என் மலர்tooltip icon

    ஈரோடு

    • மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்த போது மோட்டார் சைக்கிள் பின் பகுதியில் 3 மூட்டைகள் இருந்தது தெரிய வந்தது.
    • மூட்டைகளை திறந்து பார்த்தபோது அதில் ரேஷன் அரிசியை கடத்தி சென்றது தெரிய வந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை போலீசார் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் திடீர் வாகன சோதனை மேற் கொண்டு ரேஷன் அரிசி கடத்தி வருபவர்களை கண்டறிந்து அவர்களை கைது செய்து ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் மேற்பார்வையில் போலீசார் கஸ்பாபேட்டை பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஒருவர் வந்து கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்த போது மோட்டார் சைக்கிள் பின் பகுதியில் 3 மூட்டைகள் இருந்தது தெரிய வந்தது.

    மூட்டைகளை திறந்து பார்த்தபோது அதில் ரேஷன் அரிசியை கடத்தி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அந்த வாலிபரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் மொடக்குறிச்சி அடுத்த பி.மேட்டுப்பாளையம், பூந்துறை பகுதியை சேர்ந்த மணிகண்டன் (33) என்பதும் வட மாநிலத்தவர்களுக்கு கூடுதல் விலையில் ரேஷன் அரிசியை விற்பதற்காக கடத்தி சென்றதையும் ஒப்புக்கொண்டார்.

    அவர் கொடுத்த தகவல் பேரில் அதே பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,250 கிலோ ரேஷன் அரிசிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.

    அவரிடமிருந்து ரேஷன் அரிசி மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். பின்னர் மணிகண்டன் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    • சென்னிமலை-பெருந்துறை ரோடு வண்ணாம்பாறை பிரிவு என்ற இடத்தில் திரும்பும் போது அந்த வழியாக குழாய்கள் ஏற்றி வந்த ஒரு லாரி அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • இதில் நாகராஜ் மற்றும் மகேஸ்வரி ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

     சென்னிமலை அருகே உளள் முகாசிபிடாரியூர் 1010 நெசவாளர் காலனியை சேர்ந்தவர் வீரமணி. இவரு டைய மனைவி மகேஸ்வரி (61). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு விசைத்தறி கூடத்தில் பாவு நூல் பிணைக்கும் வேலை செய்து வந்தார்.

    வேலை முடிந்த பிறகு மகேஸ்வரி அதே பட்ட றையில் தறி மேஸ்திரியாக வேலை பார்க்கும் சென்னி மலை அருகே கொத்த ம்பாளையத்தை சேர்ந்த நாகராஜ் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டி ருந்தார்.

    அப்போது சென்னிமலை-பெருந்துறை ரோடு வண்ணாம்பாறை பிரிவு என்ற இடத்தில் திரும்பும் போது அந்த வழியாக குழாய்கள் ஏற்றி வந்த ஒரு லாரி அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் நாகராஜ் மற்றும் மகேஸ்வரி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவர்களை மீட்டு சென்னிமலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் சிகிச்சை பலனி ன்றி மகேஸ்வரி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறனர்.

    • தமிழகத்தில் மின் கட்டண உயர்வை திரும்ப பெற கோரி கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையத்தில் ஈரோடு மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
    • இதற்கு முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    கோபி:

    தமிழகத்தில் மின் கட்டண உயர்வை திரும்ப பெற கோரி கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையத்தில் ஈரோடு மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதற்கு முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    அப்பொழுது அவர் பேசியதாவது:

    சுட்டெரிக்கும் வெயிலிலும் கூட்டம் கூடி இருக்கிறது. இதன் மூலம் அ.தி.மு.க.வை யாராலும் அசைக்க முடியாது.விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு, வீட்டு வரி, குடிநீர் வரி ஆகியவை உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏழை எளிய மக்கள் மிகவும் பாதிக்கப்ப ட்டு உள்ளன.

    இதை இந்த அரசு உடனடியாக வாபஸ் பெறவேண்டும்.அ.தி.மு.க. ஒரு வரலாறு படைத்த இயக்கமாகும். அதிமுகவை 1972-ல் எம்ஜி.ஆர் தொடக்கி நிரந்தர முதல்-அமைச்சராக இருந்தார். தற்பொழுது இந்த அரசு காலையில் ஒரு லட்சத்து 47 ஆயிரத்து மாணவர்களுக்கு மட்டுமே சிற்றுண்டி வழங்குகிறது.

    ஆனால் அன்று சத்துணவு படைத்து சாதனையை படைத்தவர் எம்ஜிஆர். சொன்னதே செய்து காட்டியவர் ஜெயலலிதா. ஏழை, எளிய மக்களுக்கு இதயக்கனியாக எம்ஜி.ஆர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஜெயலலிதா முதல்-அமைச்சராக பதவியேற்ற பிறகு ஏழைகளுக்காக ஆட்சி நடத்தினார்.

    பிறந்த குழந்தைகளுக்கு 14 விதமான பொருட்களை கொடுத்தார். இலவச சைக்கிள், மடிக்கணினி ஆகியவற்றை வழங்கினார். பொதுமக்கள் நாங்கள் தற்போது ஏமாந்து விட்டோம் என புலம்பி வருகிறார்கள். தேர்தல் வரட்டும் நாங்கள் பார்த்து கொள்கிறோம் எனவும் பொது மக்கள்கூறி வருகிறார்கள்.

    அ.தி.மு.க.வை தமிழ் மண்ணில் யாராலும் அசைக்க முடியாது. வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் 40 இடங்களையும் அ.தி.மு.க பிடிக்கும். மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அரசு மின் கட்டண உயர்வு மற்றும் வரி உயர்வுகளை வாபஸ் பெற வேண்டும்.

    அண்ணா, எம்ஜி.ஆர், ஜெயலலிதா, வழியில் எடப்பாடி பழனிசாமி ஆண்ட காலமும் பொற்கால மாகும். அ.தி.மு.க எதையும் சந்திக்க தயாராக உள்ளது. எத்தனை வழக்கை போட்டாலும் சந்திக்க தயாராக உள்ளோம்.

    தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சியை பிடிக்கும். நாம் யாரோடு கூட்டணி சேருகிறோமோ அக்கூட்ணி தான் வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஈரோடு மாவட்டத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் கோபிசெட்டிபாளையம், பவானி, ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு ஆகிய 3 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • நிர்வாகிகள் கலந்து கொண்டு மின் கட்டண உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் கோபிசெட்டிபாளையம், பவானி, ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு ஆகிய 3 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மின் கட்டண உயர்வை கண்டித்து ஈரோடு சூரம்பட்டி நால் ரோட்டில் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.வி.ராமலிங்கம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் தலைமையில் கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் பவானிசாகர் எம்.எல்.ஏ. பண்ணாரி, முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.ரமணீதரன், ஒன்றிய செயலாளர்கள் தம்பி சுப்பிரமணியம், ஈஸ்வரமூர்த்தி, கோபி நகர செயலாளர் பிரினியோ கணேஷ் உள்பட ஏராளமான பேர் கலந்து கொண்டு மின் கட்டண உயர்வுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

    ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.சி.கருப்பணன் தலைமையில் பவானி அந்தியூர் ேராட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பெருந்துறை ஜெயக்குமார் எம்.எல்.ஏ. பவானி நகர அதிமுக செயலாளர் சீனிவாசன்,

    முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.சி.பொன்னுத்துரை, டாக்டர் பொன்னுசாமி, கே.எஸ். பழனிச்சாமி, ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணராஜ், பவானி வடக்கு ஒன்றிய செயலாளர் தங்கவேலு, தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெகதீஸ், பவானி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பூங்கோதை வரதராஜ்,

    அண்ணா தொழிற்சங்க ஒன்றிய செயலாளர் சோமு, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணை செயலாளர் மாதையன் என்கிற எம்.ஜி. நாத், இளைஞர் அணி செயலாளர் கரேத்தா பெரியசாமி, ஒன்றிய கவுன்சிலர் வாத்தியார் குப்புசாமி, அம்மாபேட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் முனியப்பன், தெற்கு ஒன்றிய செயலாளர் மேகநாதன்,

    ஐ.டி. பிரிவு பிரகாஷ் உட்பட ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். நிர்வாகிகள் கலந்து கொண்டு மின் கட்டண உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

    • கம்பெனியில் மேலாளராக பணியாற்றி வரும் விவேகானந்தன் அம்மா பேட்டை போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் குருமூர்த்தி மற்றும் சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
    • பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை அருகே உள்ள படவல்கால்வாய் பகுதியில் தனியார் பனியன் கம்பெனி உள்ளது. இது கடந்த 6 ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளது.

    இந்த கம்பெனியில் சம்ப வத்தன்று சிங்கம்பேட்டை பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த குருமூர்த்தி (36) 2 பேரும் சேர்ந்து கம்பெனிக்கு சொந்தமான பழைய இரும்பு கம்பிகளை திருடி சென்றுள்ளனர்.

    இது குறித்து கம்பெனியில் மேலாளராக பணியாற்றி வரும் விவேகானந்தன் அம்மா பேட்டை போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் குருமூர்த்தி மற்றும் சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடம் இருந்து ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள இரும்பு கம்பிகள் மற்றும் கம்பிகளை திருடி செல்வதற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • சம்பவத்தன்று பிரகாஷ் வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளை எடுத்து கொண்டு வெளியே சென்று விட்டார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.
    • கே.என்.பாளையம் பகுதியில் மாதேஸ்வரன் கோவில் அருகே ஒரு இடத்தில் பிரகாஷ் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    டி.என்.பாளையம், செப். 16-

    கோபிசெட்டி பாளையத்தை அடுத்த நாகர்பாளையம் ரோடு, கந்தசாமி நகரை சேர்ந்தவர் பிரகாஷ் (38). பி .எஸ்.சி. பட்டதாரி. பிரகாஷ் சரியாக வேலை கிடைக்காததால் விரக்தியில் இருந்து வந்துள்ளார்.


    இந்நிலையில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பிரகாஷ் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை அவரது உறவி னர்கள் மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றி விட்டனர்.

    இந்நிலையில் சம்பவத்தன்று பிரகாஷ் வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளை எடுத்து கொண்டு வெளியே சென்று விட்டார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.

    பிரகாசை உறவினர்கள், பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.இந்த நிலையில் கே.என்.பாளையம் பகுதியில் மாதேஸ்வரன் கோவில் அருகே ஒரு இடத்தில் பிரகாஷ் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து பங்களாபுதூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிரகாஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ஈரோடு மாவட்டத்தில் காலை உணவு திட்டம் தொடக்க நிகழ்ச்சி இன்று காலை மாநகராட்சி கொல்லம்பாளையம் அரசு தொடக்கப் பள்ளியில் நடந்தது.
    • கலெக்டர் கிருஷ்ண னுண்ணி நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    ஈரோடு:

    அரசு தொடக்க பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவி–களுக்கு ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கி, இடைநிற்றலை தவிர்க்க காலை உணவு திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது.

    இத்திட்டத்தை முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மதுரையில் அண்ணா பிறந்தநாளை யொட்டி தொடங்கி வைத்து மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார். அதனைத் தொடர்ந்து இன்று தமிழகம் முழுவதும் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது.

    முதல் கட்டமாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.

    ஈரோடு மாவட்டத்தில் மாநகராட்சியில் 26 பள்ளிகளை சேர்ந்த 2,523 மாணவ, மாணவிகள், தாளவாடி மலைப்பகுதியில் 38 பள்ளிகளை சேர்ந்த 768 மாணவ, மாணவிகள் என மொத்தம் மாவட்டம் முழுவதும் 3,291 மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு திட்டம் மூலம் உணவு வழங்கப்படுகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் இதற்கான தொடக்க நிகழ்ச்சி இன்று காலை மாநகராட்சி கொல்லம்பாளையம் அரசு தொடக்கப் பள்ளியில் நடந்தது.

    கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார். மாணவ மாணவிகளுக்கு சுடச்சுட கோதுமை ரவா, ரவா கேசரியை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பரிமாறினார். பின்னர் அவர்களுடன் அமர்ந்தும் சாப்பிட்டார்.

    இதில் மேயர் நாகரத்தினம், கணேச மூர்த்தி எம்.பி., துணை மேயர் செல்வராஜ், மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டு மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டனர்.

    இதேபோல் தாளவாடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள திகனாரை அரசு தொடக்க பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் (ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர்) காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்து மாணவ, மாணவர் களுக்கு உணவுகளை பரிமாறி அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார்.

    திங்கட்கிழமை கோதுமை ரவா உப்புமா, காய்கறி சாம்பார், செவ்வாய் க்கிழமை சேமியா காய்கறி கிச்சடி, புதன்கிழமை வெண்பொங்கல் காய்கறி சாம்பார், வியாழக்கிழமை அரிசி உப்புமா காய்கறி சாம்பார், வெள்ளிக்கிழமை சோள காய்கறி ரவா கேசரி வழங்கப்படுகிறது. 

    • சிவகாமி வீட்டில் யாரும் இல்லாத போது அவரது உடலில் கடலெண்ணை ஊற்றி தீ வைத்து கொண்டார்.
    • அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து அவரை மீட்டு கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் பி.ஆர்.ஆர். நகரை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவரது மனைவி சிவகாமி (74). இவர் உடல் நிைல சரியில்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.

    இதனால் அவர் வேதனை அடந்து மனம் உடைந்து வந்தார். இந்த நிலையில் சிவகாமி வீட்டில் யாரும் இல்லாத போது அவரது உடலில் கடலெண்ணை ஊற்றி தீ வைத்து கொண்டார்.

    இதில் அவர் அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து அவரை மீட்டு கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேல் சிகிச்சைக்காக கோபி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சிவகாமி இறந்தார்.

    இது குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பெருந்துறை வாய்க்கால் மேடு அருகே வந்தபோது மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்த பேகம் திடீரென மயங்கி ரோட்டில் விழுந்தார்.
    • மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பேகம் பரிதாபமாக இறந்தார்.

    பெருந்துறை:

    பெருந்துறை மஜீத் வீதியை சேர்ந்தவர் சலீம். இவர் பெருந்துறை ஊரா ட்சி ஒன்றிய அலுவலகத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து பணி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி பேகம் (வயது 52). இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

    சம்பவத்தன்று ஈரோட்டில் உள்ள தனது மகனை பார்ப்பதற்காக சலீம் மற்றம் பேகம் இருவரும் ஈரோடு சென்று விட்டு பின்னர் பெருந்துறை நோக்கி வந்து கொண்டி ருந்தனர்.

    பெருந்துறை வாய்க்கால் மேடு அருகே வந்தபோது மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்த பேகம் திடீரென மயங்கி ரோட்டில் விழுந்தார். உடனடியாக சலீம் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்து வமனையில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பேகம் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • ஈரோடு ரெயில் நிலையத்தில் சிறுவன் சிறுமியுடன் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் விரைந்து சென்று 2 பேரையும் மீட்டனர்.
    • பின்னர் போலீசார் சிறுமி மாயமான வழக்கை மாற்றி 17 வயது சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கவுண்டன்புதுர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த சிறுமி திடீரென மாயமானார்.

    இது குறித்து அவரது பெற்றோர் கோபிசெட்டிபாளையம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    போலீசாரின் விசாரணையில் கணபதி பாளையம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன், சிறுமியை கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் இரவு ஈரோடு ரெயில் நிலையத்தில் சிறுவன் சிறுமியுடன் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் விரைந்து சென்று 2 பேரையும் மீட்டனர்.

    பின்னர் போலீசார் சிறுமி மாயமான வழக்கை மாற்றி 17 வயது சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் சிறுவனை ஈரோடு சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

    • வர்சா ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள சாலை போக்குவரத்து பொறியியல் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
    • கல்லூரி பெண்கள் விடுதியில் தங்கி தினமும் கல்லூரிக்கு சென்று வந்தார்.

    பவானி:

    திருச்சி தீரன்நகர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். அரசு போக்குவரத்து கழகத்தில் தொழில்நுட்ப பிரிவில் வேலைப்பார்த்து வருகிறார். இவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு வர்சா(22), சுவிக்‌ஷா, அபூர்வா ஆகிய 3 மகள்கள் உள்ளனர்.

    இவர்களது மூத்த மகள் வர்சா ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள சாலை போக்குவரத்து பொறியியல் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி பெண்கள் விடுதியில் தங்கி தினமும் கல்லூரிக்கு சென்று வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு 9 மணியளவில் வர்சா தனது அறையில் யாரும் இல்லாத போது பேனில் சுடிதார் துப்பட்டாவில் தூக்குப்போட்டு கொண்டார். பின்னர் அவரது அறைக்கு வந்த மற்ற மாணவிகள் அறையின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்ததால் கதவை திறக்க நீண்ட நேரம் சத்தம் போட்டும் வர்சா கதவை திறக்கவில்லை.

    இது குறித்து மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தனர். அவர்கள் சித்தோடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போலீசார் பார்த்த போது அறையில் வர்சா தூக்கில் பிணமாக தொங்கி கொண்டு இருந்தார். இதைபார்த்த மற்ற மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் மாணவி வர்சாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது பெற்றோருக்கும் தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து தங்களது மகளின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

    இது தொடர்பாக மாணவியின் தாய் சித்ரா சித்தோடு போலீசில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    கல்லூரி விடுதியில் தங்கியிருந்த எனது மகள் வர்சாவின் காதில் கடந்த 5-ந் தேதி வண்டு புகுந்து விட்டது. இதையடுத்து தனக்கு காது வலி அதிகமாக இருப்பதாக சொன்னார். இதையடுத்து நானும் எனது கணவரும் வந்து வர்சாவை வீட்டிற்கு அழைத்து சென்றோம்.

    பின்னர் காது வலி சரியானதால் கடந்த 12-ந்தேதி மீண்டும் கல்லூரியில் விட்டு சென்றோம். தினமும் போனிலும் பேசிவந்தோம். இந்த நிலையில் நேற்று மதியம் எங்களுக்கு போன் செய்த வர்சா காது வலியினால் தன்னால் இன்று சரியாக தேர்வு எழுத முடியவில்லை என்று தெரிவித்தார்.

    இந்த நிலையில் இரவு 9 மணியளவில் கல்லூரி முதல்வர் போன் செய்து வர்சா தூக்குப்போட்டு இறந்து விட்டதாக தெரிவித்தார். இதையடுத்து நாங்கள் வந்து மகளின் உடலை பார்த்தோம்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    இது குறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சந்தோஷ் கடைக்கு செல்வதற்காக சைக்கிளில் சென்று கொண்டிருந்தான்.
    • குமராபுரி பகுதியில் சென்று கொண்டிருந்த போது ஒரு தனியார் ஆம்புலன்ஸ் வேன் எதிர்பாராத விதமாக சைக்கிள் மீது மோதியது.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே முருங்கத்தொழுவு ரோடு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி செர்லின். இவர்களுக்கு சுபாஷ் (15), கவிதன் (13), சந்தோஷ் (12) ஆகிய 3 மகன்கள் உள்ளனர்.

    செர்லினுக்கும் அவரது கணவர் சுரேசுக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். இதையடுத்து செர்லின் தனியாக வசித்து வருகிறார்.

    இவர்களின் மூத்த மகன் சுபாஷ் மற்றும் கடைசி மகன் சந்தோஷ் இருவரும் செர்லினுடன் வசித்து வருகின்றனர். சந்தோஷ் சென்னிமலையில் உள்ள ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான்.

    இந்த நிலையில் செர்லின். ஓட்டல் கடை வைப்பதற்கான வேலைகளில் ஈடுபட்டு கொண்டு இருந்தார். இதனால் சந்தோஷ் பள்ளிக்கு செல்லாமல் அவருக்கு உதவியாக இருந்தார்.

    இதையடுத்து சந்தோஷ் கடைக்கு செல்வதற்காக சைக்கிளில் சென்று கொண்டிருந்தான். அப்போது சென்னிமலை-வெள்ளோடு ரோட்டில் குமராபுரி பகுதியில் சந்தோஷ் சென்று கொண்டிருந்த போது ஒரு தனியார் ஆம்புலன்ஸ் வேன் எதிர்பாராத விதமாக சந்தோஷ் சைக்கிள் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட சந்தோஷ் படுகாயம் அடை ந்தார். உடனடியாக அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஆம்பு லன்ஸ் மூலம் பெருந்துறை ஐ.ஆர்.டி.டி மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே சந்தோஷ் பரிதாபமாக இறந்தான்.

    ×