என் மலர்tooltip icon

    ஈரோடு

    • மாவட்டத்தில் 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
    • தடுப்பூசி செலுத்தும் பணியில் மாவட்டம் முழுவதும் 3,196 பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரோடு:

    தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் தமிழகத்தில் 4 -ம் அலையை தடுக்கும் வகையில் இன்று மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி இன்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலைய ங்கள், நகர்ப்புற சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிகள் உள்பட 1,597 மையங்களில் காலை 7 மணிக்கு தடுப்பூசி முகாம் தொடங்கியது.

    12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் மற்றும் 2-ம் தவணை தடுப்பூசிகள் செலுத்த ப்பட்டன. இதேபோல் 18 வயதுக்கு மேற்பட்ட 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் கடந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்பட்டது.

    இன்று மட்டும் மாவட்டத்தில் 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணியில் மாவட்டம் முழுவதும் 3,196 பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    பொதுமக்கள் சிரமம் இன்றி தடுப்பூசி செலுத்தி கொள்ள பொதுமக்கள் அதிக கூடும் இடங்களான ஈரோடு பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டிரு ந்தன. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டு கொண்டனர்.

    குறிப்பாக தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட அனை வருக்கும் பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்பட்டு வருகிறது. இதனால் இன்று பூஸ்டர் தடுப்பூசியை ஏராள மானோர் ஆர்வத்துடன் போட்டுக்கொண்டனர்.

    இந்த மாதத்துடன் இலவ சமாக போடப்படும் பூஸ்டர் தடுப்பூசி நிறைவடைகிறது. எனவே இதுவரை பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் இந்த சிறப்பு முகாமை பயன்ப் படுத்தி கொள்ள வேண்டும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

    • இன்று புரட்டாசி மாதம் தொடங்கியுள்ளதால் மீன் கடைகள் இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
    • இதனால் மீன்கள், இறைச்சிகள் விலை கடந்த வாரத்தை காட்டிலும் இந்த வாரம் குறைந்து உள்ளது.

    ஈரோடு:

    புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் என்பார்கள். இந்த மாதத்தில் அசைவ பிரியர்கள் அசைவம் சாப்பிடுவதை நிறுத்தி விடுவார்கள். இதனால் இறைச்சி கடைகள் வெறிச்சோடி காணப்படும்.

    இந்நிலையில் இன்று புரட்டாசி மாதம் பிறந்தது. இன்று வார விடுமுறை நாள் என்பதால் இறைச்சி கடைகள், மீன் கடைகளில் வழக்கமாக அதிகாலை முதலே மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். வியாபாரமும் விறுவிறுப்பாக நடைபெறும்.

    இன்று புரட்டாசி மாதம் தொடங்கியுள்ளதால் மீன் கடைகள் இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

    ஈரோடு ஸ்டோனி பிரிட்ஜ் பாலம் அருகே மீன் மார்க்கெட்டில் 30-க்கும் மேற்பட்ட மீன் கடைகள் உள்ளன. இன்று காலை முதலே மக்கள் கூட்டம் இன்றி மீன் மார்க்கெட் வெறிச்சோடி காணப்படுகிறது.

    ஒரு சிலர் மட்டுமே மீன்களை வாங்கி சென்றனர். இதேபோல் கோழி, ஆட்டு இறைச்சி கடைகளிலும் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் மீன்கள், இறைச்சிகள் விலை கடந்த வாரத்தை காட்டிலும் இந்த வாரம் குறைந்து உள்ளது.

    • சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உமாமகேஸ்வரி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • மேலும் இது குறித்து வரபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் அடுத்த பறைக்காட்டுத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் நாச்சிமுத்து. அவரது மனைவி உமாமகேஸ்வரி (36). இவர்களுக்கு திருமண மாகி 6 வருடங்கள் ஆகிறது. இன்னும் இவர்களுக்கு குழந்தை இல்லை. உமா மகேஸ்வரி இதற்காக மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

    கடந்த 4 நாட்களுக்கு முன்பு உமா மகேஸ்வரி மலையம்பாளையம் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்தார். அப்போது அவர் கர்ப்பம் இல்லை என முடிவு வந்தது. இதனால் உமா மகேஸ்வரி மனம் உடைந்த நிலையில் காணப்பட்டார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உமாமகேஸ்வரி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து வரப்பாளையம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உமாமகேஸ்வரி உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து வரபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ஈரோடு மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலை சீரமைக்கும் வகையில் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையு டன் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
    • இதன்படி இன்று ஈரோடு மாவட்டத்தில் 2,222 வாக்குசாவடி மையங்களில் சிறப்பு முகாம் தொடங்கியது.

    ஈரோடு:

    இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி ஈரோடு மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலை சீரமைக்கும் வகையில் ஆதார் எண்ணை வாக்கா ளர் அடையாள அட்டையு டன் இணைக்கும் பணி கடந்த மாதம் 1-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

    ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் பணியானது வாக்காளர் பட்டியலினை 100 சதவிகிதம் சரி செய் வதற்காக மேற்கொள்ளப்படுகிறது.

    இப்பணியினை விரைந்து முடிக்கவும் பொதுமக்கள் எளிமையாக ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் வகையிலும் சிறப்பு முகாம்கள் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    இதன்படி இன்று ஈரோடு மாவட்டத்தில் 2,222 வாக்குசாவடி மையங்களில் சிறப்பு முகாம் தொடங்கியது. ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் வாக்கு சாவடி நிலை அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார்.

    அவரிடம் பொதுமக்கள் சென்று 6-பி படிவத்தினை பெற்று அதனை பூர்த்தி செய்து கொடுத்து வருகின்றனர். காலை முதலே ஆர்வத்துடன் பொதுமக்கள் பங்கேற்று வருகின்றனர்.

    • ஈரோட்டில் கடந்த சில நாட்களாக கழுதை பால் வியாபாரம் அமோகமாக நடந்து வருகிறது.
    • ஈரோடு ராமமூர்த்தி நகர் கிருஷ்ணம்பாளையம் கருங்கல்பாளையம் பகுதிகளில் இன்று மக்கள் போட்டி போட்டு கழுதைப் பாலை வாங்கி சென்றனர்.

    ஈரோடு:

    ஈரோட்டில் சமீப காலமாக பருவநிலை மாற்றம் காரணமாக சளி, இருமல் தொல்லை அதிகரித்து வருகிறது.

    குறிப்பாக குழந்தைகளுக்கு அதிக அளவில் சளி, இருமல் இருந்து வருகிறது. மருத்துவமனைகளிலும் சளி, இருமல் பாதிப்புடன் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில் ஈரோட்டில் கடந்த சில நாட்களாக கழுதை பால் வியாபாரம் அமோகமாக நடந்து வருகிறது.

    நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தைச் சேர்ந்த முத்துசாமி (55) என்பவர் கழுதையை ஓட்டி வந்து கழுதை பால் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கழுதை பால் சளி, இருமல், மஞ்சள் காமாலைக்கு சிறந்த மருந்தாக இருப்பதால் மக்கள் போட்டி போட்டு வாங்கி செல்கின்றனர்.

    ஈரோடு ராமமூர்த்தி நகர் கிருஷ்ணம்பாளையம் கருங்கல்பாளையம் பகுதிகளில் இன்று மக்கள் போட்டி போட்டு கழுதைப் பாலை வாங்கி சென்றனர்.

    பொதுவாக கழுதை பால் மருத்துவம் குணம் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டதாக இருப்பதால் மக்களை விரும்பி கழுதை பாலை வாங்கி குழந்தைகளுக்கு கொடுக்கின்றனர்.

    இது குறித்து முத்துசாமி கூறும் போது,

    நான் 20 வருடத்திற்கும் மேலாக கழுதை பால் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறேன். பொதுவாக கழுதை பால் நோய் எதிர்ப்பு சக்தி மருத்துவ குணம் கொண்டதாக இருப்பதால் மக்கள் அதனை விரும்பி வாங்கி அருந்துகின்றனர்.

    ஒரு சின்ன சங்கு பால் ரூ.50 -க்கு விற்பனை செய்கிறேன். இதேப்போல் 50 மில்லி கழுதை பால் ரூ.250-க்கு விற்பனை செய்கிறேன். மக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

    • அனைத்து துறைகளின் திட்டங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு சென்றடையும் வகையில், பல்வேறு அரசு துறைகள் ஒருங்கிணைத்த மருத்துவ முகாம் 3 மாதங்களுக்கு நடைபெற உள்ளது.
    • மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை, ஆதார் அட்டை, புகைப்படம் 2 ஆகியவற்றுடன் கலந்து கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் உள்ள 104 கிராமங்களை ஒருங்கிணைத்து 57 இடங்களில் அனைத்து துறைகளின் திட்டங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு சென்றடையும் வகையில், பல்வேறு அரசு துறைகள் ஒருங்கிணைத்த மருத்துவ முகாம் 3 மாதங்களுக்கு நடைபெற உள்ளது.

    இதில் வருகின்ற 20-ந் தேதி மொடக்குறிச்சி தாலுக்காவில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க ப்பள்ளி, லக்காபுரம், அந்தியூர் தாலுகாவில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, சென்னம்பட்டி ஆகிய இடங்களிலும்,

    21-ந் தேதி மொடக்குறிச்சி தாலுகாவில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க ப்பள்ளி, கணபதிபாளையம், அந்தியூர் தாலுக்காவில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பட்லூர் ஆகிய இடங்களிலும், 22-ந் தேதி மொடக்குறிச்சி தாலுகாவில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க ப்பள்ளி, பொன்னம் பாளையம் அரசினர் மேல்நிலைப்பள்ளி, குருவரெட்டியூர் ஆகிய இடங்களில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    அகில இந்திய அளவில் மாற்றுத்திறனா ளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை கட்டாயம் என்பதினால் அதற்கான பதிவு, மருத்துவ சான்றுடன் தேசிய அடையாள அட்டை அனைத்து துறைகளின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளதால், மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை, ஆதார் அட்டை, புகைப்படம் 2 ஆகியவற்றுடன் கலந்து கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். 

    • சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சரிதாவை மீட்டு கடம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
    • அப்போது சரிதாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாலுக்கா, கடம்பூர் மலை கிராமம், குன்றி பகுதியை சேர்ந்தவர் சின்னப்பன். தொழிலாளி. இவரது மனைவி சரிதா (31). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சரிதாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது.

    இது குறித்து அறிந்த அவரது உறவினர்கள் உடனடியாக 108 ஆம்புலன்சை அழைத்தனர். 108 ஆம்புலன்ஸ் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சரிதாவை மீட்டு கடம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

    108 ஆம்புலன்ஸ் குன்றி கடம்பூர் பாதையில் அஞ்சனை பிரிவு அருகே வந்தபோது சரிதாவுக்கு பிரசவ வலி அதிகரிக்கவே, நிலைமையை புரிந்துகொண்ட 108 ஆம்புலன்ஸ் மருத்துவ ஊழியர்கள் வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு சரிதாவுக்கு பிரசவம் பார்த்தனர். அப்போது சரிதாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

    பின்னர், தாயும்-சேயும் கடம்பூர் அரசு ஆரம்ப நிலைய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தக்க நேரத்தில் துரிதமாக செயல்பட்டு பெண்ணுக்கு பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் குமரேசன் மற்றும் வாகன ஓட்டுனர் ராஜ்குமார் ஆகியோரை பொதுமக்கள் பாராட்டினார்.

    • அஞ்சல் துறை சார்பில் தேசிய அளவில் கடிதம் எழுதும் போட்டி நடக்கிறது.
    • இதில், ‘2047-ல் இந்தியா ஒரு பார்வை’ என்ற தலைப்பில் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் ஏதேனும் ஒரு மொழியில் கடிதம் எழுதலாம்.

    ஈரோடு, செப். 18-

    ஈரோடு முதுநிலை அஞ்சலக கண்காணி ப்பாளர் கோபாலன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    அஞ்சல் துறை சார்பில் தேசிய அளவில் கடிதம் எழுதும் போட்டி நடக்கிறது. இதில், '2047-ல் இந்தியா ஒரு பார்வை' என்ற தலைப்பில் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் ஏதேனும் ஒரு மொழியில் கடிதம் எழுதலாம்.

    போட்டிகள் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் என பங்கேற்கலாம். இரு பிரிவினரும் இன்லாண்ட் லெட்டர், என்வலப் லெட்டரில் ஏதாவது ஒன்றில் கடிதம் எழுதலாம். என்வல பிரிவில், 'ஏ4' அளவு வெள்ளை தாளில் 1,000 வார்த்தைகளுக்கு மிகாமலும், இன்லாண்ட் லெட்டர் பிரிவில் 500 வார்த்தைகளுக்கு மிகாமலும் கடிதம் எழுதி அனுப்ப வேண்டும்.

    கையால் எழுதப்பட்ட கடிதங்கள் மட்டும் ஏற்கப்படும். எழுதப்பட்ட கடிதத்தை 'முதன்மை அஞ்சல் துறை தலைவர், தமிழ்நாடு வட்டம், சென்னை –600 002' என்ற முகவரிக்கு, 'Dai Akhar' அஞ்சல் துறை கடித போட்டி–2022–23 என குறிப்பிட்டு அருகில் உள்ள தபால் அலுவலகங்களில் வழங்கலாம். கடிதங்களை அக்டோபர் 31-ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

    மாநில அளவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 பரிசாக தலா 25,000, 10,000, 5,000 ரூபாய், தேசிய அளவில் வெற்றி பெறும் கடிதங்களில் முதல் 3 பரிசாக 50,000, 25,000, 10,000 ரூபாய் வழங்கப்படும்.

    போட்டியாளர்கள் தங்கள் கடிதத்தில் 2022 ஜனவரி, 1-ன்படி, 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் அல்லது 18 வயதுக்கு மேற்உடையவர் என்ற சான்று இணைத்து அனுப்ப வேண்டும்.

    மாநில அளவில் பரிசு பெறும் 3 கடிதங்களின் விபரம் வரும் டிசம்பர் மாதம் 25-ந் தேதி அறிவிக்க ப்படும். பின், தேசிய அளவில் பரிசு பெறும் கடிதம் அறிவிக்கப்படும்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • சைபர் கிரைம் போலீசார் மோசடி கும்பலின் வங்கி கணக்கை முடக்கி வங்கி அதிகாரிகளுடன் பேசி ரூ.68 ஆயிரத்தை மீட்டு அந்த பெண்ணிடம் கொடுத்தனர்.
    • மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    இன்றைய நவீன உலகில் ஆன்லைன் மோசடி பல வகைகளில் நடைபெற்று வருகின்றன. செல்போனில் வரும் மெசேஜ் மற்றும் ஆன்லைனில் வரும் விளம்பரத்தை நம்பி பணத்தை பறிகொடுப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது.

    அதேபோல் ஈரோட்டில் ஒரு பெண் ஆன்லைன் மோசடி கும்பலிடம் கவர்ச்சிகரமான திட்டத்தை நம்பி பணத்தை இழந்து உள்ள சம்பவம் நடந்துள்ளது.

    ஈரோடு மாவட்டம் சின்னியம்பாளையம் பகுதியை சேர்ந்த 40 வயது பெண் ஒருவரின் செல்போன் எண்ணிற்கு சமீபத்தில் ஒரு மெசேஜ் வந்துள்ளது.

    அந்த மெசேஜை அவர் திறந்து பார்த்தபோது அதில் குறைந்த முதலீட்டில் நிறைய லாபம் பெறலாம் என கவர்ச்சிகரமான திட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு ஒரு செல்போன் எண்ணும் பதிவிடப்பட்டிருந்தது.

    இது உண்மை என நம்பி அந்த பெண் அந்த மெசேஜில் கொடுக்கப்பட்டிருந்த செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அதில் பேசிய நபர் நீங்கள் குறைந்த முதலீடு செய்தால் சில மாதங்களில் நிறைய லாபம் பெறலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

    அதன்படி அந்தப் பெண் ரூ.50 ஆயிரத்தை அந்த நபர் கூறிய வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்தார். பின்னர் 2-வது முறையாக ரூ.32 ஆயிரத்தை அனுப்பி உள்ளார். ஆனால் அவர்கள் கூறியபடி பணம் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர். ரூ 14 ஆயிரம் மட்டும் அந்த பெண்ணிற்கு அனுப்பி வைத்தனர். அதன் பிறகு மீதம் உள்ள ரூ. 68 ஆயிரத்தை அனுப்பவில்லை.

    இது குறித்து அந்த பெண் கேட்டபோது ஒவ்வொரு நாளும் ஏதாவது காரணம் சொல்லி காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த பெண் இது குறித்து நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தருமாறு ஈரோடு சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

    அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அந்த மோசடி கும்பல் பேசிய செல்போன் எண்ணை வைத்து விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது அந்த செல்போன் அழைப்பு பெங்களூரில் இருந்து வந்துள்ளது தெரியவந்தது. அந்த வங்கி கணக்கு ஆந்திராவில் உள்ள வங்கி கணக்கு என தெரிய வந்தது.

    இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் அந்த வங்கி கணக்கை முடக்கி வங்கி அதிகாரிகளுடன் பேசி ரூ.68 ஆயிரத்தை மீட்டு அந்த பெண்ணிடம் கொடுத்தனர். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சந்தோஷ் என்பவர் வீட்டில் புலியின் பற்கள், நகங்கள், எலும்புகள் மற்றும் எரும்பு திண்ணியின் ஓடுகள் பதுக்கி வைத்தி ருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
    • மேலும் மாவட்ட வன அலுவலர் மற்றும் துணை இயக்குநர் உத்தரவின் பேரில் கடம்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வீடுகளில் புலி பற்கள், எழும்புகள் பதுக்கி வைத்திருப்பதாக கடம்பூர் வனச்சரக அலுவலர் இந்துமதிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் வன அலுவலர்கள் சின்ன உள்ளேபாளையம் கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது சந்தோஷ் என்பவர் வீட்டில் புலியின் பற்கள், நகங்கள், எலும்புகள் மற்றும் எரும்பு திண்ணியின் ஓடுகள் பதுக்கி வைத்தி ருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

    மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அேத பகுதியை சேர்ந்த சந்தோஷ் (25), பத்ரிபடுகை கிராமத்தை சேர்ந்த மூர்த்தி (29), மாதேவன் (45), ராஜப்பன் (37) ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

    மேலும் மாவட்ட வன அலுவலர் மற்றும் துணை இயக்குநர் உத்தரவின் பேரில் கடம்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கே.என்.பாளையம் பகுதியை சேர்ந்த பெற்றோர் தனது 3 வயது குழந்தைக்கு வயிற்று போக்கு இருந்ததால் அரசு துணை சுகாதார நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.
    • ஆனால் துணை சுகாதார நிலையத்தில் அந்த குழந்தைக்கு மருத்துவம் பார்க்கவில்லை என்று கூறப்படுகிறது.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அடுத்த கே.என்.பாளையத்தில் அரசு துணை சுகாதார நிலையம் உள்ளது.

    இந்நிலையில் இன்று காலை 8 மணியளவில் கே.என்.பாளையம் பகுதியை சேர்ந்த பெற்றோர் தனது 3 வயது குழந்தைக்கு வயிற்று போக்கு இருந்ததால் கே.என்.பாளையம் அரசு துணை சுகாதார நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.

    ஆனால் துணை சுகாதார நிலையத்தில் அந்த குழந்தைக்கு மருத்துவம் பார்க்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் கே.என்.பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் அப்பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் துணை சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு போராட்ட த்தில் ஈடுபட முயன்றனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அரசு மருத்துவ அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் பங்களாப்புதூர் இன்ஸ்பெக்டர் உள்பட போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதோடு அரசு மருத்துவ உயரதிகாரிகளிடம் இது குறித்து தகவல் அளித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.

    • தமிழகத்தில் 4 -ம் ஆலையை தடுக்கும் வகையில் வரும் நாளை மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது.
    • ஈரோடு மாவட்டத்தில்1,597 மையங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

    ஈரோடு, செப். 17-

    தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் தமிழகத்தில் 4 -ம் ஆலையை தடுக்கும் வகையில் வரும் நாளை (ஞாயிற்று க்கிழமை) மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது.

    அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் , அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிகள் உள்பட 1,597 மையங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

    12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் மற்றும் 2-ம் தவணை தடுப்பூசிகள் செலுத்த ப்படுகிறது. இதேபோல் 18 வயதுக்கு மேற்பட்ட 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் கடந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி இலவ சமாக போடப்படுகிறது. மாவட்டத்தில் 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    தடுப்பூசி செலுத்தும் பணியில் மாவட்டம் முழுவதும் 3,196 பணியா ளர்கள் ஈடுப்படுகின்றனர். 70 வாகனங்கள் முகாமிற்கு பயன்படுத்தப்பட உள்ளது. பொதுமக்கள் சிரமம் இன்றி தடுப்பூசி செலுத்தி கொள்ள பொதுமக்கள் அதிக கூடும் இடங்களான ஈரோடு பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் தடுப்பூசி முகாம் அமைக்கப்படுகிறது.

    இந்த முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார். 

    ×