என் மலர்
ஈரோடு
- பிருந்தா தாய் வீட்டில் இருந்து மீண்டும் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
- வீட்டில் அறையில் உள்ள பீரோ கதவு திறக்கப்பட்டு அதில் இருந்த 6 பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள் திருட்டுப் போய் இருப்பது தெரிய வந்தது.
ஈரோடு:
ஈரோடு முனிசிபல் காலனி அடுத்த இடையன்காட்டு வலசு பகுதியை சேர்ந்தவர் மதன்குமார் (31). இவர் அதே பகுதியில் சொந்தமாக தறிப்பட்டறை வைத்துள்ளார். இவரது மனைவி பிருந்தா. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் நேற்று மதன்குமார் தனது தாயின் சிகிச்சைக்காக தாயை அழைத்து கொண்டு பெங்களூர் சென்று விட்டார். பிருந்தா வீரப்பன்சத்திரத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
பின்னர் இரவு பிருந்தா தாய் வீட்டில் இருந்து மீண்டும் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பொருட்கள் சிதறி கிடந்தன. வீட்டில் அறையில் உள்ள பீரோ கதவு திறக்கப்பட்டு அதில் இருந்த 6 பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள் திருட்டுப் போய் இருப்பது தெரிய வந்தது.
வீட்டில் ஆள் இல்லாததை தெரிந்து கொண்ட மர்ம நபர்கள் நோட்டமிட்டு கைவரிசை காட்டி இருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து வீரப்பன் சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் கைரேகை நிபுண ர்களும் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்து சென்றனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருட்டு நடந்த வீட்டின் அருகே பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
- தண்ணீர் பந்தல் பகுதியில் உள்ள ஒரு கடையில் 129 புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி என்பவரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவு பேரில் மாவட்டம் முழுவதும் கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை, ஹான்ஸ், பான் மசாலா பொருட்கள் விற்கப்படுகிறதா? என போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த அதிரடி சோதனை யில் தடை செய்யப்பட்ட புகையிலை பொரு ட்களையும் போலீசார் பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில் வெள்ளோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீராமன் தலைமையிலான போலீசார் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடையில் விற்கப்படுகிறதா? என சோதனையிட்டனர்.
அப்போது வெள்ளோடு அடுத்த ஞானிபாளையம், தண்ணீர் பந்தல் பகுதியில் உள்ள ஒரு கடையில் சோதனை செய்தபோது அந்த கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான பான் மசாலா, ஹான்ஸ் பாக்கெட்டுகள் என மொத்தம் 129 பாக்கெட்டு களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி (48) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் பங்களாபுதூர், சென்னி மலை, அம்மாபேட்டை, வீரப்பன்சத்திரம், தாலுகா, சூரம்பட்டி போன்ற பல்வேறு பகுதிகளில் போலீசார் மேற்கொண்ட அதிரடி சோதனையில் கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ப னைக்கு வைத்திருந்ததாக மாவட்டம் முழுவதும் 9 பேர் ஒரே நாளில் கைது செய்யப்பட்டனர்.
மேலும் அவர்களிடம் இருந்து புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- சரவணகுமார் கேப்பின் மீது ஏறி மரக்கிளையை சரி செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கால் தவறி சரவணகுமார் கீழே விழுந்தார்.
- இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் அடுத்த தாமரை பாளையம் பாரதிநகரை சேர்ந்தவர் சரவணகுமார் (45). லாரி டிரைவர்.
சம்பவத்தன்று சரவண குமார் சோளம் லோடு ஏற்றிக்கொண்டு லாரியை புதிய கூட்செட்டில் இருந்து பில் வாங்குவதற்காக சென்னிமலை ரோட்டில் உள்ள பழைய கூட் செட்டுக்கு லாரியை ஓட்டி சென்றார்.
அப்போது நுழை வாயிலில் இருந்த மரக்கிளை லாரியின் கேப்பின் மீது மோதி விட்டது. அதை சரி செய்ய சரவணகுமார் கேப்பின் மீது ஏறி மரக்கிளையை சரி செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கால் தவறி சரவணகுமார் கீழே விழுந்தார்.
இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி சரவணகுமார் இறந்தார்.
இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த 28 நாட்களுக்கு பிறகு இன்று முதல் கொடிவேரி தடுப்பணையில் பொதுமக்கள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
- சுற்றுலா பயணிகள் வழி முறைகளை கடை பிடித்து பாதுகாப்புடன் தடுப்பணை யில் குளிக்க வேண்டும்
கோபி:
ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப் பணைக்கு ஈரோடு மாவட்ட மக்கள் மட்டுமின்றி தமிழ கத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்ப த்துடன் வருவார்கள். அவர்கள் தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்வார்கள்.
இந்த நிலையில் பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் அணையில் இருந்து ஆற்றில் அதிகமாக தண்ணீர் திறந்து விட ப்பட்டது. இதனால் கொடி வேரி தடுப்பணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து சென்றது. மேலும் பொது மக்கள் குளிக்கும் இடங்க ளிலும் தண்ணீர் அதிகளவு சென்றது.
இதையொட்டி கொடி வேரி தடுப்பணையில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் அணைக்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்து வந்தனர்.
இந்த நிலையில் பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்தது. ஆற்றிலும் குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் கொடி வேரி தடுப்பணைக்கு நீர்வரத்து குறைந்தது.
இதையொட்டி கடந்த 28 நாட்களுக்கு பிறகு இன்று முதல் கொடிவேரி தடுப்பணையில் பொதுமக்கள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து பொதுப் பணித்துறை அதிகாரிகள் கூறும் போது, கொடிவேரி தடுப்பணையில் தண்ணீர் குறைந்து உள்ளதால் இன்று முதல் பொது மக்கள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
எனவே சுற்றுலா பயணிகள் வழி முறைகளை கடை பிடித்து பாதுகாப்புடன் தடுப்பணை யில் குளிக்க வேண்டும் என்றனர்.
இதையொட்டி இன்று விடுமுறை தினம் என்பதால் காலை முதலே பொதுமக்கள் பலர் குடும்பத்துடன் வந்து கொடிவேரி தடுப்பணைக்கு வந்து பார்த்து ரசித்தனர்.
மேலும் பலர் குளித்து மகிழ்ந்தனர். தொடர்ந்து பொதுமக்கள் அங்கு விற்பனை செய்யப்பட்ட மீன்களை ருசித்து விட்டு சென்றனர்.
- கோபிசெட்டிபாளையம் போலீஸ் நிலையத்தில் அனைத்து கட்சி நிர்வாகிகள் மற்றும் அனைத்து அமைப்புகள் சேர்ந்த நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
- கூட்டத்தில் சாலை தடுப்புச் சுவர், போலீஸ் தடுப்புக்களில் கொடிகள் கட்டவோ போஸ்டர்கள் ஒட்டவோ கூடாது என அறிவுறுத்தப்பட்டது.
கோபி:
கோபிசெட்டிபாளையம் போலீஸ் நிலையத்தில் அனைத்து கட்சி நிர்வாகிகள் மற்றும் அனைத்து அமைப்புகள் சேர்ந்த நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கோபி துணை போலீஸ் சூப்பிரண்டு சியாமளாதேவி தலைமையில் நடைபெற்றது.
இதில் கோபிசெட்டிபாளையம் டவுன் பகுதியில் அரசியல் கட்சிகள் மற்றும் பிற அமைப்புகள் சார்பில் பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், நடத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்ட இடங்கள் மற்றும் கட்சி கொடிகள், பேனர்கள், போஸ்டர்கள் ஒட்டுவது, தொடர்பான அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
குறிப்பாக சாலை தடுப்புச் சுவர், போலீஸ் தடுப்புக்களில் கொடிகள் கட்டவோ போஸ்டர்கள் ஒட்டவோ கூடாது என அறிவுறுத்தப்பட்டது. இதில் இன்ஸ்பெக்டர் சண்முகவேலு சப்-இன்ஸ்பெக்டர்கள் வசந்தகுமார், விஜயன் மற்றும் போலீசார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் வகையிலும் நாளை சிறப்பு முகாம் ஈரோடு மாவட்டத்தில் 222 வாக்குசாவடி மையங்களில் நடைபெற உள்ளது.
- இந்த தகவலை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியி ட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
ஈரோடு:
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி ஈரோடு மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலை தூய்மையாக்கும் வகையில் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் பணி கடந்த மாதம் 1-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
இப்பணிகளை விரைவாக முடிக்கவும், பொதுமக்கள் எளிமையாக ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் வகையிலும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படி சிறப்பு முகாம் ஈரோடு மாவட்டத்தில் 222 வாக்குசாவடி மையங்களில் நடைபெற உள்ளது.
எனவே சிறப்பு முகாமில் பொது மக்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு அவரவர் வாக்குசாவடியில் உள்ள வாக்குசாவடி நிலை அலுவலர்களிடம் 6பி படிவத்தினை பூர்த்தி செய்து தருவதன் மூலம் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்து ஈரோடு மாவட்டத்தினை முன்னோடி மாவட்டமாக திகழ்வதற்கு அனைத்து வாக்காளர்களும் ஒத்துழைக்க வேண்டும்.
இந்த தகவலை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியி ட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
- பொற்கை பாண்டியன் தெரு அருகே சிலர் வட்டமாக அமர்ந்து பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர்.
- இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து 8 பேரையும் கைது செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
மரப்பாலம், பொற்கை பாண்டியன் தெரு அருகே சிலர் வட்டமாக அமர்ந்து பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். அந்த கும்பலை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தியது.
விசாரணையில் அவர்கள் பழனிச்சாமி (54), சாகுல் ஹமீது (54), ஆனந்தகுமார் (62), மற்ெறாரு சாகுல் ஹமீது (45), பாபு (59), மாரியப்பன் (42), மைதீன் (44), முஸ்தபா (45) ஆகியோர் என்பதும், பணம் வைத்து சூதாடி கொண்டிருந்ததும் தெரிய வந்தது.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து 8 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து சீட்டுக்கட்டும், ரூ. 4,200 பணமும் பறிமுதல் செய்தனர்.
- நீர்ப்பிடி ப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக மழைப்பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கியுள்ளது.
- இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 3,100 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
ஈரோடு:
பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் நீர்மட்டம் கடந்த மாதம் 5-ந் தேதி 102 அடியை எட்டியது.
அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் நீர் அப்படியே பவானி ஆற்றுக்கு திருப்பி விடப்பட்டது. பின்னர் மழைப்பொழிவு இல்லாத போது நீர் வரத்து குறைவதும், மழை பொழிவின்போது நீர்வரத்து அதிகரிப்பதும் என மாறி மாறி வந்து கொண்டு இருக்கிறது.
இந்நிலையில் நீர்ப்பிடி ப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக மழைப்பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கியுள்ளது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 3,100 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்காகவும், குடிநீருக்காகவும் 3 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
- தற்கொலை செய்துகொள்ள திட்டமிட்டே இந்துமதி ஹீலியம் சிலிண்டரை கொண்டு வந்தது தெரியவந்தது.
- இந்துமதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கோபி:
ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் அருகே உள்ள பொலவகாளி பாளையம் பகுதியை சேர்ந்தவர் திருவேங்கடசாமி. விவசாயி. இவரது மகள் இந்துமதி (25), என்ஜினீயரிங் பட்டதாரி.
இவருக்கும் நல்ல கவுண்டம்பாளையம் என்ற பகுதியை சேர்ந்த என்ஜினீரியங் பட்டதாரி விஷ்ணுசாரதி என்பவருக்கும் கடந்த 100 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
பின்னர் விஷ்ணுசாரதியும், இந்துமதியும் சென்னைக்கு சென்று அங்கு ஒரு ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில் இந்துமதியின் பாட்டிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.
இதையடுத்து இந்துமதி தனது கணவர் விஷ்ணுசாரதியுடன் பாட்டியை பார்ப்பதற்காக பொலவ காளிபாளையத்தில் உள்ள தனது தந்தை வீட்டுக்கு வந்தார்.
நேற்று மதியம் வீட்டில் இருந்த இந்துமதி தூங்குவதற்காக தனது வீட்டில் உள்ள ஒரு அறைக்கு சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் அறையை விட்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் இந்துமதியை எழுப்பினர்.
ஆனால் உள்ளே இருந்து எந்த பதிலும் வரவில்லை. இதையடுத்து கதவை திறக்க முயன்றபோது உள் பக்கமாக தாழிடப்பட்டு இருந்தது.
இதையடுத்த கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அப்போது இந்துமதி கொடூரமான முறையில் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
அவர் தனது முகத்தில் பிளாஸ்டிக் கவரை சுற்றிக்கொண்டு டேப் ஒட்டியுள்ளார். மேலும் பலூனுக்கு அடிக்கும் ஹீலியம் சிலிண்டரில் இருந்து டியூப் மூலம் வாயிக்குள் காற்றை செலுத்தி மூச்சு திணறல் ஏற்பட்டு கொடூரமான முறையில் தற்கொலை செய்துகொண்டு பிணமாக கிடப்பது தெரியவந்துது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் இதுகுறித்து கோபி செட்டிபாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு கோபி செட்டிபாளையம் டி.எஸ்.பி. சியாமளாதேவி, இன்ஸ்பெக்டர் சண்முகவேல், சப்-இன்ஸ்பெக்டர் வசந்தகுமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது தற்கொலை செய்துகொள்ள திட்டமிட்டே இந்துமதி ஹீலியம் சிலிண்டரை கொண்டு வந்தது தெரியவந்தது. மேலும் அவர் தற்கொலைக்கான காரணம் என்ன என்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.
பின்னர் இந்துமதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருமணமாகி நேற்றுடன் 100 நாட்கள் ஆன நிலையில் இந்துமதி தற்கொலை செய்துகொண்டதால் இதுகுறித்து கோபிசெட்டிபாளையம் ஆர்.டி.ஓ. திவ்ய பிரியதர்ஷினியும் இன்று விசாரணை நடத்துகிறார். அதன் அடிப்படையிலேயே அவரது தற்கொலைக்கான காரணம் தெரியவரும்.
திருமணமான 100-வது நாளில் ஐ.டி. கம்பெனி பெண் ஊழியர் கொடூரமான முறையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- தற்கொலை செய்த மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
- மாணவி வர்சா தற்கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.
சித்தோடு:
திருச்சி தீரன் நகரை சேர்ந்தவர் ரமேஷ். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். இவர்களது மூத்த மகள் வர்சா (22).
இவர் ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள சாலை போக்குவரத்து பொறியியல் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கல்லூரி விடுதியில் தங்கி இருந்த மாணவி வர்சா தற்கொலை செய்துகொண்டார்.
இதையடுத்து மாணவியின் தாய் சித்ரா சித்தோடு போலீசில், தனது மகள் காதில் வண்டு புகுந்து விட்டதால் வலி ஏற்பட்டு தன்னால் சரியாக தேர்வு எழுத முடியவில்லை என்று தன்னிடம் போனில் தெரிவித்ததாகவும் கூறினார்.
இந்த நிலையில் எனது மகள் தற்கொலை செய்துகொண்டதாக கல்லூரி முதல்வர் தகவல் தெரிவித்தார் என்றும் தங்களது மகள் சாவில் எந்த சந்தேகமும் இல்லை என்றும் கூறியிருந்தார். அதன்அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
பின்னர் தற்கொலை செய்த மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிலையில் மாணவி வர்சா தற்கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார். இதையடுத்து கோவை சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. சிவக்குமார் தலைமையில் ஈரோடு சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் சங்கீதா மற்றும் போலீசார் விசாரணையை தொடங்கினர்.
அவர்கள் நேற்று கல்லூரிக்கு சென்று மாணவி தற்கொலை செய்துகொண்ட அறையில் சோதனை செய்தனர். மேலும் மாணவியின் லேப்டாப் மற்றும் செல்போன்களை கைப்பற்றினர்.
இன்று 2-வது நாளாகவும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை தொடங்கினர். அவர்கள் மாணவி வர்சாவின் தோழிகள் மற்றும் கல்லூரி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தினர்.
மேலும் பறிமுதல் செய்யப்பட்ட லேப்டாப், செல்போனையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
- தேவதர்ஷினி கரூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
- இன்று அதிகாலை இவர் தனது வீட்டில் சமையல் செய்ய தேவையான ஏற்பாடுகளை செய்து கொண்டு இருந்தார்.
கொடுமுடி:
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள கொந்தாளம் மண் திட்டு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு தேவதர்ஷினி (18) என்ற மகளும், சரவணன் என்ற ஒரு மகனும் உள்ளார்.
தேவதர்ஷினி கரூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இன்று அதிகாலை இவர் தனது வீட்டில் சமையல் செய்ய தேவையான ஏற்பாடுகளை செய்து கொண்டு இருந்தார்.
பின்னர் அருகில் உள்ள ஒரு தோட்டத்துக்கு சென்றவர் நீண்ட நேரமாகியும் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் அருகில் தேடிப்பார்த்தனர்.
அப்போது மாணவியின் வீட்டில் இருந்து சுமார் 500 மீட்டர் தூரத்தில் இருந்த ஒரு தோட்டத்து கிணற்றின் கரையில் மாணவி தேவதர்ஷினியின் செருப்பு கிடந்தது. இதையடுத்து கிணற்றை எட்டிபார்த்த போது மாணவி கிணற்றில் பிணமாக கிடப்பது தெரியவந்தது.
இதையடுத்து கொடுமுடி போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து மாணவியின் உடலை மீட்டனர். போலீசாரின் விசாரணையில் மாணவி தேவதர்ஷினி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பஸ் கடந்த வாரம் மணியாச்சி பள்ளம் அருகே விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
- இந்த நிலையில் அந்த பஸ் மீண்டும் விபத்தில் சிக்காமால் இருக்க வேண்டி பஸ் டிரைவர் அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் முன் பகுதியில் பஸ்சை நிறுத்தி பூஜைகள் செய்தார்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதி உள்ளது. பர்கூரில் இருந்து மேற்கு மலை பகுதியான மணி யாச்சி கொங்காடை, செங்குளம், சின்ன செங்குளம், ஓசூர், ஒந்தனை உள்ளிட்ட பகுதி களுக்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது.
இந்த பஸ் கடந்த வாரம் மணியாச்சி பள்ளம் அருகே விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இதனை அடுத்து அந்த பஸ் பொக்லைன் எந்திரம் மூலம் மீட்கப்பட்டு மீண்டும் பஸ் இயக்கப்பட்டது.
இந்த நிலையில் அந்த பஸ் மீண்டும் விபத்தில் சிக்காமால் இருக்க வேண்டி பஸ் டிரைவர் அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் முன் பகுதியில் பஸ்சை நிறுத்தி பூஜைகள் செய்தார்.
மேலும் அந்தியூர் அருகே உள்ள குருநாதசாமி கோவிலிலும் பஸ்சை நிறுத்தி பூஜைகள் போடப்பட்டது. இதன் பிறகு பஸ் பயணிகளை ஏற்றி கொண்டு மலைப் பகுதிக்கு சென்றது.






