என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரோடு
    X
    ஈரோடு

    ஈரோடு மாவட்டத்தில் 407 ஊராட்சி வார்டு கவுன்சிலர்கள் போட்டியின்றி தேர்வு

    ஈரோடு மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் 407 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 4896 பேர் களத்தில் உள்ளனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி குழு கவுன்சிலர் பதவிகள் 19, ஒன்றிய குழு கவுன்சிலர் பதவிகள் 183, ஊராட்சி மன்ற தலைவர் பதவிகள் 225, ஊராட்சி வார்டு கவுன்சிலர் பதவிகள் 2097 என 2524 பதவிகளுக்கு இரண்டு கட்டங்களாக வரும் 27, 30-ந் தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது.

    இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9-ந் தேதி முதல் தொடங்கி 16-ந் தேதி வரை நடந்தது. ஈரோடு மாவட்டம் முழுவதும் இதுவரை உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக 8277 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இதில் 127 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பலர் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர்.

    இதனை தொடர்ந்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 19 மாவட்ட ஊராட்சி குழு கவுன்சிலர் பதவிக்கு 125 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இதில் 3 பேர் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. 32 பேர் தங்களது வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டனர்.

    இதையடுத்து 90 பேர் தற்போது களத்தில் உள்ளனர். 183 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு ஆயிரத்து 87 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதில் 40 பேர் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. 278 பேர் வேட்பு மனுவை திரும்பப் பெற்றுக் கொண்டனர். இறுதியாக 769 பேர் களத்தில் உள்ளனர். இதேபோல் 225 ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ஆயிரத்து 325 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதில் 36 பேர் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. 305 பேர் மனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டனர். 8 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். 976 பேர் களத்தில் உள்ளனர்.

    இதேபோல் 2097 ஊராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்கு ஆயிரத்து 740 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 55 பேர் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. 382 பேர் தங்கள் மனுக்களை திரும்பப் பெற்றுக்கொண்டனர். 407 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 4896 பேர் களத்தில் உள்ளனர். 4 இடங்களில் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
    Next Story
    ×