என் மலர்tooltip icon

    ஈரோடு

    • காலிங்கராயன் வாய்க்காலில் ஒரு முதியவரின் உடல் மிதப்பதாக போலீசார் தகவல் கிடைத்தது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈேராடு வி.வி.சி.ஆர். நகர் முதலாவது வீதியைச் சேர்ந்தவர் சோமசுந்தரம் (73). இவர் கடந்த 26-ந் தேதி காலை வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் திரும்பவில்லை. இதையடுத்து அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அக்கம் பக்கம் தேடி பார்த்தனர்.

    இந்நிலையில் பழனிக்க–வுண்டன்பா–ளையம் காலிங்கராயன் வாய்க்காலில் ஒரு முதியவரின் உடல் மிதப்பதாக போலீசார் தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சந்தேகத்தின் பேரில் முதியவர் சோமசுந்தரத்தின் குடும்பத்துக்கு தகவல் தெரிவித்தனர். அப்போது பிணமாக மிதந்த முதியவர் சோமசுந்தரம் என்று உறுதி செய்தனர்.

    இதையடுத்து போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விசாரணையில் முதியவர் இயற்கை உபாதையை கழிப்பதற்காக வாய்க்கால் கரைக்கு சென்ற போது தவறி விழுந்து இறந்து போனது தெரிய வந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குடும்பத்த–கராறு காரணமாகவே தங்கராசு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
    • தற்கொலை செய்து கொண்ட ெதாழிலாளி உடலை போலீசாருக்கு தெரியாமல் எரிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கோபி:

    கோபி செட்டிபாளையம் அருகே உள்ள எல்லமடை பாரதிநகரை சேர்ந்தவர் தங்கராஜ்(43). கூலி தொழிலாளி. இவருக்கு ஈஸ்வரி என்ற மனைவியும், ரகுபதி, அஸ்விந்த் என்ற 2 மகன்களும் உள்ளனர்.

    தங்கராஜூக்கும் அவரது மனைவிக்குமிடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் தங்கராஜூவிற்கும் அவரது மனைவி ஈஸ்வரிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது. அதைத்தொடர்ந்து ஈஸ்வரி வேலைக்கு சென்று விட்டார். ரகுபதி, அஸ்விந்த் பள்ளிக்கு சென்று விட்டனர்.

    பின்னர் மாலை பள்ளியில் இருந்து ரகுபதியும், அஸ்விந்தும் வீட்டிற்கு வந்த போது வீட்டில் தங்கராஜ் தூக்கில் தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சிய–டைந்தனர்.

    அதைத்தொடர்ந்து தங்கராசுவின் உடலை கோபி போலீசாருக்கு தெரியாமல் எரித்துவிட அவரது உறவினர்கள் முயற்சி செய்து தங்கராசு–வின் உடலை மயானத்திற்கு எடுத்து சென்றனர்.

    இது குறித்து தகவல் அறிந்த கோபிசெட்டி–பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தங்கராசுவின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    அதில் குடும்பத்த–கராறு காரணமாகவே தங்கராசு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

    அதைத்தொடர்ந்து தங்கராசுவின் உடலை போலீசார் பிரேத பரிசோதனை–க்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தற்கொலை செய்து கொண்ட ெதாழிலாளி உடலை போலீசாருக்கு தெரியாமல் எரிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • குற்றவியல் நடவடிக்கை எடுக்க கோரி அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பாக சென்னிமலை பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

    சென்னிமலை:

    சென்னிமலை டவுன், கிராம நிர்வாக அதிகாரி சிவக்குமார் மண்டல துணை தாசில்தார் கையெழுத்தினை போலியாக போட்டு நத்தம் பட்டா மாறுதல் வழங்கிய குற்றச்சாட்டில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

    அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க கோரி அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பாக சென்னிமலை பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்திற்கு, லஞ்ச ஊழல் எதிர்ப்பு இயக்கத் தலைவர் கந்தசாமி தலைமை தாங்கினார். தற்சார்ப்பு விவசாயிகள் இயக்க தலைவர் பொன்னையன், மற்றும் ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட் , புரட்சிகர இளைஞர் முன்னணி, உட்பட பல்வேறு இயக்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில், சென்னிமலை கிராம நிர்வாக அதிகாரி சிவக்குமார் உயர் அதிகாரி–களின் கையெழுத்தை தானே போட்டு போலியாக பட்டா தயார் செய்து பொது–மக்களுக்கு வழங்கியுள்ளது ஆர்.டி.ஓ. விசாரணையில் உறுதிப்படுத்த–ப்ப–ட்டுள்ளது. அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டும்.

    குடிமக்களுக்கு தேவையான வருவாய் துறை ஆவணங்களை வருவா–ய்த்துறை அதிகாரிகள் குறிப்பிட்ட கால எல்லை–க்குள் வழங்கு–வதற்கான கடுமையான உத்தரவை மாவட்ட நிர்வாகம் போட்டு அதை கண்காணிக்க வேண்டும். என வலியுறுத்தப்பட்டது.

    • இந்த நிலையில் சம்பவத்தன்று ஆறுமுகம் வீட்டை பூட்டிவிட்டு பெங்களூரில் உள்ள தனது மகன் வீட்டுக்கு சென்று விட்டார்.
    • இது குறித்து கோபிசெட்டி பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோபி:

    கோபிசெட்டி பாளையம் பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் ஆறு முகம் (வயது 63). அந்த பகுதியில் உள்ள ஒரு ஜவுளி கடையில் வேலை பார்த்து வந்தார்.

    இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இவரது மகன்கள் வெளியூரில் உள்ளதால் அடி க்கடி வீட்டை பூட்டி விட்டு ஆறுமுகம் வெளியூருக்கு சென்று வருவது வழக்கம்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று ஆறுமுகம் வீட்டை பூட்டிவிட்டு பெங்களூரில் உள்ள தனது மகன் வீட்டுக்கு சென்று விட்டார்.

    இதையடுத்து ஆறுமு கத்தின் உறவினர் அந்த வழியாக வந்தார். அப்போது அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவரது உறவினர் வீட்டுக்குள் சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு இருந்தது.

    கொள்ளையர்கள் கதவை உடைத்து திருட முயற்சி செய்தது தெரிய வந்தது. ஆனால் அங்கு பணம் மற்றும் நகைகள் இல்லாததால் கொள்ளையர்கள் திரும்பி சென்றனர்.

    இது குறித்து கோபிசெட்டி பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அறையில் முரளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை அதிர்ச்சி அடைந்தார்.
    • இது குறித்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து முரளி எதற்காக இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    திருச்சி மாவட்டம் பெல் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் முரளி (55). இவர் வேலை விஷயமாக அடிக்கடி ஈரோட்டிற்கு வந்து செல்வார். இதற்காக ஈரோட்டில் உள்ள ஒரு லாட்ஜில் தங்குவது வழக்கம். அதேப்போல் கடந்த 2 நாட்களுக்கு முன்பு முரளி ஈரோடுக்கு வந்துள்ளார். எப்போதும் தங்கும் லாட்ஜில் வந்து லாட்ஜ் மேலாளரிடம் ஒரு நாள் தங்குவதாக கூறி அறை எடுத்து தங்கி உள்ளார்.

    ஆனால் 2 நாட்களாகியும் அவர் அறையை விட்டு வெளியே வராததால் சந்தேகம் அடைந்த மேலாளர் இளங்கோவன் அவர் தங்கி இருக்கும் வரைக்கும் சென்று கதவைத் தட்டி உள்ளார். ஆனால் பதில் எதுவும் வரவில்லை.

    இதனால் விபரீதம் நடந்துள்ளதை உணர்ந்த மேலாளர் லாட்ஜில் வேலை பார்க்கும் பணியா ளர்களைக் கொண்டு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது அங்குள்ள அறையில் முரளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து ஈரோடு டவுன் போலீஸ் அடுத்த தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து முரளியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து முரளி எதற்காக இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கருங்கல்பா ளையம் காமாட்சி அம்மன் கோவில் அருகே பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து 6 பேரையும் கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு கருங்கல் பாளையம் இன்ஸ்பெக்டர் ராஜபிரபு மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது கருங்கல்பா ளையம் காமாட்சி அம்மன் கோவில் அருகே பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போது ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தது தெரிய வந்தது. போலீசை பார்த்ததும் அந்த கும்பல் தப்பி ஓட முயன்றது. அந்த கும்பலை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கிருபாகரன் (36) சந்திரன் (40), ரமேஷ் (46), தயாநிதி (45), செந்தில் குமார்(45), சிவா (40) எனவும் இவர்கள் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தது தெரிய வந்தது.

    இவர்களிடமிருந்து சீட்டு கட்டுகள், ரூ. 22 ஆயிரத்து 900, 5 மோட்டார் சைக்கிள்கள், 7 செ ல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து 6 பேரையும் கைது செய்தனர்.

    • மளிகை கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • இதையடுத்து ஹான்ஸ் பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து நூர்முகம்மது மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடைகளில் குட்கா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் குட்கா விற்பனையை தடுக்க தீவிர சோதனை நடத்த போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    ஈரோட்டை அடுத்து உள்ள ஆர்.என்.புதூர் ராகவேந்திரா நகரில் உள்ள முத்துராஜா (29) என்பவருக்கு சொந்தமான மளிகை கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். சோதனையில் மளிகை கடையில் வைத்து குட்கா விற்பனை செய்வது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் முத்துராஜாவை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்த 45 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். இந்த மளிகை கடை அரசு பள்ளிக்கூடம் அருகே உள்ளது குறிப்பிடத்தக்கது.

    டி.என்.பாளையம் அருகே உள்ள பங்களாபுதூர் அண்ணாநகரைச் சேர்ந்தவர் நூர் முகமது (35). இவர் அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் இவரது கடையில் சட்டவிரோதமாக குட்கா பதுக்கி விற்பனை செய்வதாக பங்களாப்புதூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து மளிகை கடையை போலீசார் சோதனை செய்தனர். சோதனையில் 10 குட்கா (ஹான்ஸ்) பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து ஹான்ஸ் பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து நூர்முகம்மது மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    • பெரும்பள்ளம் ஓடையில் ஆண் பிணம் மிதப்பதாக சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து அண்மையில் மாயமா னவர்கள் விவரங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு சென்னிமலை ரோடு நெசவாளர் காலனி அருகே பெரும்பள்ளம் ஓடை செல்கிறது. இந்த ஓடையில் இன்று காலை சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் மிதப்பதாக சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து இன்ஸ்பெக்டர் விஜயா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இறந்த ஆண் பிணம் அழுகி போய் இருந்தது.

    அவர் பச்சை கருப்பு புளு கலர் கட்டம் போட்ட முழு கை சட்டை அணிந்திருந்தார். அவர் கழுத்தில் ஆஞ்சநேயர் படம் வைத்த டாலர் இருந்தது. அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ன தெரியவில்லை.

    ஓடையில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு என்ன காரணம் என்றும் தெரியவில்லை.

    அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து அண்மையில் மாயமா னவர்கள் விவரங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சென்னிமலை மாரியம்மன் கோவிலில் உலக நன்மைக்காக மங்கள சண்டியாக விழா வருகிற 4-ந் தேதி தொடங்குகிறது.
    • இக்கோவிலில் தினசரி பூஜைகளும், பவுர்ணமி மற்றும் வாரத்தில் முக்கிய நாள்களில் சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன.

    சென்னிமலை:

    சென்னிமலை டவுன், காங்கேயம் மெயின் ரோட்டில் உள்ள மாரியம்மன் கோவிலில் உலக நன்மைக்காக மங்கள சண்டியாக விழா வருகிற 4-ந் தேதி தொடங்குகிறது.

    சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் நிர்வாகத்தின் கீழ் சென்னிமலை டவுன் பகுதியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் தினசரி பூஜைகளும், பவுர்ணமி மற்றும் வாரத்தில் முக்கிய நாள்களில் சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன.

    கோவிலில் உலக மக்கள் நன்மைக்காக வேண்டியும், தொழில், விவசாயம் செழிக்கவும் மாரியம்மன் மற்றும் மகாலட்சுமி, மகா சரஸ்வதி ஆகி முப்பெரும் தேவிகளுக்கு மங்கள மஹா நவசண்டியாக யாகம் ஆகஸ்ட் 4-ந் தேதி காலை 8 மணிக்கு கோ பூஜை, விநாகயர் வழிபாடு, கணபதி ஹோமத்துடன் பூஜைகள் தொடங்குகிறது.

    4-ந் தேதி வியாழன் அன்று மாலை புண்யாஹவாசனம், பஞ்சகவ்ய பூஜை, சப்தசதி வழிபாடு, 64 யோகினி மற்றும் 64 பைரவர் பலி பூஜை, தீபாராதனை ஆகியன நடக்கிறது.

    மறுநாள் 5-ந் தேதி வெள்ளிக்கிழமை காலை விக்னேஸ்வர பூஜை, பஞ்சகவ்ய பூஜை, தேவி கலசத்திற்கு நவாவரண பூஜை, அக்னி காரியம் 13 அத்தியா ஹோமம், நவசண்டியாகம், சண்டியாக ஸங்கல்பம் பஞ்சகவ்யம், சுமங்கலிபூஜை, கன்னியா பூஜை, மாங்கல மஹா பூர்ணாஹுதி, கலச அபிஷேகம் பூஜை தீபாராதனை நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை கால பைரவ விழாக்குழு அன்பர்கள் செய்து வருகின்றனர்.

    • சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி மாவட்டத்தில் ஒரே நாளில் மேலும் 71 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    • தொற்று அதிகரித்து வருவதால் தினசரி பரிசோதனை எண்ணிக்கை அதிகரித்து தற்போது 1000 பேருக்கு எடுக்கப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 மாதத்திற்கும் மேலாக கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. அதே நேரம் சிகிச்சையில் இருப்பவர்கள் பலர் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர்.

    ஆனால் மற்ற மாவட்ட ங்களில் தினசரி பாதிப்பு குறைந்து வரும் நிலையில் ஈரோட்டில் கடந்த ஒரு வாரமாக தினசரி பாதிப்பு 50-க்கு மேல் பதிவாகி வருகிறது.

    இந்நிலையில் கடந்த 23-ந் தேதி 62 பேருக்கு ஒரே நாளில் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து 50 ஆக பதிவாகி வந்தது.

    இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி மாவட்டத்தில்  ஒரே நாளில் மேலும் 71 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 34 ஆயிரத்து 72 ஆக உயர்ந்துள்ளது.

    மேலும் சிகிச்சையில் இருந்த 60 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1 லட்சத்து 32 ஆயிரத்து 923 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

    தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதிப்புடன் 415 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது.

    சுகாதாரத் துறையினர் இதனை தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதுவரை கொரோனா தினசரி பரிசோதனை 450 வரை எடுக்கப்பட்டு வந்தது.

    ஆனால் தற்போது தொற்று அதிகரித்து வருவதால் தினசரி பரிசோதனை எண்ணிக்கை அதிகரித்து தற்போது 1000 பேருக்கு எடுக்கப்பட்டு வருகிறது.

    பொதுமக்கள் பாது காப்பு வழிமுறைகளை கடை பிடித்து ஒத்துழைப்பு வழங்கி அரசு அறிவித்துள்ள பாது காப்பு வழிகாட்டு நெறி முறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என சுகாதாரத் துறையினர் அறி வுறுத்தியுள்ளனர்.

    • பவானிசாகர் அணை 100 அடியை தாண்டியதால் கடல் போல் காட்சியளிக்கிறது.
    • அணையின் மேல் பகுதியை கண்டு ரசிப்பதற்காக தினமும் சுற்றுலா பயணிகள் குவிய தொடங்கியுள்ளனர்.

    ஈரோடு:

    பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    இதுபோல் பவானிசாகர் அணை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து அணை 28-வது முறையாக 100 அடியை தாண்டியது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100.44 அடியாக உள்ளது. அணைக்கு வினாடி 2,435 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பவானி ஆற்றுக்கு 200 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கன அடியும் என மொத்தம் 205 கன அடி தண்ணீர் அணையிலிருந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.

    அணை 100 அடியை தாண்டியதால் கடல் போல் காட்சியளிக்கிறது. இதனால் அணையின் மேல் பகுதியை கண்டு ரசிப்பதற்காக தினமும் சுற்றுலா பயணிகள் குவிய தொடங்கியுள்ளனர்.

    இந்நிலையில் வருகின்ற ஆகஸ்ட் 3-ந்தேதி ஆடி 18 கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    இதனால் அன்றைய தினம் பவானிசாகர் அணையை சுற்றி பார்க்க ஆயிரக்கணக்கான மக்கள் வரக்கூடும். தற்போது அணையின் நீர்மட்டம் 100 அடியை தாண்டி உள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி வெள்ள கால பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி வரும் ஆடி 18 அன்று பொதுமக்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு அணையின் மேல் பகுதி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பவானிசாகர் பூங்கா எப்பொழுதும் போல் முழுமையாக செயல்படும். பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பூங்காவுக்கு செல்ல தடை இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வனப்பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை, மான்கள் உள்பட பல்வேறு வன விலங்குகள் உள்ளன.
    • யானைகள் தும்பிக்கையால் அந்த சொகுசு பஸ்சின் முன் பக்க கண்ணாடியை உடைத்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள திம்பம் மலைப்பாதை 22 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது. திண்டுக்கல்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையான இந்த வனப்பகுதி வழியாக கார், மோட்டார் சைக்கிள்கள், வேன், பஸ் மற்றும் சரக்கு வாகனங்கள் என தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகிறது.

    இந்த வனப்பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை, மான்கள் உள்பட பல்வேறு வன விலங்குகள் உள்ளன. இந்த வனப்பகுதிகளில் இருந்து யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வெளியேறி தேசிய நெடுஞ்சாலையில் உலாவி வருகிறது.

    இந்த வனப்பகுதிகளில் இருந்து வரும் யானைகள் அந்த வழியாக வரும் வாகனங்களை வழி மறிப்பதும், துரத்துவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

    இந்த நிலையில் நேற்று மாலை திம்பம் அருகே உள்ள ஆசனூர் அடுத்த ஆரேபாளையம் வழியாக கரும்புகளை ஏற்றி கொண்டு லாரிகள் வந்தது. அந்த வாசனையால் யானைகள் குட்டிகளுடன் ரோட்டுக்கு வந்தது. ஆனால் கரும்பு லாரிகள் அங்கு இல்லாததால் யானைகள் அங்கேயே சுற்றி கொண்டே இருந்தது.

    இதனால் அந்த வழியாக வந்த வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. தொடர்ந்து யானைகள் வனப்பகுதியில் சென்றது.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் ஹாரன் அடித்தார். அந்த சத்தத்தை கேட்டு யானைகள் குட்டிகளுடன் மீண்டும் ரோட்டுக்கு வந்தது. தொடர்ந்து அந்த யானைகள் அந்த வழியாக வந்த வாகனங்களை வழி மறித்தது. இதையடுத்து வாகனங்கள் ரோட்டோரம் நிறுத்தப்பட்டன. ஆனால் யானைகள் வாகனங்களை துரத்தியபடி அங்கேயே உலாவி கொண்டே இருந்தது.

    அப்போது அந்த வழியாக சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடகா அரசு சொகுசு பஸ் பயணிகளை ஏற்றி கொண்ட வந்தது. யானையை கண்டு அந்த பஸ் நிறுத்தப்பட்டது. ஆனால் ஆக்ரோஷம் அடைந்த யானைகள் திடீரென அந்த சொகுசு பஸ்சை தாக்க தொடங்கியது. தொடர்ந்து குட்டிகளுடன் அந்த யானைகள் தும்பிக்கையால் அந்த சொகுசு பஸ்சின் முன் பக்க கண்ணாடியை உடைத்தது.

    இதனால் பஸ்சில் வந்த பயணிகள் அலறினார்கள். சிறிது நேரம் அங்கேயே சுற்றிய யானைகள் நீண்ட நேரத்துக்கு பிறகு வனப்பகுதிக்கு சென்றது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் உயிர் தப்பினர். இதன் காரணமாக அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    ×