட்டு போனை வைத்துவிட்டான்.

    இதை கேட்டதும் பதட்டம் அடைந்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றி தகவல் சொன்னதும் வெடிகுண்டு நிபுணர்கள் சென்னையில் உள்ள முதல்-அமைச்சர் வீட்டுக்கு விரைந்து சென்று சோதனை நடத்தினார்கள். ஆனால் அது புரளி என தெரிய வந்தது.

    உடனடியாக போலீசார் போனில் பேசியது யார்? என்று செல்போன் எண்ணை ஆய்வு செய்தபோது அந்த போன் ஈரோடு மாவட்டம் கோபி பகுதியில் இருந்து வந்தது என தெரிய வந்தது. உடனே ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது உத்தரவின் பேரில் கோபி போலீசாருக்கும் அருகே உள்ள கடத்தூர் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தொடர்ந்து கோபி மற்றும் கடத்தூர் பகுதி போலீசார் நடத்திய விசாரணையில் முதல்-அமைச்சர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பள்ளி மாணவனை பிடித்தனர்.

    பிறகு போலீசார் அந்த மாணவனையும் அவனது பெற்றோரையும் அழைத்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்தனர்.

    அந்த மாணவனிடம் எஸ்.பி, “எதற்காக இப்படி போனில் பேசினாய்?” என்று கேட்க விளையாட்டுக்காத்தான் இப்படி பேசினேன்.. என்று மிரண்டபடி.. பயந்து கொண்டே கூறினான்.

    “படிக்கும் வயசில் இப்படியெல்லாம் போனில் பேசினால் பெரிய விபரீதம் ஆகும் தெரியுமா.. இல்லையா? இப்படியெல்லாம் போனில் பேச கூடாது” என எஸ்.பி. எச்சரித்தார்.

    மேலும் அவனது பெற்றோருக்கும் எஸ்.பி.சக்தி கணேசன் எச்சரித்து அறிவுரை கூறினார்.

    படிக்கும் பையனிடம் செல்போன் கொடுத்தால் இப்படிதான் நடக்கும் கவனமாக நடந்து கொள்ளுங்கள்” என்று எச்சரித்து அனுப்பி வைத்தார்.
    அரச்சலூரில் இன்று காலை தண்ணீர் தேடி வந்த மானை தெரு நாய்கள் கடித்து கொன்றது. தகவல் அறிந்த வன காப்பாளர் வந்து மானை பார்வையிட்டார்.

    அரச்சலூர்:

    அரச்சலூரில் 480 ஹெக்டர் பரப்பில் காப்புக்காடு உள்ளது. இந்த காட்டில் 500-க்கும் மேற்பட்ட மான்கள், மயில்கள், எறும்பு தின்னி, உடும்பு போன்ற வன விலங்குகள் வசித்து வருகின்றன.

    இந்த நிலையில் இன்று காலை தண்ணீர் தேடி ஒரு புள்ளிமான் வழி தவறி காட்டை விட்டு வெளியே வந்தது. மானை கண்ட தெரு நாய்கள் அதை விரட்டி... விரட்டி கடித்து குதறியது. இதில் அந்த மான் இறந்து விட்டது.

    இது குறித்து கிடைத்த தகவலின் படி அரச்சலூர் வன காப்பாளர் கோபால் வந்து மானை பார்வையிட்டார்.

    பிறகு அந்த மான் பரிசோதனை செய்யப்பட்டு காப்பு காட்டிலேயே புதைக்கப்பட்டது.

    வனத்துறை சார்பில் காப்பு காட்டுக்குள் வன விலங்குகளுக்கான தண்ணீர் நிரப்ப தொட்டி கட்டப்பட்டுள்ளது. ஆனால் அதில் தண்ணீர் நிரப்ப வில்லை. எனவே வனத்துறையினர் தண்ணீர் நிரப்ப வேண்டும் என வன ஆர்வலர்கள் கேட்டு கொண்டுள்ளனர். 

    ஊஞ்சலூர் ரெயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் ரெயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் விசாரணை ரெயிலில் அடிபட்டு இறந்தவர் சிவகிரியை அடுத்த பருத்திகொட்டான் பாளையத்தை சேர்ந்த வேலுசாமி(வயது55).கூலி தொழிலாளி என தெரிய வந்தது.

    வேலுசாமிக்கு சரியாக காது கேட்காது என கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு வேலுசாமி ஊஞ்சலூர் ரெயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த ரெயில் வேலுசாமி மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே வேலுசாமி உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    எஸ்.சி. - எஸ்.டி. பிரிவு வன்கொடுமை சட்ட திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஈரோடு ரெயில் நிலையத்தில் படுத்து ரெயிலை மறித்த பெண்கள் உள்பட 350 பேரை போலீசார் கைது செய்யப்பட்டனர்.
    ஈரோடு:

    மார்க்கம்யூனிஸ்டு சார்பில் இன்று மாநிலம் முழுவதும் ரெயில் மறியல் போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

    வன்கொடுமை தடுப்பு சட்டத்தை பாதுகாக்க அவசர சட்டம் இயற்றி அதை அரசியல் சாசனத்தின் 9-வது அட்டவணையில் இணைக்க வேண்டும்.

    வன்கொடுமையில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 1 கோடி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையினை வலியுறுத்தி இந்த மறியல் போராட்டம் நடந்தது.

    கம்யூனிஸ்டு கட்சியினருடன் தலித் அமைப்புகளும் சேர்ந்து இந்த மறியலில் ஈடுபட்டனர். மாநில செயலாளர் சாமுவேல்ராஜ் தலைமையில் காளைமாடு சிலை அருகே இவர்கள் குவிந்தனர்.

    மாநகர செயலாளர் ரகுராமன், செயற்குழு உறுப்பினர் துரைராஜ், விடுதலை சிறுத்தைகட்சி அமைப்பு செயலாளர் விநாயக மூர்த்தி, வடக்கு மாவட்ட செயலாளர் சிறுத்தை வள்ளுவன், மாநகர செயலாளர் அம்ஜத்கான், ஜாபர் அலி, பைசல் அகமது.

    தமிழ்புலிகள் மாநில பொது செயலாளர் இளவேனில் மாவட்ட செயலாளர் சிந்தனை செல்வன், திராவிடர் கழக மாநில அமைப்பு செயலாளர் சண்முகம், ஆதிதமிழர் பேரவை மாவட்ட செயலாளர் கோபால் உள்பட 75 பெண்கள் உள்பட 350 பேர் திரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்களை முழங்கியபடி ரெயில் நிலையம் நோக்கி சென்றனர்.

    ரெயில் நிலையம் முன் போராட்டக்காரர்கள் உள்ளே நுழைய முடியாத வண்ணம் பேரிகார்டு அமைக்கப்பட்டிருந்தது. பாதுகாப்பு பணியில் போலீஸ் துணை சூப்பிரண்டுகள் ராஜ்குமார், எட்டியப்பன் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் போலீசார் இருந்தனர்.

    ஊர்வலமாக வந்த போராட்டக்காரர்கள் பேரி கார்டை தள்ளிவிட்டு ரெயில் நிலையத்துக்குள் புகுந்தனர்.

    3-வது பிளாட் பார்முக்கு சென்ற அவர்கள் அங்கு நின்று கொண்டிருந்த கோவை- ஈரோடு பயணிகள் ரெயில் முன் என்ஜினில் அமர்ந்து ரெயில் மறியலில் ஈடுபட்டனர். மேலும் பலர் தண்டவாளத்திலும் ரெயிலை மறித்து அமர்ந்தனர். இதனால் ரெயில் நிலையத்தில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

    சிறிதுநேரம் கழித்து வெளியே வந்த அவர்களை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். 350 பேரும் கைது செய்யப்பட்டனர். #tamilnews
    ×