search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐடி ஊழியர் தற்கொலை"

    ஐ.டி. ஊழியர் வீட்டில் இருந்து 3.50 லட்சம் மதிப்புள்ள கடன் பத்திரம் ஒன்று சிக்கியுள்ளதாக தாம்பரம் போலீஸ் கமிஷனர் ரவி கூறினார்.
    தாம்பரம் போலீஸ் கமிஷனர் ரவி இன்று பொழிச்சலுருக்கு சென்றார். அங்கு மனைவி, குழந்தைகளை கொன்று தற்கொலை செய்த ஐ.டி. ஊழியர் பிரகாஷ் வீட்டுக்கு சென்று பிணமாக கிடந்தவர்களை பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஐ.டி. ஊழியர் பிரகாஷ் பேட்டரியில் இயங்கும் ரம்பத்தால் மனைவி மற்றும் குழந்தைகளின் கழுத்தை அறுத்து கொன்று தற்கொலை செய்துள்ளார். தற்கொலை செய்த பிரகாஷ் 2 கடிதம் எழுதி ஒன்றை சுவற்றில் ஒட்டி வைத்துள்ளார். மற்றொன்றை ஒரு நோட்டுக்குள் வைத்துள்ளார். அந்த கடிதத்தில் யாருடைய வற்புறுத்தலின் பேரிலும் இந்த முடிவு எடுக்கப்படவில்லை என்று ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.

    இந்த கொலை தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறோம். முதலில் குழந்தைகளை கொன்று விட்டு, பின்னர் மனைவியை கொலை செய்துள்ளார். அதன் பிறகு தனது வலது கையால் ரம்பத்தை பிடித்து தனது கழுத்தை அறுத்திருப்பது அங்கு பார்த்தபோது தெரிய வந்தது. அது பேட்டரியில் இயங்கும் ரம்பம் என்பதால் பிரகாஷ் இறந்த பிறகும் அந்த ரம்பம் இயங்கிக் கொண்டு இருந்தது.

    அந்த ரம்பத்தை கடந்த 19-ந்தேதி அவர் ஆன்லைனில் வாங்கியுள்ளார். எனவே அதற்கு முன்பு அவரது செல்போனில் வந்த அழைப்புகளை வைத்து விசாரணை நடத்தி வருகிறோம். கடன் தொல்லையா? வேறு ஏதாவது பிரச்சினையா? அல்லது யாராவது அவர்களை தற்கொலைக்கு தூண்டி மிரட்டினார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகிறோம்.

    இது தற்கொலை என்றாலும் கொலை என்ற கோணத்தில் தான் எங்கள் விசாரணையை தொடங்கியுள்ளோம். அப்போது தான் பல உண்மையான தகவல்கள் கிடைக்கும். அந்த வீட்டில் ரத்தம் வழிந்தோடிய நிலையில் பிரகாசின் கால்தடம் பதிவாகியுள்ளது. கதவும் திறந்தே கிடந்தது. இரவு 11 மணிக்கு மேல் இந்த சம்பவம் நடந்திருப்பதாக தெரிகிறது. அவரது வீட்டில் இருந்து 3.50 லட்சம் மதிப்புள்ள கடன் பத்திரம் ஒன்றும் சிக்கியுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×