என் மலர்tooltip icon

    ஈரோடு

    • கோபிசெட்டிபாளையம் அருகே கொளப்பலூரில் பெற்றோர் பேசாததால் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • இதுகுறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த கொளப்பலூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரபாகரன் (32). இவருக்கும் கடலூர் மாவட்டம் புவனகிரி கிராமம் கும்பிமூலை பகுதியை சேர்ந்த இந்து (24) என்பவருக்கும் திருமணம் நடந்தது.

    பிரபாகரன் பெருந்து றையில் உள்ள ஒரு கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இந்துவுக்கு ஏற்கனவே ஒருவரிடம் திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து பெருந்துறை கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அதே கம்பெனியில் வேலை பார்த்தபோது பிரபாகரனிடம் பழக்கம் ஏற்பட்டு பின்னர் 2 பேரும் கடந்த மே மாதம் 30-ந் தேதி திருமணம் செய்து கொண்டனர்.

    இந்த திருமணத்திற்கு இந்துவின் பெற்றோர் விருப்பம் தெரிவிக்க வில்லை. இதனால் அவரது பெற்றோர் இந்துவிடம் பேசாமல் இருந்து வந்துள்ளனர். இதனால் இந்து கடந்த சில நாட்களாக மன வருத்தத்தில் இருந்து உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று பிரபாகரன் வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்தார்.

    அப்போது இந்து திடீரென வாந்தி எடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கேட்டபோது பெற்றோர் தன்னிடம் பேசாத காரணத்தால் தற்கொலை செய்ய முடிவு எடுத்து எலி பேஸ்ட் (விஷம்) சாப்பிட்டு விட்டதாக தெரிவித்தார்.

    இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பிரபாகரன் மனைவியை சிகிச்சை க்காக கோபி அரசு மருத்துவ மனைக்கு அழைத்து சென்றார். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் கோவையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சையில் இருந்த இந்து சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெரிய மாரியம்மன் கோவிலில் அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு, அம்மனுக்கு அபிஷேம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
    • நூற்றுக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிபட்டனர்.

    ஈரோடு:

    ஆடி மாதம் 2-வது வெள்ளிக்கிழமையை யொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

    ஈரோட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவிலில் அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு, அம்மனுக்கு அபிஷேம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

    அதைத்தொடர்ந்து மகா தீபாராதணை காண்பிக்கப்ப ட்டது. கருங்கல்பாளையம் சோளீஸ்வரர்கோவில் வில்வேஸ்வரர், புஷ்பநாயகி அம்மனுக்கு புனித நீர் ஊற்றி பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

    இதேபோல், சின்னமாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் கொங்காலம்மன் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் ஆடி 2-ம் வெள்ளியையொட்டி சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டு சென்றனர்.

    இதேபோல் மிகவும் புகழ்பெற்ற சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோவிலில் இன்று அதிகாலையிலே நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடை பெற்றது.

    சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பொதுமக்களுக்கு அருள் பாலித்தார். பெண்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிபட்டு சென்றனர்.

    இதேபோல் தண்டு மாரியம்மன் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. தாளவாடியில் உள்ள மாரியம்மன் கோவில், பவானி கருமாரியம்மன் கோவில், புகழ்பெற்ற செல்லியாண்டி அம்மன் கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

    கோபிசெட்டிபாளையம் கொண்டத்து காளியம்மன் கோவிலில் இன்று அதிகாலை முதலே அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்ய ப்பட்டு வருகிறது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிபட்டனர்.

    சாரதா மாரியம்மன் கோவில், அந்தியூரில் உள்ள பத்திரகாளி அம்மன் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.

    • ஈரோடு வில்லரசம்பட்டி தென்றல் நகரை சேர்ந்தவர் முருகேசன்.
    • ஒரு குளத்தின் அருகே ஒரு மாணவனின் பள்ளி சீருடை இருந்தது தெரிய வந்தது.

    ஈரோடு:

    ஈரோடு வில்லரசம்பட்டி தென்றல் நகரை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் ஹேமச்சந்திரன் (12). இவர் ஈரோடு மாணிக்கம்பாளையத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.

    மாணவர் ஹேமச்சந்திரன் நேற்று வழக்கம் போல் பள்ளிக்கு புறப்பட்டுச் சென்றார். ஆனால் மாலை நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் ஹேமச்சந்திரனை பல்வேறு இடங்களில் தேடி உள்ளனர்.

    பின்னர் ஹேமச்சந்திரன் படிக்கும் பள்ளிக்கு சென்றும் விசாரித்தனர். அப்போது ஹேமச்சந்திரன் மாலை பள்ளி முடிந்ததும் கிளம்பி சென்றது தெரியவந்தது.

    ஆனால் அவர் எங்கு சென்றார் என தெரியவில்லை. இதையடுத்து அவரது பெற்றோர் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் ஹேமச்சந்திரன் மாயமானதாக வழக்கு பதிவு செய்து அவரை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் கருவில் பாறை வலசு என்ற பகுதியில் உள்ள ஒரு குளத்தின் அருகே ஒரு மாணவனின் பள்ளி சீருடை இருந்தது தெரிய வந்தது. இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் வீரப்பன் சத்திரம் போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து அவர்கள் விரைந்து வந்து குளத்தில் இறங்கி தேடினர். நள்ளிரவில் ஒரு மணி அளவில் குளத்தில் இருந்து ஒரு மாணவர் உடலை மீட்டனர். மேலும் சந்தேகத்தின் பெயரில் மாயமான மாணவர் ஹேமச்சந்திரனின் பெற்றோரை போலீசார் வரவழைத்துக் காட்டினர். அப்போது அவர்கள் பிணமாக மீட்கப்பட்டது தங்களது மகன் ஹேமச்சந்திரன் தான் என்று தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீசார் மாணவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மாணவர் ஹேமச்சந்திரன் படித்த பள்ளி மாணிக்கம்பாளையத்தில் உள்ளது. அங்கிருந்து அவர் பிணமாக கிடந்த கருவில்பாறை வலசு குளம் 6 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. அப்படி இருக்கையில் மாணவர் எப்படி இங்கு வந்தார்? மேலும் இவர் தனியாக வந்தாரா? அல்லது நண்பர்களுடன் வந்தாரா? என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஒருவேளை குளிக்கும் போது அவர் தண்ணீரில் மூழ்கி இறந்து இருந்தால் உடன் வந்தவர்கள் ஏன் தகவல் தெரிவிக்கவில்லை என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    மாயமான மாணவர் குளத்தில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • எண்ணமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணிபுரிந்து வருபவர் சரவண பிரபு.
    • சின்னத்தம்பி பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பணி மாறுதல் செய்தனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள எண்ணமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணிபுரிந்து வருபவர் சரவண பிரபு.

    இவரை சின்னத்தம்பி பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பணி மாறுதல் செய்தனர். இந்த தகவல் அறிந்த எண்ணமங்கலம், கோவிலூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் டாக்டர் இடமாற்றத்தை எதிர்த்து எண்ணமங்கலம் பஸ் நிறுத்தத்தில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் டாக்டர் சரவணப் பிரபுவை எண்ணமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து பணி மாறுதல் செய்யக்கூடாது என கோஷம் எழுப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த அந்தியூர் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி, விஜயகுமார். மண்டல துணை தாசில்தார் ஜெகநாதன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சக்தி கிருஷ்ணன், வருவாய் ஆய்வாளர் சுதாகர் கிராம நிர்வாக அலுவலர் சதீஷ்குமார், மகளிர் இன்ஸ்பெக்டர் பொன்னம்மாள் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    பேச்சு வார்த்தையின் இறுதியில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் இது சம்பந்தமாக மனு வழங்க அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

    இதைத்தொடர்ந்து சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

    இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

    • 100 அடியை தாண்டியதால் பவானிசாகர் அணை பார்ப்பதற்கு கடல் போல் ரம்மியமாக காட்சியளிக்கிறது.
    • சுற்றுலா பயணிகள் பவானிசாகர் அணைக்கு வரத் தொடங்கியுள்ளனர்.

    ஈரோடு:

    பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது.

    இதையடுத்து பவானிசாகர் அணை 28-வது முறையாக 100 அடியை எட்டியது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100.20 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2,318 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

    அணையில் இருந்து பவானி ஆற்றுக்கு 100 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடியும் என மொத்தம் 105 கன அடி தண்ணீர் அணையிலிருந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.

    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியதும் உபரி நீர் அப்படியே பவானி ஆற்றில் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் பவானி ஆற்றங்கரை பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் அணைக்கு நீர்வரத்து குறைந்ததால் பவானிசாகர் அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்படவில்லை. தொடர்ந்து அணையில் 100 அடிக்கு மேல் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு வருகிறது.

    100 அடியை தாண்டியதால் பவானிசாகர் அணை பார்ப்பதற்கு கடல் போல் ரம்மியமாக காட்சியளிக்கிறது. இதனால் சுற்றுலா பயணிகள் பவானிசாகர் அணைக்கு வரத் தொடங்கியுள்ளனர். அவர்கள் பவானிசாகர் அணை மேல் பகுதிக்கு சென்று கண்டுகளித்து வருகின்றனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    பவானிசாகர் அணை கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14-ந் தேதி மாலை 4 மணிக்கும், 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20-ந் தேதி காலை 6 மணிக்கும், 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இரவு 10 மணிக்கும், கடந்த ஆண்டு ஜூலை 26 -ந் தேதி மாலை 4 மணிக்கும் 100 அடியை எட்டி இருந்தது.

    அதனைத் தொடர்ந்து 5-வது ஆண்டாக பவானிசாகர் அணை தற்போது 100 அடியை தொட்டுள்ளது. பவானிசாகர் அணை தொடர்ந்து 5-வது ஆண்டாக 100 அடியை தொட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதேபோல் அந்தியூர் அடுத்த பர்கூர் மலை அடிவாரப் பகுதியில் உள்ள வரட்டுப்பள்ளம் அணை இன்று காலை 6 மணி அளவில் தனது முழுக் கொள்ளளவான 33.5 அடியை எட்டியது. அணைக்கு வரும் தண்ணீர் உபரி நீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த அணை கடந்த 20 வருடங்களுக்குப் பிறகு இந்த ஆண்டுதான் ஏப்ரல் மாதம் முதல் இன்று வரை 3 முறை நிரம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதனால் இந்த அணையை நம்பி உள்ள பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    • ஈரோடு வ.உ.சி பூங்கா அருகே ஈரோடு அரசு அருங்காட்சியகம் உள்ளது.
    • நாளை சர்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு புலிகளின் முக்கியத்துவம் அவற்றின் பண்பு, புலிகள் எண்ணிக்கை பற்றிய புகைப்படங்கள் விளக்கத்துடன் காட்சிப்படுத்தப்பட உள்ளது. இதில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் புகைப்படமும் இடம்பெறுகிறது.

    ஈரோடு:

    ஈரோடு வ.உ.சி பூங்கா அருகே ஈரோடு அரசு அருங்காட்சியகம் உள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் பண்டைய காலங்களில் பயன்படுத்தபட்ட பொருட்கள், நாணயங்கள், முதுமக்கள் தாழிகள் இன்னும் பல அபூர்வ பொருட்கள் சேகரி க்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

    இதனை பொதுமக்கள் தினமும் பார்த்து வருகின்றனர். இந்நிலையில் அரசு அருங்காட்சியகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து அருங்கா ட்சியகத்தின் காப்பாட்சியர் ஜென்சி கூறியதாவது:-

    ஈரோடு அரசு அருங்காட்சியகத்தில் கல்லூரி மாணவ- மாணவி களுக்கு உள்விளக்க பயிற்சி கடந்த 27-ந் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி வரும் ஆகஸ்ட் மாதம் 10-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    இந்த பயிற்சியில் மாணவர்களுக்கு அருங்காட்சியகம் பற்றியும், அதன் முக்கியத்துவம் வரலாறு, பொருட்களை சேகரிக்கும் பழக்கம், நாணயங்கள், தோல் பாவைகள், விலங்கியல் பொருட்கள், கற் சிற்பங்கள், மரச்சிற்பங்கள் பாதுகாக்கும் முறைகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

    மேலும் நாளை சர்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு புலிகளின் முக்கியத்துவம் அவற்றின் பண்பு, புலிகள் எண்ணிக்கை பற்றிய புகைப்படங்கள் விளக்கத்துடன் காட்சிப்படுத்தப்பட உள்ளது. இதில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் புகைப்படமும் இடம்பெறுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 மாதத்திற்கும் மேலாக கொரோனா தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
    • இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி மாவட்டத்தில் ஒரே நாளில் மேலும் 55 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 மாதத்திற்கும் மேலாக கொரோனா தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. பிற மாவட்டங்களில் தினசரி பாதிப்பு குறைந்து வரும் நிலையில் ஈரோட்டில் கடந்த 6 நாட்களாக தினசரி பாதிப்பு 50-க்கு மேல் பதிவாகி வருகிறது.

    இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி மாவட்டத்தில் ஒரே நாளில் மேலும் 55 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 33 ஆயிரத்து 941 ஆக உயர்ந்துள்ளது.

    மேலும் சிகிச்சையில் இருந்த 41 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1 லட்சத்து 32 ஆயிரத்து 810 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதிப்புடன் 397 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    நேற்று முன்தினம் மாவட்டத்தில் 500 பேருக்கு மேற்கொண்ட கொரோனா பரிசோதனையில் 55 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது 10.5 சதவீதம் பாதிப்பு ஆகும்.

    • எதிர்பாராத விதமாக திலகவதி மற்றும் அஸ்வின் ஆகியோர் குட்டையின் ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கினர்.
    • அப்பகுதிக்கு சென்ற பொது மக்கள் குழந்தைகளை மீட்டபோது 2 பேரும் இறந்து விட்டனர்.

    நம்பியூர்:

    நம்பியூர் அருகே உள்ள கே.மேட்டுப்பாளையம் பகுதியில் சிவன் கோவில் குட்டை அமைந்துள்ளது. இதில் புளியம்பட்டி நொச்சிகுட்டை பகுதியை சேர்ந்த ராம்குமார் மகள் திலகவதி (17), ஆலம்பாளையம் கிருஷ்ண சாமியின் மகன் அஸ்வின் (11) மற்றும் சவுமியா, தன்யா, மனோஜ், பவித்ரா ஆகியோர் குட்டையில் மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக திலகவதி மற்றும் அஸ்வின் ஆகியோர் குட்டையின் ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கினர். உடனே அருகில் இருந்த குழந்தைகள் பார்த்து பயந்து வீட்டிற்கு வந்து உறவினர்களிடம் திலகவதி மற்றும் அஸ்வின் குட்டையில் மூழ்கி விட்டனர் என கூறியுள்ளனர். உடனடியாக அப்பகுதிக்கு சென்ற பொது மக்கள் குழந்தைகளை மீட்டபோது 2 பேரும் இறந்து விட்டனர். இது குறித்து நம்பியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் பிரேத பரிசோதனைக்காக 2 சிறுவர்கள் உடல் கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் பிரேத பரிசோ தனை முடிந்து இன்று உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 

    • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 99.96 அடியாக உள்ளது.
    • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு மேல் சென்றாலும் உபரிநீர் வெளியேற்றப்படாமல் சேமித்து வைக்கப்படும்.

    ஈரோடு:

    பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாகவே தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து பரவலாக மழை பெய்தது.

    இதனால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வந்தது. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 99.96 அடியாக உள்ளது. வினாடிக்கு 2,498 கனஅடி வீதம் அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

    இதுவரை அணையில் இருந்து தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்காக திறந்து விடப்பட்ட தண்ணீர் இன்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது. பவானி ஆற்றுக்கு தொடர்ந்து 100 கனஅடி, கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கன அடி என மொத்தம் 105 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    அணையில் சேமிப்பு

    இந்நிலையில் இந்த மாதம் இறுதி வரை பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100 அடி வரை மட்டுமே தேக்கி கொள்ள முடியும் என்ற விதி உள்ள போதிலும் தற்பொழுது அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் குறைந்த மழை அளவு பெய்த காரணத்தினாலும், அதனால் நீர்வரத்து குறைந்து காணப்படுவதாலும், இந்த மாதத்தில் இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ள காரணத்தினாலும், பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு மேல் வெளியேற்றப்படும் நீரினை அணையிலேயே சேமிப்பு செய்து பவானிசாகர் அணையின் நீர்மட்டத்தை உயர்த்தி அதன்மூலம் குடிநீர் பாசனம் மற்றும் இதர பயன்பாட்டுக்களுக்கு வருங்காலத்தில் பயன்ப டுத்தலாம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதன் அடிப்படையில் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு மேல் சென்றாலும் உபரிநீர் வெளியேற்றப்படாமல் சேமித்து வைக்கப்படும்.

    இதுபோல் மாவட்டத்தில் மற்ற பிரதான அணைகளான குண்டேரி பள்ளம், பெரும்பள்ளம், வரட்டு பள்ளம் அணை நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. 41.75 அடி உள்ள குண்டேரிபள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 27.08 அடியாக உள்ளது. நேற்று பெய்த கன மழையால் ஒரே நாளில் குண்டேரிபள்ளம் அணை 3 அடி உயர்ந்துள்ளது.

    இதேபோல் 33.50 அடி உள்ள வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 33.43 அடியாக உள்ளது. 30.84 அடியாக உள்ள பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 18.04 அடியாக உள்ளது.

    • மன வேதனையடைந்த அண்ணாமலை, சின்ன சேமூரில் தான் வசித்து வந்த வீட்டில் நேற்று விஷம் குடித்துவிட்டார்.
    • இதுகுறித்து மாலதி அளித்த புகாரின்பேரில் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு, வீரப்பன் சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் மாலதி (68). இவரது கணவர் அண்ணாமலை (69). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் கடந்த 25 ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.இந்த நிலையில், உடல் நலக் குறைவு ஏற்பட்டு வேலைக்கு செல்ல முடியாமலும், தன்னைப் பராமரிக்க யாரும் இல்லாததாலும் மன வேதனையடைந்த அண்ணாமலை, சின்ன சேமூரில் தான் வசித்து வந்த வீட்டில் நேற்று விஷம் குடித்துவிட்டார்.மயங்கிய நிலையில் இருந்த அவரை உறவினர்கள் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    ஆனால், சிகிச்சை பலனின்றி அண்ணாமலை பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து மாலதி அளித்த புகாரின்பேரில் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • தி.மு.க. 15-வது பொதுத்தேர்தலில் பேரூர் கழக தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் மற்றும் பிரதிநிதிகள் தலைமை கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    ஈரோடு, ஜூலை.28-

    தி.மு.க. 15-வது பொதுத்தேர்தலில் பேரூர் கழக தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் மற்றும் பிரதிநிதிகள் தலைமை கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி 1 என்பது அவைத்தலைவரையும், 2 என்பது செயலாளரையும், 3 என்பது துணைச்செயலாளரை (பொது)யும், 4. துணைச்செயலாளரை(ஆதிதிராவிடர்)யும், 5 என்பது துணைச்செயலாளரை(மகளிர்)யும், 6 என்பது பொருளாளரையும், 7 என்பது மாவட்ட பிரதிநிதிகளை (இருவர்)யும், 8 என்பது ஒன்றிய பிரதிநிதிகளை (ஐவர்)யும் குறிப்பிடும்.

    ஈரோடு தெற்கு ஒன்றியம்

    பெருந்துறை கிழக்கு

    பேரூர்: பள்ளபாளையம்

    1.பொன்னுசாமி, 2.சு.தங்கமுத்து, 3.சு.சம்பத்குமார், 4.கே.மாயவன், 5.கே.தங்கமணி, 6.எம்.சம்பத், 7.பி.துரைசாமி, என்.ஜெகநாதன், 8.பி.துரைசாமி, கே.பிரவின்தாஸ், சி.முத்துகுமார், என்.செல்வராஜ், பி.மனோகரன்.

    பேரூர்: காஞ்சிக்கோவில்

    1.மு.சின்னச்சாமி, 2.கே.வி.பி.செந்தில்முருகன், 3.எஸ்.பாஸ்கரன், 4.மா.கிருஷ்ணன், 5.பி.கல்பனா, 6.எஸ்.ஆர்.சதாசிவம், 7.கே.ஆர்.சுப்பிரமணி, கே.கிருஷ்ணமூர்த்தி, 8.கே.எஸ்.ராஜா (எ) மலைச்சாமி, வி.ராமசாமி,வி.சரவணன், கே.என்.மெய்யப்பன், என்.விஸ்வநாதன்.

    பேரூர்: பெத்தாம்பாளையம்

    1.இ.எம்.பழனிச்சாமி, 2.கே.பி.தங்கமுத்து, 3.பி.சிவக்குமார், 4.மு.பழனிச்சாமி, 5.ரா.துளசியம்மாள், 6.ஆர்.சண்முகசுந்தரம், 7.டி.சரவணகுமார், எம்.சுப்பிரமணி, 8.எம்.வெங்கடாசலம், ச.கமலநாதன், எம்.நந்தகோபால், எஸ்.மோகன்ராஜ், சு.செல்வராஜ்.

    நல்லாம்பட்டி

    1.எஸ்.விஜயகுமார், 2.எம்.குருசாமி, 3.என்.கே.தவசியப்பன், 4.ஆர்.செல்வராஜ், 5.பி.தனபாக்கியம், 6.எஸ்.மணிசங்கர், 7.டி.விஸ்வநாதன், டி.ராஜா - 8.சி.சுப்பிரமணி, கே.பச்சியப்பன், வி.பாரதி, பி.சதீஷ், .மோகன்பிரதீப்.

    கொடுமுடி வடக்கு

    பேரூர்: வெள்ளோட்டம்பரப்பு

    1.வி.கே.சண்முகம், 2.ப.சண்முகம், 3.து.கோவர்த்தனன், 4.ப.வீராச்சாமி, 5.எஸ்.காயத்திரி, 6.ம.சின்னுசாமி, 7.க.அண்ணாதுரை, பா .சக்திவேல், 8.சி.குணசேகர், ப.செங்கோட்டுவேல், க.வடிவேல், எஸ்.தங்கவேல், எஸ்.சிவக்குமார்.

    பேரூர்: கொடுமுடி

    1.வி.செல்வராசு, 2.எம்.ராஜா கமால்ஹசன், 3.சி.பரமசிவம், 4.அ.குப்பன்,5.டி.கோமதி, 6.டி.சிவசங்கரன், 7.வி.கே.ஆறுமுகம்,டி.பி.உமர் 8.க.சின்னராசு, கே.முருகேசன், கே.பிரதாப், வி.பெரியசாமி, என்.முருகானந்தம்.

    சென்னசமுத்திரம்

    1.அ.மாணிக்கம், 2.ப.உலகநாதன், 3.ஜி.நவநீதகிருஷ்ணன், 4.மா.வேலுச்சாமி, 5.கே.கோமதி, 6.ஆர்.பழனிச்சாமி, 7.எம்.சக்திவேல், டி.கார்த்திகேயன், 8.பி.பிரகாஷ்குமார், வி.பாஸ்கரன், சி.ராசு, பி.மணி, சி.சக்திவேல்.

    வெங்கம்பூர்

    1.வி.துரைசாமி, - 2.என்.செந்தில்குமார், 3.பி.மோக ன்ராஜ், 4.ஆர்.சுப்பன், 5.பி.விஜயலட்சுமி, 6.பி.மூர்த்தி, 7.எல்.கோமதி, வி.கே.சின்னுசாமி, 8.கே.ராமலிங்கம், எஸ்.சுப்பிரமணியம், எஸ்.ரகுநாதன், பி.வேலுச்சாமி, என்.ஜோதிமணி.

    ஊஞ்சலூர்

    1.எஸ்.பெரியசாமி, 2.யு.கே.சுப்புரத்தினம், 3.ஆர்.தணிகாசலம், 4.எம்.பெரியசாமி, 5.பி.மாலினி, 6.டி.சக்திவேல், 7.டி.மனோகரன், ஜி.கார்த்திகேயன், 8.எம்.கணபதி, டி.வெங்கடாசலம், ஆர்.சந்தானம், ஆ.நடராஜன், கே.கிருஷ்ணமூர்த்தி.

    கிளாம்பாடி

    1.இரா.முத்துசாமி, 2.பி.விஸ்வநாதன், 3.சொ.வெங்கடாசலபதி, 4.ரா.வீரன், 5.எஸ்.சகுந்தலா, 6.எம்.வடிவேல் 7.கி.சதீஸ்குமார், பி.மணி - 8.கே.சக்திவேல், என்.சுந்தரவடிவேல், கே.பால சுப்பிரமணி, ப .சண்முகம், கே.கணபதி.

    பாசூர்

    1.ஆர்.சுப்பிரமணி, 2.எஸ்.ரா மமூர்த்தி, 3.எஸ்.விஸ்வநாதன், 4.என்.சுந்தரராஜன், 5.அ.மாலினி 6.ஆர்.சண்முகம், 7.ஆர்.கருப்பணன், ஜி.சண்முகம், 8.பி.துரைசாமி, சி.கிருஷ்ணமூர்த்தி, கே.சக்திவேல், சி.சிவக்குமார், ஜி.தனசேகரன்.

    கொடுமுடிமேற்கு ஒன்றியம்

    பேரூர் சிவகிரி

    1.என்.செல்வராஜ், 2.அ.கோபால், 3.எஸ்.வி.பாலசுப்ரமணியன், 4.அ.வரதராஜன், 5.ச.சாவித்திரி, - 6.மு.செல்வன், 7.த.பாலசந்தர், எஸ்.நடராஜன், 8.த.ஹரிசங்கர், கே.மூர்த்தி, த.தனபால், த.பாபுராஜா, , ம.கோபிநாத்.

    பேரூர்: கொல்லன் கோவில்

    1.ஆர்.குமாரசாமி, 2.பி.சந்திரசேகர், 3.எஸ்.கிருஷ்ணகுமார், 4.எம்.ராமசாமி (எ) ராமன், 5.ஆர்.பூங்கொடி, 6.என்.பொன்னுசாமி, 7.பி.அன்பழகன், ஆர்.சண்முகம், 8.எஸ்.சின்னுசாமி, டி.கே.இளங்கோவன், எஸ்.காத்தப்பன், கே.ஆர்.ராமமூர்த்தி, டி.ஆர்.ஜீவாநந்தம்.

    ஒன்றியம் மொடக்குறிச்சி கிழக்கு

    பேரூர்: மொடக்குறிச்சி

    1.ஆர்.பழனிசாமி, 2.பி.வி.சரவணன்,

    3.எஸ்.தனவெங்கடேஷ், 4.டி.சதாசிவம், 5.ச.இந்திரா காந்தி, 6.த.சாமிநாதன், 7.என்.துரைசாமி, எம்.கௌரிசங்கர், 8.ஆர்.வேலுச்சாமி, வே.வ.பிரகாஷ், எ.எம்.பரமசிவம், செ.முத்துசங்கர், சி.வாசுதேவன்.

    ஒன்றியம் மொடக்குறிச்சி மேற்கு

    பேரூர்: அவல்பூந்துறை

    1.எம்.பெரியசாமி, 2.அ.சண்முகசுந்தரம், 3.டி.சிவக்குமார், 4.ஆர்.ராமசாமி, 5.ஆர்.பழனியம்மாள், 6.க.சிட்டிபாபு, 7.ஜி.பொன்னுச்சாமி, ந.கனகராஜ், 8.பா.கோவிந்தசாமி, கே.டி.கார்த்திகேயன், எஸ்.மோகனசுந்தரம், க.சிவக்குமார், வீ.திருமலைசாமி.

    ஒன்றியம் : மொடக்குறிச்சி தெற்கு

    பேரூர்: அரச்சலூர்

    1.எஸ்.குப்புசாமி, - 2.பி.கோவிந்தசாமி, 3.எ.எம்.சாமிநாதன், 4.செ.கோவிந்தசாமி, 5.பி.வசந்தா மணி, 6.ஆர்.குழந்தைசாமி, 7.க.சுரேஷ் குமார், எஸ்.சண்முகசுந்தரம், 8.செ .விஸ்வநாதன், க.சந்தானம், எஸ்.சோமசுந்தரம், கே.ஜெகநாதன், ஆர்.முருகேசன்.

    பேரூர்: வடுகபட்டி

    1.ரா.ஈஸ்வரமூர்த்தி, 2.த.விஸ்வநாதன், 3.ஆர்.ராஜலிங்கம், 4.சி.ராஜன், 5.எம்.பழனியம்மாள், 6.சி.சந்திரசேகரன், 7.எஸ்.லோக நாதன், பி.சண்முகசுந்தரம், 8.டி.அறிவழகன், எம்.பாபு, டி.பூமணி, ஆர்.கோபாலகிருஷ்ணன், எம்.குழந்தைசாமி.

    ஒன்றியம் : பெருந்துறை தெ ற்கு

    பேரூர்: பெருந்துறை

    1.வி.திருப்பதிராஜ், 2.ஒ.சிவி.இராஜேந்திரன், 3.எஸ்.பாலவிக்னேஷ், 4.எஸ்.சத்தியகுமார், 5.எஸ்.துளசிமணி, 6.அ.செந்தில்குமார், 7.பி.வி.இரா தாகிருஷ்ணன், எம்.நந்தகோபால், 8.எஸ்.பா ர்த்திபன், வி.என்.சாமிநாதன், ஆர்.வடிவேல், எம்.சி.பழனிச்சாமி, எம்.கொளஞ்சியப்பன்.

    பேரூர்: கருமாண்டிசெல்லிபாளையம்

    1.ஆர்.சிவசுப்பிரமணியம், 2.பி.எஸ்.திருமூர்த்தி, 3.கே.எஸ்.கோகுல்குமார், 4.சீ.தங்கவேல், 5.ஜெ.ருக்மணி, 6.சி.செல்வன், 7.வே .மோகன்குமார், எம்.சக்திகுமார், 8.ஈ.தே வி, சி.சம்பத், ஆர்.நவநீதகிருஷ்ணன், பி.சதீஸ்குமார், எஸ்.பாலாஜி

    ஈரோடு ஒன்றியம்

    பேரூர்: சித்தோடு

    1.கே.பழனிச்சாமி, 2.சி.முத்துகிருஷ்ணன், 3.எஸ்.ராஜா, 4.எம்.மோகனசுந்தரம், - 5.எம்.கோமதி, 6.எம்.ராஜீ, 7.டி.பாலசுப்பிரமணியம், ஜி.ராஜா, 8.எம்.செகதீஸ்வரன், பி.சண்முகம்,ஆர்.பத்மநாபன், எஸ்.ரமேஷ் , அ.தீபக்.

    பேரூர்: நசியனூர்

    1.எஸ்.ஜெயப்பிரகாஷ், 2.கே.மோகனசுந்தரி, 3.எல்.ஜெகநாதன், 4.கு.மாதவன், 5.ஜோ.சிந்தியா, 6.சி.சம்பத், .எம்.ரமேஷ்வரன், எல்.சரவணக்கண்ணன், 8.என்.செந்தில்குமார், எம்.பரமசிவம், சி.சின்னசாமி, ஜி.குருசாமி,கே.சரவணன்.

    ஒன்றியம்: ஊத்துக்குளிவடக்கு

    பேரூர்: குன்னத்தூர்

    1.கே.சி.பூவராகவன், 2.சி.சென்னியப்பன், 3.டி.எஸ்.கோபாலகிருஷ்ணன், 4.கு.சுப்பிரமணியம், 5.எஸ்.அன்புச்செல்வி, 6.மு.இளங்கோ, 7.எஸ்.கே.முருகசாமி, கே.எ.இளங்கோவன், 8.சி.எம்.கருப்புச்சாமி, கே.ஜி.சோமசுந்தரம், தி.தீபா, சி.ராஜ்குமார், ம.ராஜேஸ்வரி.

    ஒன்றியம்: ஊத்துக்குளி தெற்கு

    பேரூர்: ஊத்துக்குளி

    1.மா.தெய்வசிகாமணி, 2.கே.கே.இராசுக்குட்டி, - 3.டி.ராஜேந்திரன் 4.எம்.கைத்தான், 5.கா.வாசுகி, 6.சி.பி.செல்வராஜ், 7.ஆ.கோபால்ராஜா , மெ.ரமேஷ்குமார், 8.சு.செந்தில்குமார், கு.ரா மசாமி, கா.பால சுப்பிரமணி, ப.ரவிச்சந்திரன், எம்.வரதராஜன்.

    பவானி தெற்கு

    பேரூர்: சலங்கபாளையம்

    1.க.பழனிச்சாமி, 2.எஸ்.பழனிச்சாமி, 3.ஏ.கேசவன், 4. கு.சின்னவீரன், 5.ப.தமிழரசி, 6.எம்.கே.காளிவேல், 7.ஏ.சிவசம்புநாதன், கே.எல்.குணசேகரன், 8.கே.எ.மூர்த்தி, எம்.எம்.முத்துசாமி, சா.லோக நாதன், கே.ஜெகநாதன், பி.கௌதமன்.

    பேரூர்: ஆப்பகூடல்

    1.பி.சந்திரன், 2.கே.கோபாலகிருஷ்ணன், 3.ஏ.ஆர்.முருகேசன், 4.ஏ.எம்.செல்வம், 5.எம்.நாகமணி, 6.ஏ.மாதப்பன், 7.ஏ.என்.ராஜேந்திரன், ஏ.என்.தங்கராஜ், 8.எஸ்.கார்த்திகேயன், எம்.ரமேஷ் குமார், கே.செல்வன், ஏ.சுப்பிரமணியன், எஸ்.வெற்றிவேல்

    ஒன்றியம் : பவானி வடக்கு

    பேரூர்: ஜம்பை

    1.எஸ்.வி.மாரியப்பன், 2.ந.ஆனந்தகுமார், 3.மா.பிரபாகரன், 4.கே.ஜெமினி, 5.எஸ்.சரண்யா, 6.டி.மதியழகன், 7.பி.ஜி.சீனிவாசன், ரா .தமிழ்ச்செல்வன், பா.முருகேசன், நா.தேவராஜ், டி.எஸ்.மோகன்குமார், எஸ்.சுரேஷ் , கே.சதிஷ்குமார்

    ஒன்றியம்: அம்மாபேட்டை வடக்கு

    பேரூர்: அம்மாபேட்டை

    1.எஸ்.பி.மோகனேஸ்வரன், 2.எஸ்.பெரியநாயகம், 3.சி.பெரியசாமி, 4.அன்னக்கொடி(எ) முனியன், 5.எஸ்.பூங்கொடி, 6.ஆர்.செ ந்தில்குமார், 7.ஏ.டி.ஷெர்புதீன், ஆர்.சண்முகசுந்தரம், 8.ஏ.எஸ்.குல்பீர், ரா .பிரபுதாஸ், பி.தங்கவேல், பி.தங்கராசு, எஸ்.புலேந்திரன்.

    பேரூர்: நெரிஞ்சிபேட்டை

    1.என்.கே.ராஜாராம், 2.என்.பி.கண்ணன் - 3.வி.சுரேஷ் குமார், 4.கு.கோவிந்தன் 5.ஆர்.சாந்தா, 6.சொ.ஈஸ்வரமூர்த்தி, 7.டி.குணசேகரன், கே.பொங்கியண்ணன், 8.ஹ.ரவி, ஆர்.வெங்கடாசலம், பி.வெங்கடாசலம், எம்.ஜான்ஜோசப், எம்.மாகாளி.

    ஒன்றியம் : அம்மாபேட்டை தெற்கு

    பேரூர்: ஒலகடம்

    1.ப.பழனிச்சாமி, 2.ஒ.ஆர்.மகேந்திரகுமார், 3.அ.மாதேஸ்வரன், 4.பி.சந்திரன், 5.த.சந்திராள், 6.சே.சூரியாபானு, 7.பி.மாதேஸ்வரன், நி.கணேசன் 8.சா.சபீர், எம்.சரவணன், எஸ்.குருமூர்த்தி, ஆர்.சரோஜா , எம்.ஜெயக்கொடி.

    ஒன்றியம்: அந்தியூர்

    பேரூர்: அந்தியூர்

    1.டி.எம்.கோவிந்தன், 2.காளிதாஸ், 3.ஏ.சி.பழனிச்சாமி, 4.கே.காளியப்பன், 5.நா.பாப்பாத்தி, 6.கே.சக்திஸ்குமார், - 7.பி.எல்.பி.வெங்கடேசன், பி.மயிவேலு 8.ஆர்.சண்முகசுந்தரம், ஏ.பி.கிருஷ்ணமூர்த்தி, எம்.கார்த்திகேயன், டி.எஸ்.சண்முகம், சு.சையதுமுஸ்தபா

    பேரூர்: அத்தானி

    1.எஸ்.பி.பழனிச்சாமி, 2.ஏ.ஜி.எஸ்.செ ந்தில்கணேஷ், 3.கே.தங்கவேல், 4.டி.முருகன், 5.பி.பத்மாவதி, 6.கே.எம்.சுப்பிரமணியம், 7.எம்.எஸ்.சண்முகசுந்தரம், ஏ.எம்.எஸ்.மணி, 8.பி.சுப்பிரமணியம், ஏ.இ.கிருஷ்ணமூர்த்தி, ஆர்.சண்முகம், எஸ்.பால சுப்பிரமணியம்,ஏ.என்.அன்பழகன்.

    பேரூர்: பி.மேட்டுப்பாளையம்

    1.எம்.பாலுசாமி, 2.எம்.எம்.குமாரசாமி, 3.எம்.கே.ரவீந்திரன், 4.எம்.அய்யாச்சாமி, 5.டி.மல்லிகா, 6.ஏ.சீனிவாசன், 7.பி.ராமசாமி, ஆர்.தியாகராஜன், 8.எம்.உதயகுமார், டி.தாமரைசெல்வன், எம்.பி.சௌந்திரராஜன், எம்.வெங்கிடுசாமி, எம்.கே.தங்கவேல்

    பேரூர்: கூகலூர்

    1.டி.பி.கிருஷ்ணமூர்த்தி, 2.எஸ்.பி.ராஜாராம், 3.கே.சி.வெள்ளியங்கிரி, 4.பி.குமாரவேல், 5.கூ.கு.மலர்க்கொடி, 6.பொ.செல்வராஜ், 7.சி.தெய்வசிகாமணி, என்.கே.மாரப்பன் 8.கே.எம்.செல்வராஜ், எஸ்.கார்த்திகேயன், கே.ஆர்.மணிகண்டன், டி.ஏ.பழனிச்சாமி, வெ.கார்த்திக்

    கோபிசெட்டிபாளையம் தெற்கு ஒன்றியம்

    பேரூர்: கொளப்பலூர்

    1.க.பால கிருஷ்ணன், 2.ஆ.அன்பரசு, 3.ப.முருகேசன், 4.ப.சின்னமுத்து, 5.சு.தமிழ்செல்வி - 6.நா.ராமசாமி, 7.மு.அருள்மணி, சு.தங்கவேல், நா.அம்மாசை, , நா.பால்ராஜ், செ.சுந்திரம், ச.நாகேந்திரன், கொ.ஆறுமுகம்.

    பேரூர்: லக்கம்பட்டி

    1.கே.ஆர்.நடராஜன், 2.க.வே.சு.வேலவன், 3.மு.வேல்முருகன், 4.வ.மணிகண்டன், - 5.நா.பிரியதர்ஷினி, 6.ச.குருபிரசாந்த், 7.பி.மகாலிங்கம், க .மதிவாணன், 8.எம்.கருப்புசாமி, க .சுமித்ரா , ஏ.எல்.பா பு, பொ.உதயகுமார், எல்.ஆறுமுகம்.

    பேரூர்: வணிப்புத்தூர்

    1.டி.சி.ரவிக்குமார், 2.கே.எஸ்.பழனிச்சாமி, 3.க.சசிதரன், 4.சி.ரமேஷ், 5.உ.செல்வி - 6.டி.கே.செல்வராஜ், 7.எம்.சுகுமார், எஸ்.புஷ்பராஜ், 8.ஆர்.மருதையன், கே.பழனிச்சாமி, எஸ்.முருகேசன், எம்.வெற்றிவேல், கே.சண்முகம்.

    பேரூர்: பெரியகொடிவேரி

    1.சி.கோசல்ராஜ், 2.ஏ.ஆறுமுகம், 3.கே.ஜெகநாதன், 4.ஆர்.வேலுச்சாமி, 5.பிரித்திலோ ரிட்டா பிரின்ஸ், 6.எஸ்.என்.செல்வராஜ், 7.ஆர்.சுந்திரம், சு.தமிழ்மகன் சிவா 8.எஸ்.தனசேகரன், எஸ்.ஜி.கே.ஜெகநாதன், தா.தர்மராஜ், வி.ஜெயந்தி, டி.மூர்த்தி.

    பேரூர்: காசிபாளையம்

    1.பி.மகாதேவன், 2.எம்.எம்.பழனிச்சாமி, 3.முகமதுசாதிக் அலி, 4.ர.வேலுச்சாமி,5.வெ.தமிழ்செல்வி, 6.கே.சுப்பிரமணியன், 7.கே.கே.நஞ்சப்பன், கே.வி.நடராஜன், 8.கே.பி.நாச்சிமுத்து, எம்.பூங்கோதை, அ.மாரிச்சாமி, மா.சுப்பிரமணி, ப.காளியண்ணன்.

    பேரூர்: நம்பியூர்

    1.கே.கே.சுப்பிரமணியம், 2.எஸ்.பி.ஆனந்தகுமார், 3.கு.வெங்கடாசலம், 4.கே.சந்திரன், - 5.அ.சாந்தாமணி, 6.ஆர்.ஆனந்தகுமார், 7.கு.செந்தில்குமார், பி.கே.பழனியப்பன், 8.பி.திருமூர்த்தி, ப.சுப்பிரமணியம்,கே.தங்கவேல், சு.கந்தசாமி,க.கருப்புச்சாமி.

    பேரூர்: எலத்தூர்

    1.வி.ஏ.கந்தசாமி, 2.சு.சண்முகம், 3.கே.ராஜீ, 4.வி.எம்.பழனி, 5.எம்.புவனேஸ்வரி, 6.கே.எம்.அய்யாச்சாமி, 7.டி.கே.தங்கராஜ், சி.எ.மூர்த்தி, 8.ப.தேவராஜ், ஆ.தமிழ்குமார், ர .முனுசாமி,சி.வேலுச்சாமி, டி.சி.பாலசுப்பிரமணியம்.

    பேரூர்: கெம்பநாயக்கன்பாளையம்

    1.கே.பி.நாராயணன், 2.கே.ரவிச்சந்திரன், 3.ஆ.காளியப்பன் (எ) ரஜினிதம்பி, 4.பி.கார்த்திக், 5.எம்.பாப்பா, 6.கே.ஆர்.ஆறுமுகம், 7.கே.சி.பழனிச்சாமி, கே.எஸ்.பெரியசாமி, 8.பி.ரங்கசாமி, கே.ஆர்.நடராஜ், கே.ரவிச்சந்திரன், எஸ்.கே.ராஜன், எஸ்.அர்த்தனாரி.

    ஒன்றியம் : சத்தியமங்கலம் தெ ற்கு

    பேரூர்: அரியப்பம்பாளையம்

    1.எஸ்.என்.ஜெயராஜ் - 2.ஏ.எஸ்.செந்தில்நாதன், 3.ஜெ.சி.கனகராஜ், 4.து.மாதேஸ்வரன், 5.எம்.விஜயா, 6.வி.எஸ்.ரமேஷ், 7.என்.மாணிக்கம், ஏ.என்.துரைசாமி, 8.கே.எம்.ரங்கசாமி, டி.மயில்சாமி, பொ.சிதம்பரம், சி.ஜெயபால் , பொ.சித்ரலேகா.

    பேரூர்: பவானிசாகர்

    1.சி.அம்மாசை, 2.டி.ஏ.மோகன், 3.ஆர்.ஜெகநாதன், 4.எம்.வினோத், 5.எஸ்.ஜெயராணி, 6.எஸ்.சந்திரமோகன், 7.டி.ரகுமணி, எம்.பழனிச்சாமி 8.ஆர்.வெங்கடேசன், பி.வேலுச்சாமி, ஏ.தூயமணி,கே.காண்டீபன், எம்.பொன்முடி.

    • பெருந்துறை போலீசாருக்கு பீடா கடையில் கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
    • மேலும் அவரிடமிருந்து புகையிலை பொருட்கள் மற்றும் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பெருந்துறை:

    ஒடிசா மாநிலம் பத்ரா மாவட்டம் திகிடி தாலுகா வருணை பகுதியை சேர்ந்தவர் அபய்குமார் பகரா (வயது 30). இவர் தற்பொழுது பெருந்துறையை அடுத்துள்ள மலைச்சீனாபுரம் பகுதியில் குடியிருந்து பீடா கடை வைத்து நடத்தி வருகிறார்.

    பெருந்துறை போலீசாருக்கு இவரது கடையில் கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் மசூதா பேகம், சப்-இன்ஸ்பெக்டர் தங்கதுரை ஆகியோர் அந்த கடைக்கு சென்று சோதனை செய்தனர்.

    இதில் கடையில் 80 கிராம் கஞ்சா மற்றும் 10 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மொத்த மதிப்பு 11 ஆயிரம் இருக்கும் என தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் அபய்குமார் பகராவை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து புகையிலை பொருட்கள் மற்றும் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ×