தீக்குளித்து மூதாட்டி தற்கொலை

சிவகாமி வீட்டில் யாரும் இல்லாத போது அவரது உடலில் கடலெண்ணை ஊற்றி தீ வைத்து கொண்டார்.அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து அவரை மீட்டு கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தீக்குளித்து மூதாட்டி தற்கொலை
Published on

கோபி:

கோபிசெட்டிபாளையம் பி.ஆர்.ஆர். நகரை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவரது மனைவி சிவகாமி (74). இவர் உடல் நிைல சரியில்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.

இதனால் அவர் வேதனை அடந்து மனம் உடைந்து வந்தார். இந்த நிலையில் சிவகாமி வீட்டில் யாரும் இல்லாத போது அவரது உடலில் கடலெண்ணை ஊற்றி தீ வைத்து கொண்டார்.

இதில் அவர் அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து அவரை மீட்டு கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேல் சிகிச்சைக்காக கோபி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சிவகாமி இறந்தார்.

இது குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com