தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை

குடும்பத்த–கராறு காரணமாகவே தங்கராசு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. தற்கொலை செய்து கொண்ட ெதாழிலாளி உடலை போலீசாருக்கு தெரியாமல் எரிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை
Published on

கோபி:

கோபி செட்டிபாளையம் அருகே உள்ள எல்லமடை பாரதிநகரை சேர்ந்தவர் தங்கராஜ்(43). கூலி தொழிலாளி. இவருக்கு ஈஸ்வரி என்ற மனைவியும், ரகுபதி, அஸ்விந்த் என்ற 2 மகன்களும் உள்ளனர்.

தங்கராஜூக்கும் அவரது மனைவிக்குமிடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் தங்கராஜூவிற்கும் அவரது மனைவி ஈஸ்வரிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது. அதைத்தொடர்ந்து ஈஸ்வரி வேலைக்கு சென்று விட்டார். ரகுபதி, அஸ்விந்த் பள்ளிக்கு சென்று விட்டனர்.

பின்னர் மாலை பள்ளியில் இருந்து ரகுபதியும், அஸ்விந்தும் வீட்டிற்கு வந்த போது வீட்டில் தங்கராஜ் தூக்கில் தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சிய–டைந்தனர்.

அதைத்தொடர்ந்து தங்கராசுவின் உடலை கோபி போலீசாருக்கு தெரியாமல் எரித்துவிட அவரது உறவினர்கள் முயற்சி செய்து தங்கராசு–வின் உடலை மயானத்திற்கு எடுத்து சென்றனர்.

இது குறித்து தகவல் அறிந்த கோபிசெட்டி–பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தங்கராசுவின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

அதில் குடும்பத்த–கராறு காரணமாகவே தங்கராசு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

அதைத்தொடர்ந்து தங்கராசுவின் உடலை போலீசார் பிரேத பரிசோதனை–க்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலை செய்து கொண்ட ெதாழிலாளி உடலை போலீசாருக்கு தெரியாமல் எரிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com