என் மலர்tooltip icon

    ஈரோடு

    ஈரோடு நகரப் பகுதிகளில் புதை வடகம்பிகள் பொருத்தும் பணி நடைபெற இருப்பதால் நாளை சில பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் திருநகர் காலனி மின் பாதையில் மும்முனை கம்பங்கள் அமைத்து புதைவட கம்பியை பொருத்தும் பணி நடக்கிறது.

    இதையட்டி நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது.

    வீ.சி.டி.வி. ரோடு (மல்லிகை அரங்கம்), திருநகர் காலனி, மாதவக்காடு, சிந்தன்நகர், கிருஷ்ணம்பாளையம், காமலாநகர், சுக்கன்நகர், ஆர்.கே.வீ.நகர், ராஜகோபால தோட்டம், ராமமூர்த்திநகர், எம்.ஜி.ஆர்.நகர், வண்டியுரான் கோவில் வீதி, மூலப்பட்டறை,
    ஈ.வி.கே.சம்பத்சாலை, கே.என்.கே. ரோடு, ராஜாஜிபுரம், மில்வீதி, காந்திபுரம் 1, 2, 3 வீதிகள், கண்ணையன் வீதி, சுப்பையன் வீதி, மரப்பாலம் ரோடு, குயிலான் தோப்பு, கருங்கல்பாளையம், மேட்டூர் ரோடு (பஸ் நிலையம் பகுதிகள்), திருவள்ளுவர் குடில், மற்றும் காவேரிரோடு ஆகிய பகுதிகள்.

    இத்தகவலை ஈரோடு மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் சண்முகசுந்தரம் தெரிவித்து உள்ளார்.
    ராமநாதபுரம் மாவட்டதை சேர்ந்த வாலிபர் உடல் உறுப்பு தானத்தை வலியுறுத்தி ஒற்றை காலில் சைக்கிளில் சுற்றுப்பணம் மேற்கொண்டு வருகிறார்.
    பெருந்துறை:

    ராமநாதபுரம் மாவட்டம், திருநகர் பகுதியை சேர்ந்தவர் விஜயசாமி, ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர். இவரது மகன் மணிகண்டன்(36). 10-ம் வகுப்பு படிக்கும் போது கிரிக்கெட் விளையாடிய போது ஏற்பட்ட விபத்தில் தனது இடது காலை முழுவதுமாக மணிகண்டன் இழந்து விட்டார்.

    தற்போது எம்.காம், பி.எட், பிலிட் படித்து முடித்த இவர் தனது கால் ஊனத்தை கருத்தில் கொள்ளாமல் மற்றவர்களை போல் தானும் ஏதாவது சாதனைகள் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் தனது ஒற்றைக்காலில் சைக்கிள் ஓட்டி பழகியுள்ளார்.

    பின்னர் இதனைக் கொண்டே சாதனைகள் படைக்கும் எண்ணத்துடன் நதிநீர் இணைப்பு, மழைநீர் சேமிப்பு, மரக்கன்றுகள் நடுதல், பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு, உடல் உறுப்பு தானம், காற்று மாசுபடுவதை தடுத்தல் உள்ளிட்ட பல்வேறு சமூக சிந்தனைகளை பொதுமக்களுக்கு கொண்டு செல்லும் வகையில் விழிப்புணர்வு ஊர்வலமாக தமிழகம் முழுவதும் சைக்கிளில் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

    கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கோயமுத்தூர் வந்த இவர் நேற்று பெருந்துறைக்கு வந்தார். பெருந்துறை புதிய பஸ் நிலையம் பகுதியில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய நோட்டீஸ்களை வினியோகித்த அவர் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சேலம் நோக்கி சென்றார். வருகிற 1-ந் தேதி சென்னை மெரினா பீச்சில் தனது பயணத்தை நிறைவு செய்யும் இவர் அங்கு தலைமை செயலகத்தில் முதல்வரை நேரில் சந்திக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். அரசு போட்டித்தேர்வுகளில் கவனம் செலுத்தி வரும் இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். தற்போது 3-வது தடவையாக இவர் இந்த பயணத்தை மேற்கொள்வதாக தெரிவித்தார்.
    ஆப்பக்கூடல் அருகே கள்ளக்காதலன் இறந்த சோகத்தில் கள்ளக்காதலி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    ஆப்பக்கூடல்:

    திருப்பத்தூர் மாவட்டம், மற்றபள்ளி பகுதியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவர் இதே பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். சத்தியமூர்த்திக்கும் கார்த்திகா(28) என்பருக்கும் திருமணம் ஆகி 8 வருடங்கள் ஆனநிலையில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.

    இவரது பக்கத்து ஊரை சேர்ந்தவர் ஜெகதீஸ்(25). இவர் அந்த பகுதியில் அடிக்கடி சென்று வந்து கொண்டிருந்ததில் கார்த்திகாவுடன் பழக்கம் ஏற்பட்டது.

    பின்பு இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஈரோடு மாவட்டம், ஆப்பக்கூடல் சென்னிமலைக் கவுண்டன் புதூரில் உள்ள தனது நண்பர் சண்முகமூர்த்தி வீட்டிற்கு, ஜெகதீஸ் கார்த்திகாவை கூட்டி வந்து தங்கி இருந்தார்.

    இதனையடுத்து கார்த்திகாவை காணவில்லை என்று கணவர் மற்றும் உறவினர்கள் திருப்பத்தூர் பகுதிகளில் தேடியுள்ளனர். தன்னை தேடி கொண்டு இருப்பது தெரியவர கார்த்திகா மீண்டும் திருப்பத்தூர் அருகே மற்றபள்ளியில் தனது கணவர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

    இந்நிலையில் ஜெகதீஸ் கார்த்திகா உடனான உறவு தெரிந்து இவர்களை பிரித்து வைத்து, கார்த்திகாவை சத்தியமூர்த்தி கண்டித்துள்ளார்.

    இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு கார்த்திகாவை பிரிந்த ஜெகதீஸ் தற்கொலை செய்து கொணடார். ஜெகதீஸ் இறந்து போனதில் மனமுடைந்த இருந்த கார்த்திகா மீண்டும் ஆப்பக்கூடல் சென்னி மலைக்கவுண்டன்புதூரில் உள்ள ஜெகதீசின் நண்பர் சண்முகமூர்த்தி வீட்டிற்கு நேற்று காலை இவர் மட்டும் தனியாக வந்துள்ளார்.

    கார்த்திகா தனது துணிமணிகளை எடுத்துக் கொண்டு சென்று விடுவதாக சண்முகமூர்த்தியிடம் கூறியுள்ளார். இந்நிலையில் சண்முக மூர்த்தி நேற்று காலை வெளியில் சென்று வீடு திரும்பி வந்து பார்க்கையில் கார்த்திகா மின்விசிறியில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.

    அதிர்ச்சியடைந்த சண்முகமூர்த்தி ஆப்பக்கூடல் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்த கார்த்திகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

    இச்சம்பவம் குறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சத்தியமங்கலம் அருகே 3 மாதமாக கால்நடைகளை வேட்டையாடும் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டுள்ளது.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திக்குஉட்பட்டது தாளவாடி வனச்சரத்தில் அமைந்துள்ளது தொட்டகாஜனூர், பீம்ராஜ்நகர், சூசைபுரம் இப்பகுதியில் விவசாயிகள் அதிக அளவில் உள்ளனர்.

    கடந்த 3 மாதம் முன்பு வனப்பகுதியில் இருந்து வந்த சிறுத்தை இங்கு உள்ள. 4ஆடுகள் மற்றும் 15 நாய்களை வேட்டையாடி வருகிறது.

    இந்நிலையில் கடந்த வாரம் பீம்ராஜ்நகர் பகுதிதை சேர்ந்த விவசாயி மணி என்பவர் ஆட்டை சிறுத்தை ஒன்று கடித்து கொன்றது.சிறுத்தை கடித்ததில் ஆடுபலியானது வனத்துறையினரும் கால்தடங்களை வைத்து சிறுத்தை வேட்டையாடியதை உறுதி செய்தனர்.

    தொடர்ந்து கால்நடைகளை வேட்டையாடி வரும் சிறுத்தையை கூண்டுவைத்து பிடிக்க வேண்டும் என வனத்துறைக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். அதை தொடர்ந்து 2 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது.

    அதில் சிறுத்தை நடமாட்டம் பதிவானது அதை தொடர்ந்து கல்குவாரி அருகே சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கூண்டுவைத்தனர் கூண்டில் ஒரு புறம் ஆட்டை கட்டி வைத்துள்ளனர் வனத்துறையினர் சிக்குமா சிறுத்தை?.

    ஈரோடு மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் 407 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 4896 பேர் களத்தில் உள்ளனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி குழு கவுன்சிலர் பதவிகள் 19, ஒன்றிய குழு கவுன்சிலர் பதவிகள் 183, ஊராட்சி மன்ற தலைவர் பதவிகள் 225, ஊராட்சி வார்டு கவுன்சிலர் பதவிகள் 2097 என 2524 பதவிகளுக்கு இரண்டு கட்டங்களாக வரும் 27, 30-ந் தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது.

    இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9-ந் தேதி முதல் தொடங்கி 16-ந் தேதி வரை நடந்தது. ஈரோடு மாவட்டம் முழுவதும் இதுவரை உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக 8277 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இதில் 127 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பலர் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர்.

    இதனை தொடர்ந்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 19 மாவட்ட ஊராட்சி குழு கவுன்சிலர் பதவிக்கு 125 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இதில் 3 பேர் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. 32 பேர் தங்களது வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டனர்.

    இதையடுத்து 90 பேர் தற்போது களத்தில் உள்ளனர். 183 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு ஆயிரத்து 87 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதில் 40 பேர் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. 278 பேர் வேட்பு மனுவை திரும்பப் பெற்றுக் கொண்டனர். இறுதியாக 769 பேர் களத்தில் உள்ளனர். இதேபோல் 225 ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ஆயிரத்து 325 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதில் 36 பேர் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. 305 பேர் மனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டனர். 8 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். 976 பேர் களத்தில் உள்ளனர்.

    இதேபோல் 2097 ஊராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்கு ஆயிரத்து 740 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 55 பேர் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. 382 பேர் தங்கள் மனுக்களை திரும்பப் பெற்றுக்கொண்டனர். 407 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 4896 பேர் களத்தில் உள்ளனர். 4 இடங்களில் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
    ஈரோடு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    குன்னத்தூர் அருகே சுன்டக்காம்பாளையம் ஊராட்சி தாளப்பதி பகுதியை சேர்ந்தவர் விஜய குமார் (வயது 56).

    இவர் ஊராட்சியில் பகுதி நேர வாட்டர் மேனாக பணிபுரிந்து வந்தார். மேலும் சொந்தமாக லேத் ஒர்க் ஷாப்பு வைத்துள்ளார்.

    இவர் வீட்டில் இருந்து கடைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது வந்த அடையாளம் தெரியாத ஒரு வாகனம் அவர் மீது மோதியது. இதில் அவர் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து குன்னத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அவர் மீது மோதிய வாகனம் குறித்து அந்த பகுதியில் உள்ள சி. சி. டி .வி. கேமரா மூலம் கண்காணித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பவானியில் 6-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலாளியை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
    பவானி:

    பவானியை சேர்ந்தவர் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.

    இவர் பவானியில் ரோட்டோரத்தில் விளையாடிக் கொண்டிருந்த 11 வயதான, 6-ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். அச்சிறுமி கூச்சலிட்டதால் அவரது தாய் அதிர்ச்சி அடைந்து தொழிலாளியிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரமடைந்த தொழிலாளி இருவரையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.

    இதுகுறித்து அச்சிறுமியின் தாய் பவானி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் தொழிலாளியை கைது செய்தனர்.
    குன்னத்தூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    குன்னத்தூர்:

    குன்னத்தூர் அருகே சுன்டக்காம்பாளையம் ஊராட்சி தாளப்பதி பகுதியை சேர்ந்தவர் விஜய குமார் (வயது 56).

    இவர் ஊராட்சியில் பகுதி நேர வாட்டர் மேனாக பணிபுரிந்து வந்தார். மேலும் சொந்தமாக லேத் ஒர்க்‌ஷாப் வைத்துள்ளார்.

    இவர் வீட்டில் இருந்து கடைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத ஒரு வாகனம் அவர் மீது மோதியது. இதில் அவர் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து குன்னத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அவர் மீது மோதிய வாகனம் குறித்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி .வி. கேமரா மூலம் கண்காணித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தாளவாடி அருகே விவசாய தோட்டத்தில் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்துள்ளன.

    தாளவாடி:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் தாளவாடி, ஜீர்கள்ளி, தலமலை, ஆசனூர்,கேர்மாளம், கடம்பூர், டி.என்.பாளையம், சத்தியமங்கலம், பவானிசாகர், விளாமூண்டி என 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் யானை, புலி, சிறுத்தை, மான், கரடி, செந்நாய் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. வனவிலங்குகள் உணவு தண்ணீர் தேடி விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர்கதையாகி வருகிறது.

    இந்நிலையில் தாளவாடி வனச்கரகத்திக்கு உட்பட்ட மல்குத்திபுரம் கிராத்தை சேர்ந்தவர் விவசாயி சக்திவேல். இவர் தனது தோட்டத்தில் தென்னை மரங்களை வளர்த்து வந்துள்ளார். நேற்று இரவு அருகில் உள்ள வனப்பகுதியில் இருந்து வந்த காட்டு யானைகள் இவரது தென்னை மரங்களை நாசம் செய்துள்ளது. காலையில் விவசாயி சக்திவேல் தனது தோட்டத்திக்கு சென்று பார்த்தபோது தனது தென்னை மரங்கள் சேதம் அடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    வனப்பகுதியில் இருந்து வந்த யானைகள் இரவு நேரத்தில் தனது தென்னை மரங்களை நாசம் செய்துள்ளது தெரியவந்தது. சுமார் 15 தென்னை மரங்களை யானை சேதாரபடுத்தியுள்ளது. இதற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

    ஈரோடு மாவட்டத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு 8 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி குழு கவுன்சிலர் பதவிகள் 19, ஒன்றிய குழு கவுன்சிலர் பதவிகள் 183, ஊராட்சி மன்ற தலைவர் பதவிகள் 225, ஊராட்சி வார்டு கவுன்சிலர் பதவிகள் 2097 என 2524 பதவிகளுக்கு இரண்டு கட்டங்களாக வரும் 27, 30-ந் தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9ம் தேதி முதல் தொடங்கி 16-ந் தேதி வரை நடந்தது.

    ஈரோடு மாவட்டம் முழுவதும் இதுவரை உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக 8277 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திதிருந்தனர். இதில் 127 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பலர் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர்.

    இதனை தொடர்ந்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் 225 ஊராட்சி மன்றத்தலைவர் பதவிக்காக வேட்பு மனுக்களைத்தாக்கல் செய்து இருந்தனர்.

    இந்நிலையில் ஈரோடு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கதிரம்பட்டி, பிச்சாண்டாம்பாளையம் ஆகிய இரு ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியின்றி 2 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

    இதைப்போல் மொடக்குறிச்சி உட்பட்ட கஸ்பாபேட்டை, கொடுமுடிக்கு உட்பட்ட வள்ளிபுரம், பெருந்துறைக்கு உட்பட்ட செல்லப்பம்பாளையம், அம்மாபேட்டைக்கு உட்பட்ட புதூர், அந்தியூர் பகுதிக்கு உட்பட்ட பச்சாம்பாளையம், சென்னிமலை பகுதிக்கு உட்பட்ட கொடுமணல் ஆகிய பகுதிகளிலும் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
    பவானி அருகே பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
    பவானி:

    பவானி அருகேயுள்ள முன்னம் ஊராட்சிக்குட்பட்ட மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ஹரிஹரன் (வயது 21). இவர் ஈரோட்டில் கேட்டரிங் பணி செய்து வருகிறார். அதேபோல் புன்னம் பெரிய மேட்டூர் பகுதியை சேர்ந்தவர் மல்லிகா (20). இவர் பவானி அருகேயுள்ள தனியார் கல்லூரியில் பி.காம்.மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.

    ஹரிஹரனும், மல்லிகாவும் கடந்த 3 வருடமாக காதலித்து வந்துள்ளனர். இவர்கள் காதல் விவகாரம் இரு வீட்டிற்க்கும் தெரிய வந்தது. பெண் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. எனினும் காதலில் உறுதியாக இருந்த ஜோடி நேற்று காலை வீட்டை விட்டு வெளியேறி சித்தோடு - சூரியம்பாளையம் அருகே உள்ள புது மாரியம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

    இதையடுத்து புதுமண ஜோடி பாதுகாப்பு கோரி பவானி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

    இரு வீட்டு பெற்றோரையும் போலீசார் விசாரணைக்கு அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் பெண் வீட்டார் மகள் காதல் திருமணத்தை ஏற்கவில்லை. அதே நேரத்தில் ஹரிஹரன் வீட்டில் திருமணத்தை ஏற்று கொண்டனர். இதையடுத்து ஹரிஹரன் தனது காதல் மனைவியை அழைத்து கொண்டு தனது பெற்றோருடன் சென்றார்.
    கோபி அருகே விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோபி:

    பெருந்துறையை அடுத்த பச்சாக் கவுண்டன் பாளையம், அரிஜன காலனியைச் சேர்ந்தவர் ராமசாமி (வயது 20). அதே பகுதியைச் சேர்ந்தவர் திவாகரன் (21). இருவரும் நண்பர்கள். இந்நிலையில் சம்பவத்தன்று இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். வண்டியை ராமசாமி ஓட்ட பின்னால் திவாகரன் உட்கார்ந்து வந்து கொண்டிருந்தார்.

    கிரேநகர் - விஜயமங்கலம் ரோடு, கோடாபுலியூர் பிரிவு அருகே வந்து கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த லாரியும் மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதியது.

    இதில் மோட்டார் சைக்கிளில் வந்த ராமசாமி, திவாகரன் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இருவருக்கும் தலை, கால்களில் பலத்த அடிபட்டு மயக்கமடைந்து சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    இதுகுறித்து அந்த வழியாக வந்தவர்கள் திங்களூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். திங்களூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து 2 பேர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து நடந்ததும் லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.

    இதுகுறித்து திங்களூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×