என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    பவானி அருகே பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்த காதல் ஜோடி

    பவானி அருகே பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
    பவானி:

    பவானி அருகேயுள்ள முன்னம் ஊராட்சிக்குட்பட்ட மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ஹரிஹரன் (வயது 21). இவர் ஈரோட்டில் கேட்டரிங் பணி செய்து வருகிறார். அதேபோல் புன்னம் பெரிய மேட்டூர் பகுதியை சேர்ந்தவர் மல்லிகா (20). இவர் பவானி அருகேயுள்ள தனியார் கல்லூரியில் பி.காம்.மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.

    ஹரிஹரனும், மல்லிகாவும் கடந்த 3 வருடமாக காதலித்து வந்துள்ளனர். இவர்கள் காதல் விவகாரம் இரு வீட்டிற்க்கும் தெரிய வந்தது. பெண் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. எனினும் காதலில் உறுதியாக இருந்த ஜோடி நேற்று காலை வீட்டை விட்டு வெளியேறி சித்தோடு - சூரியம்பாளையம் அருகே உள்ள புது மாரியம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

    இதையடுத்து புதுமண ஜோடி பாதுகாப்பு கோரி பவானி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

    இரு வீட்டு பெற்றோரையும் போலீசார் விசாரணைக்கு அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் பெண் வீட்டார் மகள் காதல் திருமணத்தை ஏற்கவில்லை. அதே நேரத்தில் ஹரிஹரன் வீட்டில் திருமணத்தை ஏற்று கொண்டனர். இதையடுத்து ஹரிஹரன் தனது காதல் மனைவியை அழைத்து கொண்டு தனது பெற்றோருடன் சென்றார்.
    Next Story
    ×