என் மலர்
நீங்கள் தேடியது "தமிழ் மண்ணில்"
- தமிழகத்தில் மின் கட்டண உயர்வை திரும்ப பெற கோரி கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையத்தில் ஈரோடு மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
- இதற்கு முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
கோபி:
தமிழகத்தில் மின் கட்டண உயர்வை திரும்ப பெற கோரி கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையத்தில் ஈரோடு மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதற்கு முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
அப்பொழுது அவர் பேசியதாவது:
சுட்டெரிக்கும் வெயிலிலும் கூட்டம் கூடி இருக்கிறது. இதன் மூலம் அ.தி.மு.க.வை யாராலும் அசைக்க முடியாது.விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு, வீட்டு வரி, குடிநீர் வரி ஆகியவை உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏழை எளிய மக்கள் மிகவும் பாதிக்கப்ப ட்டு உள்ளன.
இதை இந்த அரசு உடனடியாக வாபஸ் பெறவேண்டும்.அ.தி.மு.க. ஒரு வரலாறு படைத்த இயக்கமாகும். அதிமுகவை 1972-ல் எம்ஜி.ஆர் தொடக்கி நிரந்தர முதல்-அமைச்சராக இருந்தார். தற்பொழுது இந்த அரசு காலையில் ஒரு லட்சத்து 47 ஆயிரத்து மாணவர்களுக்கு மட்டுமே சிற்றுண்டி வழங்குகிறது.
ஆனால் அன்று சத்துணவு படைத்து சாதனையை படைத்தவர் எம்ஜிஆர். சொன்னதே செய்து காட்டியவர் ஜெயலலிதா. ஏழை, எளிய மக்களுக்கு இதயக்கனியாக எம்ஜி.ஆர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஜெயலலிதா முதல்-அமைச்சராக பதவியேற்ற பிறகு ஏழைகளுக்காக ஆட்சி நடத்தினார்.
பிறந்த குழந்தைகளுக்கு 14 விதமான பொருட்களை கொடுத்தார். இலவச சைக்கிள், மடிக்கணினி ஆகியவற்றை வழங்கினார். பொதுமக்கள் நாங்கள் தற்போது ஏமாந்து விட்டோம் என புலம்பி வருகிறார்கள். தேர்தல் வரட்டும் நாங்கள் பார்த்து கொள்கிறோம் எனவும் பொது மக்கள்கூறி வருகிறார்கள்.
அ.தி.மு.க.வை தமிழ் மண்ணில் யாராலும் அசைக்க முடியாது. வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் 40 இடங்களையும் அ.தி.மு.க பிடிக்கும். மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அரசு மின் கட்டண உயர்வு மற்றும் வரி உயர்வுகளை வாபஸ் பெற வேண்டும்.
அண்ணா, எம்ஜி.ஆர், ஜெயலலிதா, வழியில் எடப்பாடி பழனிசாமி ஆண்ட காலமும் பொற்கால மாகும். அ.தி.மு.க எதையும் சந்திக்க தயாராக உள்ளது. எத்தனை வழக்கை போட்டாலும் சந்திக்க தயாராக உள்ளோம்.
தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சியை பிடிக்கும். நாம் யாரோடு கூட்டணி சேருகிறோமோ அக்கூட்ணி தான் வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.






